Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » சினி வதந்தி »

கிண்டல் செய்த ஹீரோக்கள்! லட்சுமிராய் போட்ட சபதம்!!

Lakshmi rai new decision
தனக்கு ரகசிய திருமணம் நடந்து விட்டதாக அடிக்கடி பரவும் செய்திகளால் டென்சனான லட்சுமிராய், அதற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தேசிய விருது வாங்க வேண்டும் என்ற கனவெல்லாம் எனக்கு உள்ளது. அதனால் இப்போதைக்கு திருமணம் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று சற்று உணர்ச்சிவசப்பட்டு செய்தி வெளியிட்டார்.

ஆனால் இந்த செய்தியை கேள்விப்பட்ட சில ஹீரோக்களுக்கு அதிர்ச்சியாகி விட்டதாம். லட்சுமிராயுடன் இணைந்து நடித்த அவர்கள், உன்னுடைய நடிப்பு திறமை என்னாங்கிறது உனக்கே தெரியும். சாதாரணமாக நாலு வார்த்தை சேர்த்து டயலாக் பேச சொன்னாலே நாலு டேக் வாங்குவே. அப்படியிருககும்போது தேசிய விருது மாதிரி பெரிய ஆசையெல்லாம் படலாமா? என்று கலாய்த்து விட்டார்களாம்.

அவர்கள் நட்பு அடிப்படையில் கிண்டலாக அப்படி கேட்டாலும், அது சுருக்கென்று லட்சுமிராயின் நெஞ்சில் தைத்து விட்டதாம். என்னை நடிக்கத் தெரியாத நடிகை என்று இப்படி சொல்பவர்களுக்கு முன்பு சிறப்பாக நடித்து விருது வாங்காமல் நான் ஓயமாட்டேன் என்று சபதம் போட்டுக்கொண்டு வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறார். அதனால் இதுவரை தொடை தட்டும் கிளாமர் வேடங்களுக்கே முதலிடம் கொடுத்து வந்த லட்சுமிராய், இனிமேற்கொண்டு திறமை காட்டும் வலுவான கதாபாத்திரங்களாக தேடிப்பிடித்து நடிக்கப்போவதாகவும் கூறி வருகிறார்.

Tags »
Lakshmi rai, லட்சிமி ராய்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (1)

ram - chennai  ( Posted via: Dinamalar Android App )
2012-12-30 09:55:06 Report Abuse
ram pathini saabam.hmmmm.....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

தொடர்புடைய படங்கள்

 
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in