ஷார்மியின் 12 வருடகலை சாதனை | "இந்தியில் நடிக்க நேரமில்லை | ஒரே படத்தில் மூன்று சரவெடி | சகுனம் பார்க்கும்வித்யா பாலன் | நான் கொஞ்சம் விவரமான பொண்ணுங்க...! | "நவ் யு சி மீ | "ஆசை ஆசை, அஜீத், விஜய் ஜோடியாக நடிக்க ஆசை | எனக்கு வீழ்ச்சி அல்ல, வளர்ச்சிதான்! - த்ரிஷா | இயக்குனராகிறார் மாஜி ஹீரோயின் ஸ்ரீப்ரியா! | நயன்தாராவும், டாப்சியும் ரொம்ப குளோஸ் |
கில்லி நடிகர் நடிக்கும் படத்துக்கு நீண்ட மூக்கு வில்லன் நடிகர்தான் முதலில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு அட்வான்சும் கொடுக்கப்பட்டிருந்ததாம். அந்த நடிகரின் மனைவி தயாரிப்பாளர் சங்கத்தில் கில்லி நடிகரின் தந்தைக்கு எதிர் அணியில் தீவிரமாக செயல்படுகிறவர். இதனால் ஆத்திரம் அடைந்த கில்லி நடிகரின் தந்தை விஜயமான இயக்குனருக்கு போன் போட்டு அந்த நடிகரை என் மகன் படத்திலிருந்து உடனே நீக்குங்கள். இல்லாவிட்டால் என் மகன் உங்கள் படத்தில் நடிக்க மாட்டேன் என்று சவுண்ட் விட பயந்து போன இயக்குனர் தந்தைகுலத்தை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டுவிட்டு. அடுத்த நிமிடமே வில்லன் நடிகருக்கு போன்போட்டு அவரிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டு விஷயத்தை கமுக்கமாக முடித்தாராம். அலட்டிக் கொள்ளாத வில்லன் நடிகர் "யாரை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள். ஆனால் வாங்கிய அட்வான்சை திருப்பித் தரமாட்டேன்" என்று சொல்லிவிட்டாராம். உடனே விருது பெற்ற அம்மா நடிகையின் பொன்னான கணவரை அந்த கேரக்டருக்கு ஒப்பந்தம் செய்து இப்போது அவர் நடித்துக் கொண்டிருக்கிறாராம். தயாரிப்பு சங்கத்து அரசியல் திரைக்கு வெளியே மட்டுமல்ல திரைக்கு உள்ளேயும் இருக்கிறதாம்.