தமன்னாவுக்கு எதிராக சதி செய்யும் இயக்குனர்கள்!
தமிழில் கேடி படத்தில் என்ட்ரி ஆனவர் தமன்னா. ஆனால் அந்த படத்துக்குப்பிறகு மீண்டும் ஆந்திராவுக்கே சென்று விட்டவர், கல்லூரி, வியாபாரி படங்களுக்குப்பிறகு மறுபிரவேசம் செய்தார். அந்த படங்கள் கொடுத்த வரவேற்பினால் அடுத்தடுத்து, விஜய், சூர்யா என்று முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாடினார். ஆனால் என்ன நேரமோ தனுசுடன் நடித்த வேங்கை அவரை தமிழ் சினிமாவிலிருந்தே வெளியேற்றி விட்டது. இருப்பினும் தனது இடைவிடாத முயற்சிக்குப்பிறகு இப்போது அஜீத்துடன் நடிக்கும் வாய்ப்பினை பெற்றிருக்கிறார்.
ஆனால் இந்த நேரத்தில் அவருக்கு அடுத்தடுத்து படங்கள் கிடைத்து விடாத வகையில் ஒரு கோஷ்டியினர் தமன்னாவுக்கு எதிராக சதி செய்து வருகிறார்களாம். அவர்கள் யார் என்று விசாரிக்கையில், தமன்னாவிடம் கதை சொல்லி விட்டு வருடக்கணக்கில் காத்திருந்து பாதிக்கப்பட்ட சில இயக்குனர்களாம். அவர்கள்தான், தமன்னாவை புக் பண்ண ஆசைப்படும் படாதிபதிகளிடம், தமன்னா டார்ச்சர் பண்ணக்கூடிய நடிகை. அதோடு சும்மா கிளாமருக்கு மட்டுமே யூஸ் பண்ணலாம். பெரிய அளவில் நடிப்பு வராது. அதனால் அவருக்குப்பதிலாக நயன்தாரா மாதிரி நடிக்கக்கூடிய நடிகைகள் நடிக்க வைக்கலாமே என்று அவர்களை திசை திருப்பி வருகிறார்களாம்.
இந்த விசயமறிந்து செம கடுப்பில் இருக்கிறாராம் தமன்னா. தன்னிடம் பேச்சுவார்த்தையில் இருக்கும் படாதிபதிகளை பிரைன்வாஷ் மேற்படி இயக்குனர்கள் திசை திருப்பி விடக்கூடாது என்பதற்காக, அவர்களை சந்தித்து தனக்கு எந்த மாதிரி கேரக்டராக இருந்தாலும் நடிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டி அவர்களை தன் பக்கம் இழுக்கும் வேலைகளில் தீவிரமடைந்திருக்கிறார்.