சித்தார்த்துக்காக மெனக்கெட்ட சந்தானம்! | கெட்டப்பை மாற்றி களமிறங்கினார் கடல் கெளதம்! | மலையாளத்தில் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி புதிய படம்! | நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்த ஸ்ருதிஹாசன்! | சித்தார்த்துக்காக கவுரவ வேடத்தில்நடிக்கிறார் சமந்தா? | புதிதாக பிறந்தேன் மனிஷா உருக்கம் | அஞ்சலியின் அதிரடி அமலா ஆவேசம் | நான் தான் நம்பர் ஒன்உற்சாகத்தில் தமன்னா | விஜய் ஜோடியாக நடிப்பேன்பூர்ணா சபதம் | போட்டி இருந்தால் தான்சாதிக்க முடியுமாம் |
வடிவேலுவின் காமெடி நாற்காலி நொடிந்த பிறகு புது நாற்காலி போட்டு அமர்ந்து கொண்டவர் சந்தானம். படத்துக்குப்படம் ஹீரோக்களை கலாய்த்தபடி கவுண்டமணி பாணியில் காமெடி செய்து வந்தார். இந்த நிலையில் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் சந்தானத்துடன் ஒட்டிக்கொண்டவர்தான் டாக்டர் சீனிவாசன் என்கிற பவர்ஸ்டார். ஒரு டம்மி பீஸை கூடவே வைத்துக்கொண்டால் இஷ்டத்துக்கு கலாய்க்கலாம் என்றுதான் அவரை கூட்டணியில் சேர்த்தார் சந்தானம். ஆனால் இப்போது நிலைமையே தலைகீழாகி விட்டது. சந்தானத்தை புக் பண்ண வருபவர்கள், கண்டிப்பாக பவர்ஸ்டாரும் வேண்டும் என்கிறார்களாம். இதனால் பவர்ஸ்டார் நடிக்க மறுத்தால் நம்மையும் கழட்டி விட்டு விடுவார்கள் போலிருக்கிறதே என்று விழிபிதுங்கிப்போய் இருக்கிறார் சந்தானம்.
இந்த நிலையில், புதிய படங்களுக்கு தன்னை புக் பண்ண வருபவர்களிடம் படத்துக்கு 50 லட்சம் என்று சம்பளத்தை பிக்ஸ் பண்ணி விட்டாராம் பவர்ஸ்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சந்தானம், நான் வளர்த்து விட்ட அவருக்கே 50 லட்சம் என்றால், 30 நாள் முதல் 35 நாடகள் வரை கால்சீட் வேண்டும் என்றால் எனக்கு 2 கோடி சம்பளம் தந்து விட வேண்டும் என்று தடாலடியாக கேட்டு வருகிறார். இப்படி இவர்களுக்கிடையே எழுந்துள்ள நீயா? நானா? போட்டியினால், இருவருக்குமிடையே சிக்கி நசுங்கிக்கொண்டிருக்கிறார்கள் படாதிபதிகள்.