Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

ஆன்மீக பழமான நயன்தாரா!

12 ஜன, 2013 - 10:29 IST
எழுத்தின் அளவு:

ஆன்மீகத்தில் முத்திப்போய் விட்டார் நயன்தாரா. முன்பெல்லாம் ஸ்பாட்டுக்கு வரும்போதே கலக்கலான உடையணிந்து பளிச்சிடுவார். ஆனால் இப்போதோ வயதான நடிகைகள் போன்று ஆடம்பரமில்லாத உடையணிந்தே வருகிறார். அதோடு எடுபிடி வேலைகள் செய்வதற்கு பலரை தன்னை சுற்றி வைத்துக்கொள்வதில்லை. பரமசாது நடிகைகள் போன்று பவ்யமாக காட்சி தருகிறார். யாராவது அருகில் சென்று பேசினால்கூட அதற்கு தடாலடியாக பதில் சொல்லாமல் சாந்தமாகவே பதிலளிக்கிறார்.

அதுமட்டுமின்றி, நான்வெஜ் உணவுகளில் புகுந்து விளையாடும் நயன்தாரா இப்போது கவிச்சி அயிட்டங்களே எனக்கு வேண்டாம் என்று தயிர்சாத நடிகையாகி விட்டார். இதனால் ஸ்பாட்டுக்கு வந்து விட்டால் நொறுக்குத்தீனிகளை நொங்கெடுக்கும் நயன்தாராவா இப்படி மாறி விட்டார் என்று அவரை நன்கறிந்த நபர்களே ஆச்சரியத்தில் நிற்கின்றனர். ஆனால் இவற்றையெல்லாம் விட நயன்தாராவிடம் குடியேறியிருக்கும் இன்னொரு மாற்றம்தான் இன்னும் பெரிய ஆச்சரியத்தை வரவைக்கிறது. அதாவது, இனிமேல் நான் எந்த ஆண்களையும் என்னை நெருங்க விடப்போவதில்லை. சினிமாவில் நெருங்குகிறேன் என்றால் அது என் தொழில். ஆனால் நிஜவாழ்க்கையில் யாருக்குமே இடம் கொடுக்கப்போவதில்லை என்று சொல்லும் நயன்தாரா, சினிமா பயணம் முற்று பெறும்போது முழுநேர ஆன்மீகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளப்போகிறாராம். அதனால் நிறைய ஆன்மீக புத்தகங்களை கரைத்து குடித்து வருபவர், தன்னருகே அமரும் சினிமா பெருசுகளிடம் தான் படித்த ஆன்மீக கதைகளை பாட்டி கதைகள் போல் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Aswin - Trichy  ( Posted via: Dinamalar Android App )
14 ஜன, 2013 - 00:10 Report Abuse
Aswin Yaru indha moonji palama?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in