Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

ப்ரியா படமும் தமன்னா வாழ்க்கையும்: ஓர் ஸ்பெஷல் ஸ்டோரி...!

Tamanna life background: Special Report1978ம் ஆண்டு வெளிவந்த படம் ப்ரியா. ரஜினியின் 25 வது படம். 25 வாரங்கள் ஓடிய படம். படத்தில் ஸ்ரீதேவி கிராமத்து பெண். அழகும், திறமையும் வாய்ந்தவள். அவளை சினிமாவில் நடிக்க வைப்பதற்காக அவளது தாய்மாமன் நட்ராஜ் சென்னைக்கு அழைத்து வருகிறான். தயாரிப்பாளர் மேஜர் சுந்தர்ராஜனிடம் அவளை அறிமுகம் செய்து வைப்பான். செங்கமலத்தின் அழகையும், திறமையையும் எடைபோடும் மேஜர் சுந்தர்ராஜன் அவள் பிற்காலத்தில் பெரிய நடிகையாக வருவாள் என்று கணக்குப்போட்டு, அவள் தன் கட்டுப்பாட்டிலேயே எப்போதும் இருக்க வேண்டும் என்று பல வெற்றுப் பேப்பர்களில் கையெழுத்து வாங்கிக் கொள்வார். தான் சொல்லும் படங்களில்தான் நடிக்க வேண்டும், சம்பளத்தில் கமிஷன் தரவேண்டும் என்று ஒப்பந்தம் எழுதிக் கொள்வார். பிற்காலத்தில் பெரிய நடிகையாகிவிடும் ஸ்ரீதேவி மேஜரின் பிடியிலிருந்து விலக முடியாமல் கஷ்டப்படுவார். இந்தக் கதைபோலத்தான் இப்போது மாறிவிட்டிருக்கிறது. தமன்னாவின் வாழ்க்கை. ஸ்ரீதேவிக்கு பதில் தமன்னா, தாய்மாமனுக்கு பதில் தந்தை, மேஜர் சுந்தர்ராஜனுக்கு பதில் சலீம் அக்தர்.

தமன்னா மும்பையில் உள்ள கூப்பர் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். தமன்னாவை நடிகையாக்க வேண்டும் என்பது அவரது தந்தை சந்தோஷூக்கு ஆசை. அதற்காக மும்பை கம்பெனிகளில் மகளின் படத்தோடு வாய்ப்பு தேடினார். அப்போது கிடைத்தவர்தான் தயாரிப்பாளர் சலீம் அக்தர். தமன்னாவை நேரில் வரச்சொல்லி பார்த்தார் அக்தர். மேஜர் சுந்தர்ராஜன் ஸ்ரீதேவியை பார்த்து கணித்ததுபோல தமன்னா பிற்காலத்தில் பெரிய நடிகையாக வருவார் என்று கணித்து "சந்த்சா ரோஷன்" என்ற படத்தில் தமன்னாவை அறிமுகப்படுத்தினார். கூடவே 5 வருடங்களுக்கு நான் சொல்லும் படங்களில் நடிக்க வேண்டும். வாங்கும் சம்பளத்தில் 25 சதவிகிதம் கமிஷன் தரவேண்டும் என்று ஒப்பந்தம் போட்டார். எப்படியாவது வாய்ப்பு கிடைத்தால் போதும் என்ற நிலையில் இருந்த தந்தையும், மகளும் இதற்கு சம்மதித்தனர்.

ஆனால் அந்தப் படத்திற்கு பிறகு தமன்னாவுக்கு இந்தி வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. சிறிய இடைவெளிக்கு பிறகு தமிழ் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் மகன் ஜோதி கிருஷ்ணா இயக்கிய "கேடி" படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு தமிழின் முக்கியமான நடிகையானார். ஒப்பந்தம் போட்ட தயாரிப்பாளர் சலீம் அக்தர் நல்ல வசதியுடன் இருந்தார். தமன்னா தமிழ் படத்தில் நடித்தார். அதனால் சலீமும் ஒப்பந்தம் பற்றி கவலைப்படமாமல் விட்டுவிட்டார். இதுவரை எந்த பிரச்சினையும் இல்லை.
 
தமிழ், தெலுங்கில் கொடிகட்டிப் பறந்த தமன்னா மீண்டும் இந்திக்கு சென்றார். பல ஆண்டுகளுக்கு முன்பு ஜிதேந்திரா, ஸ்ரீதேவி நடித்த "ஹிம்மத்வாலா" என்ற படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் அஜய் தேவ்கானுக்கு ஜோடியாக தமன்னா நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்போது தயாரிப்பளார் சலீம் அக்தர் விழித்துக் கொண்டார். மேலும் அவர் இப்போது அவர் பெரும் பொருளாதார நெருக்கடியில் இருக்கிறார். அதனால் இப்போது ஒப்பந்தத்தை தூசி தட்டி எடுத்து நீதிமன்றத்திற்கு சென்று விட்டார். தமன்னா தன்னை ஏமாற்றி விட்டதாகவும், தான் இப்போது மிகுந்த கஷ்டத்தில் இருப்பதாகவும். அதனால் அவர் இதுவரை வாங்கிய சம்பளத்தில் எனக்கு 25 சதவிகித கமிஷன் தரவேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

தமன்னாவின் தந்தையோ "சலீம் அக்தர் ஒரு மோசடி பேர்வழி. அவர் படத்தில் நடிக்கும்போது என் மகள் மைனர். மைனர் பெண்ணுடன் எப்படி ஒப்பந்தம் போட முடியும். அப்படி போட்டிருந்தாலும் அது செல்லாது. வழக்கை சட்டப்படி சந்திப்போம்" என்று அறிவித்திருக்கிறார். தமன்னாவோ "சலீம் அக்தர்தான் என்னை அறிமுகப்படுத்தினார். அதற்கு மேல் எனக்கு எதுவும் தெரியாது. அப்போது நான் சின்னப் பொண்ணு" என்கிறார்.

தமன்னா திறமையான நடிகை. ஆறே மாதத்தில் தமிழ் கற்று அதில் சரளமாக பேசும் திறமையை வளர்த்துக் கொண்டவர். குறுகிய காலத்தில் உயரத்துக்கு சென்ற அவருக்கு இந்தியில் ஒரு நல்ல இடத்துக்கு செல்லும் இந்த நேரத்தில் இப்படி ஒரு பிரச்சினை. இது அவரை ரொம்பவே கலங்க வைத்து விட்டது.

ப்ரியா படத்தில் ஸ்ரீதேவியை காப்பாற்ற ரஜினி வந்ததைப்போல தமன்னாவை காப்பாற்ற யாராவது வருவார்களா?

Tags »
Tamanna, life background, Special Report, தமன்னா, வாழ்க்கை, ஓர் ஸ்பெஷல் ஸ்டோரி,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (4)

narayanan - cbe  ( Posted via: Dinamalar Android App )
2012-09-02 20:06:23 Report Abuse
narayanan எங்க சின்ன தல STR வருவாரு தமன்னா நீ ஒன்னும் கவலை படாதே...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
siraj - mannar,இலங்கை
2012-09-02 12:08:46 Report Abuse
 siraj eethu என்ன koodumai
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
joly - Chennai  ( Posted via: Dinamalar Android App )
2012-09-02 07:37:32 Report Abuse
joly நான் வருவேன்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Thamannaadhaasan - Chennai,இந்தியா
2012-09-02 01:05:14 Report Abuse
 Thamannaadhaasan ஏனில்லை நானிருக்கிறேன்....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் ஸ்பெஷல் ரிப்போர்ட்

Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in