சினிமாவில் இமேஜ் ரொம்ப முக்கியம்- மாஜி நடிகை ராதா | விஜய்யுடன் டூயட் பாடுவது கனவாகி விட்டது- அருந்ததி புலம்பல் | ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்காக ரத்தம் சிந்திய வழக்கு எண் ஸ்ரீ! | சிம்புவுக்காக கோவா செல்லும் படக்குழு! | 100 நாட்கள் ஓடிய கமல், சசிகுமார் படங்கள்! | விஸ்வரூபம் படம் தொடர்பாக போலி கடிதம் ; கமல் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ் | மதுரை கிராமத்து இளைஞனாகிறார் ஜில்லா விஜய்! | ஊதி பெருத்து விட்டார் பூனம் பாஜ்வா! | ஷாரூக்கான் தயாரிக்கும் இந்தி படத்தில் ப்ருதிவிராஜ்! | புற்று நோயிலிருந்து விடுபட்ட மனீஷாகொய்லாரா மீண்டும் நடிக்க வருகிறார்! |
ஊர் பெயரிலேய படம் எடுத்து பெரிய அரசரானவர் அந்த இயக்குனர். சூப்பர் டூப் ஹிட்டெல்லாம் கொடுத்தவர். திடீரென அவர் பாணி அடிதடி படம் போரடிக்க வாய்ப்புகள் குறைந்தது. வேறு பாணியில் படம் எடுக்கவும் அவருக்குத் தெரியவில்லை. இதனால் புதிய படம் வரவில்லை. இருந்தாலும் அவர் தன் பாணி மீது அதீத நம்பிக்கை வைத்து சின்னத்தளபதியை வைத்து சென்னை பக்கத்தில் உள்ள முருகனின் அறுபடை வீட்டு ஸ்தலத்தின் பெயரில் ஒரு படம் எடுத்தார். அந்தப் படத்தின் தாயாரிப்பாளர் பாதியில் விலகிக் கொள்ள பெரிய அரசுவே கந்து வட்டிக்கு கடன் வாங்கி படத்தை முடித்து வெளியிட்டார். எப்படியும் போட்ட பணம் வந்துவிடும் என்று நம்பினார். நம்பிக்கை வீண்போனது. படம் நாலு நாளைத் தாண்டவில்லை. கோடிக் கணக்கில் நஷ்டம். தற்போது இயக்குனர் கடனை அடைக்க முடியாமலும், புதிய பட வாய்ப்பு இல்லாமலும் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார். யாராவது வாய்ப்புக் கொடுத்து அவரது சம்பளத்தை முன்னதாகவே கொடுத்தால் கூட பாதி கடனைத்தான் அடைக்க முடியுமாம்.