இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்வாதி. அதன் பிறகு ஈசன் படத்தில் நடித்தார். சசிகுமார் கம்பெனியை விட்டு வெளியே வர மறுத்ததால் வேறு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் மலையாளம், தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கினார். தற்போது திடீரென்று தயாரிப்பாளராகி விட்டார். தெலுங்கில் தயாராகும் படத்தின் பெயர் சுவாமி ரா ரா. ஒருசில படங்களில் மட்டுமே நடித்துள்ள ஸ்வாதிக்கு ஒரு படம் தயாரிக்கும் அளவுக்கு பணம் எங்கே இருந்து வந்தது என்ற கேள்வி எழாமல் இருக்குமா?. ஒருபக்கம் சசிகுமார்தான் நிஜ தயாரிப்பாளர் என்கிறார்கள். அவர்தான் சுவாதியை பினாமியாக வைத்து தயாரிக்கிறார் என்கிறார்கள். டோலிவுட்டில் ஸ்வாதிக்கு ஒரு கோடீஸ்வர நண்பர் கிடைத்திருக்கிறார் அவர்தான் தயாரிப்பாளர் என்கிறார்கள். இதில் எது உண்மை, எது வதந்தி என்று தெரியவில்லை.