Advertisement

சிறப்புச்செய்திகள்

பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |

சினிமா முதல் பக்கம் » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

கேமராமேனுக்கு உழைப்பு முக்கியம்: கும்கி சுகுமார் சிறப்பு பேட்டி!!

Kumki cameraman sukumars special interviewலாடம் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் சுகுமார். மதுரை சம்பவம், தடையறத்தாக்க, உள்பட பல படங்களில் பணியாற்றி இருந்தாலும் கும்கி மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் சுகுமார். அவரின் சிறப்பு பேட்டி இதோ...

* போட்டோ கிராபராக இருந்து ஒளிப்பதிவாளரானது எப்படி?

இந்த கேள்வியே தப்பு.  பிளஸ் 2 படிச்ச நீங்க எப்படி காலேஜ்ல சேர்ந்துங்கீன்னு கேட்டா எப்படியோ அதுமாதிரிதான் இந்த கேள்வியும். ஒவ்வொரு கேமராமேனுக்கும் அடிப்படை தகுதியே போட்டோ கிராபர்தான். போட்டோ கிராபியில தேறினாத்தான் ஒளிப்பதிவாளனாக ஆக முடியும். அது தெரியாம சில பேர் அவரு போட்டோ கிராபரா இருந்து ஒளிப்பதிவாளராயிட்டார்னு சொல்றாங்க. ஆனால் ஒரு உண்மை தெரியுமா இங்குள்ள சில கேமராமேன்களுக்கு போட்டோ எடுக்கவே தெரியாது. நான் சொல்றது பிலிம் கேமரா. பிலிம் கேமராவுல ஒருத்தருக்கு நல்ல லைட்டிங், அப்ரோச்சர், நாலெஜ் இருந்தா அவரு கேமராமேனா ஆயிடலாம்.

* கும்கி அனுபவம் எப்படி?

அதை அனுபவம்னு எப்படி சொல்லது ஒவ்வொரு நாளும் பாடம் படிச்சேன். கிட்டத்தட்ட ஒண்ணறை வருஷம் கும்கியோட குடும்பம் நடத்தியிருக்கேன். மாணிக்கம் (கும்கியில் நடித்த யானை) என்னோட நெருக்கமான தோழனாயிட்டார். இப்போ அவன் பக்கத்துல இல்லாதது என்னவோ போல இருக்கு. அவன்கிட்டேருந்து வரும் வாசனை இன்னும் என்னைச் சுத்தியிருக்குற மாதிரி ஃபீலிங். யானை ஒரு பெரிய குழந்தைங்றத நான் அனுபவ பூர்மா உணர்ந்தேன்.

* கும்கி அருவிக் காட்சியை எப்படி படமாக்கினீங்க?

அது தொழில் ரகசியம். இருந்தாலும் படம் வெளிவந்துட்டதால சொல்றேன். அது கர்நாடகா காட்டுக்குள்ள இருக்குற ஜோக் பால்ஸ். ரிசர்வ் பாரஸ்டுக்குள்ள இருக்குறதால பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. பெரும் போராட்டத்துக்கு பிறகு அனுமதி வாங்கினோம். எங்க உயிருக்கு நாங்களே பொறுப்புன்னு எழுதி வாங்கிட்டு உள்ளே அனுப்பினாங்க. வாகனத்தை விட்டு இறங்கி பத்து கிலோமீட்டர் நடந்தே போயி அந்த இடத்தை அடைந்தோம். இரண்டு கிலோ மீட்டருக்கு முன்னாலேய அருவியின் சத்தம் கேட்டது. நாங்க முதல்ல போனதே அருவியோட உச்சிக்குத்தான். அதன் அழகை ரசிக்கணும்னா படு பாதாளமான பாதையில் கீழே இறங்கிச் செல்லணும். கயிறு கட்டி இறங்கி படம் பிடித்தோம். லட்சுமி மேனனை நாற்காலியில் உட்கார வச்சு கயிறு கட்டி இறக்கினோம். மேலே ஒரு வலுவான மரத்தில் ஜிம்மி ஜிப்பை கட்டி அதன் மேல் நின்று படம் எடுத்தோம். இந்த அழகை கேமராவுல அள்ளிக்கிட்டு போகணும், இல்லேன்னா இதுலேயே விழுந்து செத்துடணும்ங்ற வெறியே வந்துச்சு. ஏன்னா அத்தனை அழகை நீங்க பக்கத்துல போயி பார்க்க சான்சே இல்லை. தியேட்டர்ல அந்த காட்சிக்கு ஆடியன்ஸ் கைதட்டினப்போ கண்ணுல கண்ணீர் வந்துருச்சு. ஒரு ஒளிப்பதிவாளனா ஜெயிச்சுட்ட ஃபீலிங் இருக்கு.

