Advertisement

சிறப்புச்செய்திகள்

வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

சினிமாவை நேசித்ததால் இன்னும் சினிமாவிலேயே இருக்கேன்! - மோகன் சிறப்பு பேட்டி!!

14 நவ, 2012 - 10:15 IST
எழுத்தின் அளவு:

 சினிமாவை நேசித்ததால் தான் இத்தனை ஆண்டு காலமும் என்னால் சினிமாவிலேயே நிலைக்க முடிந்தது என்று நடிகர் மோகன் கூறியுள்ளார்.  ஒரு காலத்தில் தொடர் வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர் நடிகர் மோகன். இவரது படங்களுக்கு பெரிய மவுசு இருந்தது. காரணம், இவரது படங்களின் கதை உள்ளிட்டவை மட்டும் காரணமல்ல, மாறாக இசைஞானி இளையராஜாவின் இன்னிசையும்தான். இளையராஜாவின் இசையும், மோகனும் இருந்தால் அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் என்பது அக்காலத்தில் எழுதப்படாத விதியாகவே இருந்தது. பயணங்கள் முடிவதில்லை. உதயகீதம், மௌன ராகம் என சொல்லிக் கொண்டே போகலாம் இவர்களின் ஹிட் படங்களை. தற்போது ஒரு சின்ன இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் பிரவேசித்து உள்ளார். அதுவும் இம்முறை நடிப்புடன் சேர்த்து தயாரிப்பாளராகவும் அவதரித்துள்ளார். நடிகர் மோகன் தான் கடந்து வந்த பாதை, இன்றைய சினிமா உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார். அவற்றின் தொகுப்பு இதோ...

* அறிமுகம்


1978ல் அறிமுகம். முதல் படத்தின் டைரக்டர் மற்றும் கேமராமேன் பாலு மகேந்திரா. ""என் அப்பா, அம்மா செய்த புண்ணியம், நான் முதலிலேயே பாலு மகேந்திரா சார் படத்தில் அறிமுகம் ஆனேன். என் முதல் படம் கன்னடத்தில் கோகிலா.  இந்த படத்தில், கமல் சார், ஷோபா, ரோஜாரமணி ஆகியோருடன் நடித்தேன். நல்ல கதாபாத்திரம், நல்ல படம், நல்ல வெற்றி. அதற்கு, பாலு சார்க்கு, என் வாழ்நாள் முழுவதும் நன்றி கடன் பட்டிருக்கேன்.

* ஜோடி


சுகாசினி, ராதா, ராதிகா, அமலா, ஷோபா, குஷ்பு,  அம்பிகா, ரேவதி, நதியா, ஜெயஸ்ரீ,  இப்படி, பெரிய லிஸ்ட்டே இருக்கும். ஆனா, நான் நடிக்க வரும்போது தான், ஸ்ரீதேவி மும்பை போயிட்டாங்க. அவங்க கூட என்னால நடிக்க முடியல, ஆனா, பயணங்கள் முடிவதில்லை, கிளிஞ்சல்கள் படம் இந்தியில் நடிக்க கேட்டாங்க. இங்கேயே நான் ரொம்ப, "பிசியா இருந்ததால், இந்திக்கு  போகல. ஒரு வேளை நான் இந்திக்கு போயிருந்தால் , ஸ்ரீதேவி கூட நடிச்சிருப்பேன். பெரும்பாலும் எல்லா ஹீரோயின்கள் கூடவும் நடிச்சிட்டேன்.

* "சிக்ஸ் பேக்


""அப்போலேர்ந்து இப்ப வரைக்கும் உடம்பை சரியா வச்சிருக்கேன். சிக்ஸ் பேக் பற்றி இப்ப எல்லார்கிட்டயும் விழிப்புணர்வு இருக்கு. பாராட்டணும். இப்ப இருக்கும் நடிகர்கள் ரொம்ப மெனக்கெடுறாங்க. நிறைய ஜிம் திறந்திருக்காங்க. சரியா உடம்பை பாதுகாக்க விரும்புறதை பாராட்டியே ஆகணும்.

* எஸ்.பி.பி.,


இளையராஜா, எஸ்.பி.பி., மோகன் கூட்டணி பல வெற்றி பாடல்களை தந்துள்ளது. ""நான் காலேஜ்ல படிக்கும் போதே, எஸ்.பி.பி., சார் ரொம்ப "பாப்புலர், அவருடைய பாடல்களை கேட்டு வளர்ந்திருக்கேன். அவர் மேல் நிறைய அன்பு இருக்கு. பாடகர்களில் ஒரு "கம்ப்ளீட் சிங்கர்னா அது எஸ்.பி.பி., தான். எந்த மொழியானாலும், அவர் பாடும் "ஸ்டைல், அதை வெளிப்படுத்தும் உணர்வு வேறு யாராலும் கொடுக்க முடியாதுனு நான் நம்புறேன். ராஜா சார் பத்தி சொல்லவே தேவைஇல்லை. எத்தனையோ வெற்றிகளை பார்த்தவர். இவங்க கூட நானும் இருந்தேனு நினைத்தா ரொம்ப பெருமையா இருக்கு.


* இன்றைய படங்கள்


""ரொம்ப நல்லா இருக்கு. பிரமிப்பா இருக்கு. டெக்னிக்கல்லாவும் சரி,  கதைகளமும் சரி, தமிழ் சினிமா ஒரு சவாலான மிரட்டலா இருக்கு.


* இயக்கம், தயாரிப்பு


 இயக்கம், தயாரிப்பு ""சினிமா எனக்கு வாழ்க்கை கொடுத்திருக்கு. சினிமால இருக்கணும், எப்படி என்ன செய்யணும், தயாரிப்புனா என்ன டிஸ்ட்டிபியூஷன் என்னனு தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன். 1,000 எபிசோட் கிட்ட  சீரியல் தயாரிப்பு செய்திருக்கேன். படங்கள் இயக்கி இருக்கேன். எல்லாமே நான்  சினிமாவை நேசித்ததால் தான். இன்னும் சினிமாவிலேயே இருக்கேன்.


* இன்னும் ஆசை


""இப்போது வரும் படங்களை பார்க்கிறேன். ரொம்ப அற்புதமான படங்களா பண்றாங்க. ரொம்ப திறமைசாலிகள் இருக்காங்க. கவுதம் வாசுதேவ் மேனன், விஜய், கே.வி.ஆனந்த், பாலா, வெற்றிமாறன் இன்னும் பல பேர் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

14 நவ, 2012 - 22:16 Report Abuse
 டோக்யோ அக்பர் நீங்க மைக் பிடித்த பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட்தான் .எனவே நீங்க மைக்மோகன்.
Rate this:
Sam - Singapore,இந்தியா
14 நவ, 2012 - 13:21 Report Abuse
 Sam yes , your are correct ...:-)
Rate this:
ganesan b(ganesh) - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
14 நவ, 2012 - 12:29 Report Abuse
ganesan b(ganesh) உண்மையிலேயே நீங்கள் வெற்றிப்படங்களின் நாயகன் தான். ஏன் மோகன் சார், உங்களது வெற்றிக்கு மிகவும் காரணமாக இருந்த S.N.Surendar பற்றி மறந்துட்டீங்களே ! எப்பொழுது அவரது பின்னணிக்குரல் நின்றதோ, அதன் பின்னர் வந்த உங்களின் படத்தின் நிலைமை எல்லோருக்கும் தெரியும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in