Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

நான் ரொம்ப சிம்பிள்: பவதாரிணி சிறப்பு பேட்டி!

22 நவ்,2012 - 10:38 IST
எழுத்தின் அளவு:

மீடியாக்கள் பார்வையிலிருந்து மறைந்தே இருப்பவர் பவதாரிணி. எப்போதாவது அப்பா இளையராஜாவோடு பொது நிகழ்ச்சியில் பங்கேற்பதோடு சரி. அதன் பிறகு வெளியில் வருவதே இல்லை. தற்போது "வெள்ளச்சி" என்ற படத்திற்கு இசை அமைத்து வருகிறார். இந்தப் படம் தொடர்பான புரமோஷனுக்கு வந்தவரை மடக்கி பிடித்து எடுத்த சிறப்பு பேட்டி: கேள்வி எத்தனை பெரிதாக இருந்தாலும் பதில் ஒரே வரியில்தான்.

* ஏன் இசை அமைப்பதில் இருந்து ஒதுங்கி இருக்கிறீர்கள்?

இசை பற்றி இன்னும் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது. அவற்றையும் கற்றுக் கொண்டு விட்டு முழு மூச்சாக இறங்கலாமே என்றுதான் ஒதுங்கி இருக்கிறேன்?

* உங்கள் தந்தையிடமே கற்றுக் கொள்ளலாமே?


அவர் எங்களை வெளியில்தான் கற்றுக் கொள்ளச் சொல்வார்.

* இதுவரை எத்தனை படங்களுக்கு இசை அமைத்திருக்கிறீர்கள்?

7 படங்களுக்கு மட்டும்தான்.

* இளையராஜாவின் மகள் என்பதால் உங்களை அணுக புதுமுக இயக்குனர்கள் தயங்குவதாக நினைக்கிறீர்களா?

எனக்குத் தெரியவில்லை. வெள்ளச்சி பட யூனிட் புதுசுதானே. அப்படி யாரும் தயங்கத் தேவையில்லை . நான் ரொம்ப சிம்பிள்னு சொல்லுங்க.

* நீங்கள் பெண் என்பதால் இசை அமைப்பதில் ஏதாவது தர்மசங்கடங்கள் இருக்கிறதா?

அப்படி எதுவும் இல்லை. சின்ன வயதிலிருந்தே அப்பாவுடன் ஸ்டுடியோவுக்குள் பழக்கம் இருப்பதால் எந்த சங்கடமும் இல்லை.

* ஏன் எப்போதும் பயந்த சுபாவம் கொண்டவராகவே இருக்கிறீர்கள்?


சின்ன வயதிலிருந்தே அப்படித்தான்.

* பாடுவதையும் குறைத்துக் கொண்டீர்களே?

இல்லையே... தொடர்ந்து பாடிக்கொண்டுதான் இருக்கிறேன். நீங்கள் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன். இப்போது கூட "ஆதலால் காதல் செய்வீர்" படத்தில் பாடியிருக்கிறேன்.

* ஒரு படத்துக்கு இசை அமைக்க ஒப்புக் கொண்ட பிறகு அப்பாவுடன் அதுகுறித்து ஆலோசனை கேட்பீர்களா?

முன்பு சில சந்தேகங்கள் கேட்பேன். இப்போது அதுகூட இல்லை. வித்தியாசமாக எந்த முயற்சியாவது செய்தால் அவருக்கு போட்டுக் காட்டுவேன். அவர் ஏதாவது வித்தியாசமாக செய்தால் எங்களுக்கு போட்டுக் காட்டுவார்.

* கார்த்திக் ராஜா படம் இயக்கப் போகிறாராமே உண்மையா?

அவருக்கு படம் இயக்குவதில் நல்ல ஆர்வம் இருக்கிறது தெரியும். எப்போது இயக்கப் போகிறார் என்பது தெரியாது.

* அப்பா கிராமிய பாடல்களுக்கு ஸ்பெஷலிஸ்ட், யுவன் வெஸ்டர்ன் ஸ்பெஷலிஸ்ட்? நீங்க...?

இரண்டும் பிடிக்கும். ஸ்பெஷிலிஸ்ட்டுன்னு சொல்லிக்க முடியாது.

* இனியாவது தொடர்ந்து இசை அமைப்பீர்களா?

நிச்சயமாக... என்று ஒரு வரியில் சொல்லி முடித்தார்.

என்னை அழிக்க சூழ்ச்சி நடக்கிறது! - சோனா சிறப்பு பேட்டிஎன்னை அழிக்க சூழ்ச்சி நடக்கிறது! - ... நிஜமாகவே கண்ணீர் வரவழைத்து படமாக்கினார்! நீர்ப்பறவை அனுபவம் பற்றி சுனைனா பேட்டி!! நிஜமாகவே கண்ணீர் வரவழைத்து ...


வாசகர் கருத்து (5)

கார்த்திக் - Istanbul,துருக்கி
01 டிச,2012 - 15:59 Report Abuse
 கார்த்திக் சிறந்த பதில்கள். நிச்சயம் வெல்வீர்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
kannu - Chennai,இந்தியா
22 நவ்,2012 - 13:42 Report Abuse
 kannu வெரி குட் இப்படிதான் பேசனும் பவதா வெரி குட்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ரவி - chennai,இந்தியா
22 நவ்,2012 - 12:23 Report Abuse
 ரவி நீங்கள் ரொம்பவும் கொடுத்து வைத்தவர். எனக்கு மட்டும் அந்த வாய்ப்பு இருந்திருந்தால் கடவுளுக்கு கோடி நமஸ்காரம் செய்து இருப்பேன் - என்ன செய்வது விதி வலியது.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
விஜயகுமார் - Tirukoilur,இந்தியா
22 நவ்,2012 - 11:47 Report Abuse
 விஜயகுமார் வாழ்க ராஜா சார் மற்றும் அவர்களது குடும்பம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Maxim Joseph - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
22 நவ்,2012 - 11:13 Report Abuse
 Maxim Joseph Bavadharani we love your song's sung by you. So please keep do singing for us alot. We expect a combination with Yuvan's album. I love Raja sir, Karthik and Yuvan alot and also you. so please do one combination with Yuvan like oliyeley song. PLease......
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Murugaatrupadai
  Tamil New Film I
  • நடிகர் : விக்ரம்
  • நடிகை : எமி ஜாக்சன்
  • இயக்குனர் :ஷங்கர்
  Tamil New Film Papanasam
  • பாபநாசம்
  • நடிகர் : கமல்ஹாசன்
  • நடிகை : ,கெளதமி
  • இயக்குனர் :ஜீது சோசப்
  Tamil New Film Jaihind-2
  • ஜெய்ஹிந்த்-2
  • நடிகர் : அர்ஜூன்
  • நடிகை : சுர்வின் சாவ்லா
  • இயக்குனர் :அர்ஜூன்
  Advertisement
  Copyright © 2014 Dinamalar , No. 1 website in Tamil. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in