ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கில்லி நடிகரின் புதிய படத்துக்கு பெயர் வைக்க முடியாமல் ரொம்பவே திணறிக்கிட்டு இருக்காங்க. முதல்ல "லீடர்"னு பேர் வைக்கலாமுன்னு பார்த்தாங்க. ஆனா அதை ஆளுங்கட்சி பெரும்புள்ளி தன்னோட படத்துக்கு வச்சிட்டாரு. அவருகிட்ட கேட்க முடியாம விட்டுட்டாங்க. அடுத்ததா சூப்பர் நடிகரோட ஹிட் பட டைட்டிலான "கோல்டுசன்" பெயரை வைக்கலாமுன்னு அந்தப் படத்தை தயாரிச்ச வீரமான மாஜி மந்திரிய சந்திச்சு கேட்டாங்க. கணக்கு வழக்குல புலியான அந்த மாஜி "என் தலைப்பை வச்சு நீங்க ஏகப்பட்ட கோடி சம்பாதிக்கப் போறீங்க. எனக்கு ஒரு 2 கோடி கொடுத்திடுங்க"ன்னு கேட்டாராம். ஒரு தலைப்புக்கு 2 கோடியான்னு அலறி அடிச்சு திரும்பி வந்துட்டாங்களாம். இப்போ சூப்பர் நடிகர் மலையாள மம்முக்காவுடன் நடிச்ச "கேப்டன்" தலைப்பை வாங்க முயற்சி பண்றாங்க. ஆனால் அதன் உரிமையை தர வேண்டிய இயக்குனரோ கடலுக்குள்ள இருந்துக்கிட்டு வெளியே வரமாட்டேங்றாராம்.