* மாணிக்கத்துக்கு நிஜமாவே மதம் புடிச்சிருச்சாமே?

ஆமாம், மாணிக்கத்தோட 50 நாள் ஷூட்டிங். 48வது நாள்ல மதநீர் வடிய ஆரம்பிச்சிருச்சு. பாகன் "சார் இரண்டு நாளைக்குள்ள வேலைய முடிச்சிருங்ஞ என்றான். அதனால் இரவு பகல் பாராம வேலைய முடிச்சோம். இப்போ மாணிக்கத்துக்கு மதம் குணமாயிடுச்சுன்னு செய்தி வந்திருக்கு சந்தோஷமா இருக்கு.

* யானை பஸ் நிலையத்தில் விக்ரமை தேடுற சீன் எப்படி சாத்தியம்?


மாணிக்கம் நிஜமாவே தன்னோட ஒரிஜினல் பாகன் மேல உசிரையே வச்சிருக்-கு. படப்பிடிப்புல ஒரிஜினல் பாகனை ஒரு பஸ்சில் ஒழிந்து இருக்க வைத்தோம். அவனது வாச¬யைத் தேடி யானை அலைந்ததை அப்படியோ லைவா எடுத்தோம்.

* இவ்வளவு கஷ்டப் பட்டிருக்கீங்க. அப்புறம் ஏன் கிளைமாக்சுல கிராபிக்ஸ் யானை?

வேற வழியில்லை. தணிக்கை அதிகாரியிடம் இரண்டு யானைகள் சண்டைபோடுற மாதிரி எடுக்கப்போறோம் அந்த சீனை அனுமதிப்பீங்களான்னு கேட்டதுக்கு முடியவே முடியாதுன்னு சொல்லிட்டாங்க. விலங்கு நல வாரியம் ஒத்துக்கல. அதான் வேற வழியில்லாம கிராபிக்ஸ் பண்ணினோம்.

* அடுத்து...?

ஜெயம் ரவியோட நிமிர்ந்து நில் படம் பண்ணிக்கிட்டிருக்கேன். அதுலேயும் எனது திறமைக்கு சவாலான வேலை இருக்கு. பொறுத்திருந்து பாருங்க.

Tags »
Kumki cameraman, sukumar, special interview, கும்கி, கேமராமேன், சுகுமார், சிறப்பு பேட்டி,
Share  
Bookmark and Share

தொடர்புடையவை



வாசகர் கருத்து (10)

சத்யா - karaikudi,இந்தியா
2012-12-24 10:24:42 Report Abuse
 சத்யா படம் சூப்பர். அருவி காட்சி அருமையா இருந்தது. அந்த இடத்துக்கு போனது மாதிரி இருந்தது.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ரெஜி - chennai,இந்தியா
2012-12-20 15:59:17 Report Abuse
 ரெஜி பெஸ்ட் flim
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
shiva - Chennai  ( Posted via: Dinamalar Android App )
2012-12-19 14:07:35 Report Abuse
shiva அந்த அருவியில் எடுக்கப்பட்ட காட்சி மிகமிகன்றாக உள்ளது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ஜானு - Chennai,இந்தியா
2012-12-19 11:04:14 Report Abuse
 ஜானு Beautiful picturisation,. congrats sugumar. want to see that places in lively.... good movie. All the best to KUMKI team.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மனோஜ்குமார் - Thenni,இந்தியா
2012-12-19 08:24:37 Report Abuse
 மனோஜ்குமார் கும்கி படம் தமிழ் படங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் ..... படத்தை பார்த்தவர்கள் அனைவரும் ஒரு பிரமிப்போடதான் வராங்க.... பிரபு சாலமன் சார் க்கு நன்றி
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் ஸ்பெஷல் ரிப்போர்ட்

Advertisement

தொடர்புடைய படங்கள்

 

தொடர்புடைய வீடியோ

Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in