விஷால் மீது நடவடிக்கை இல்லை! - நடிகர் சங்கம் | மாமனாருக்கு பதில் மருமகனை இயக்குகிறார் கே.வி.ஆனந்த்!! | சூதாட்ட சர்ச்சை; நடிகைகள் பக்கம் திரும்பும் போலீஸ்; கலக்கத்தில் தமிழ் நடிகைகள் | தாய்லாந்தில் படமாகும் விஸ்வரூபம்-2!! | அரசியலில் கலக்க வருகிறார் ப்ரீத்தி ஜிந்தா! | கொஞ்சம் வயதாகி வருவதால் இரவு நேரங்களில் இசையமைப்பதில்லை-ஏ.ஆர்.ரஹ்மான் | கேன்ஸ் படவிழாக்குழுவினரை கவர்ந்த ஐஸ்வர்யா ராய் மகள்! | ஷாங்காய் விழாவில் கமலின் பேசும் படம்! | சித்தார்த்துடன் மீண்டும் இணைகிறார் சமந்தா! | மரியானின் திகில் அலை இன்னமும் மனசுக்குள்ள அடிச்சிக்கிட்டேயிருக்கு! -சொல்கிறார் தனுஷ் |

லட்டு திண்ண பவர் ஸ்டாருக்கு மீடியாக்கள் கொடுக்கும் முக்கியத்துவம் டாப் ஹீரோக்களை கடும் எரிச்சலுக்கு உள்ளாக்கி இருக்கிறதாம். சில தினங்களுக்கு முன்பு அடையாரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கூடி கும்மாளமடித்த ஹீரோக்கள் இதுகுறித்து காரசாரமாகவே பேசிக் கொண்டார்களாம். "நாமெல்லாம் கஷ்டப்பட்டு நடிச்சு படம் பண்ணினால் அது சொத்தை இது சொதப்பல்னு சொல்ற மீடியாக்கள், ஒரு கிரிமினல் நடிச்ச படத்தை தலைக்கு மேல வச்சு கொண்டாடுறாங்க. இதுக்கு ஒரு முடிவு கட்டணும்" என்று வீராவேசம் பேசியிருக்கிறார்கள். சந்தனமான காமெடி இனியும் பவருக்கு முக்கியத்துவம் கொடுத்தால் தங்கள் படத்திலிருந்து சந்தனத்தை கரைத்து விட வேண்டியதுதான் என்றும் பேசி முடிவு செய்திருக்கிறார்களாம். அதோடு பவர் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அதில் நாம் கலந்த கொள்ளக்கூடாது என்றும் அந்த ரகசிய கூட்டத்தில் ரகசிய தீர்மானம போட்டிருக்காங்களாம்.