Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

நடிகர்களின் தேசப்பற்று எங்கேபோனது...? ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்...!

15 ஆக, 2012 - 15:58 IST
எழுத்தின் அளவு:

நடிகர் அர்ஜுன் தேசப்பற்று மிக்க நடிகர். ஜெய்ஹிந்த் என்ற பெயரில் படமே இயக்கினார். தேசப்பற்ற மிக்க ராணுவ அதிகாரியாகவும், போலீஸ் அதிகாரியாகவும் நிறைய படங்களில் நடித்துள்ளார். நிஜ வாழ்க்கையிலும் பெரிய தேசப்பற்றாளராக தன்னை காட்டிக் கொள்வார். மேடையில் பேசும்போதுகூட சுதந்திர போராட்ட தியாகி போன்று ஜெய்ஹிந்த் என்று சொல்லித்தான் பேச்சை முடிப்பார். இவருக்கு அடுத்த தேசப்பற்றாளர் விஜயகாந்த் இன்றைக்கு அரசியல் கட்சி தலைவராகவும், எதிர்கட்சி தலைவராகவும் நாட்டை காப்பாற்ற புறப்பட்டுவிட்டார். சினிமாவில் சிறப்பு போலீஸ் அதிகாரியாக பாகிஸ்தான் தீவிரவாதிகளை பின்னி பெடலெடுப்பவர். இன்றைக்கு நிஜமாகவே தேசியகொடி கட்டிய காரில் பவனி வருபவர். அடுத்து சரத்குமார். இவரும் விஜயகாந்த் வழியில் தன்னை தேசப்பற்றாளராக திரையில் உருவகப்படுத்திக் கொண்டவர். சினிமாவில் எல்லையில் எதிரிகளோடு போராடி தேசத்துக்காக பல தியாகங்கள் செய்தவர். விஜய் விரைவில் அரசியல்வாதி அவதாரம் எடுக்க காத்திருப்பவர். ஊழலுக்குக்கு எதிராக அன்னாஹசாரே உண்ணாவிரதம் இருந்தபோது ஓடிப்போய் ஆதரவு தெரிவித்தவர். இப்படி பல தேசப்பற்று நடிகர்கள் சினிமாவில் இருக்கிறார்கள்.

இவர்கள் எல்லாம் சுதந்திர தினத்தன்று என்ன செய்கிறார்கள்.  எந்த நடிகராவது தனது ரசிகர்களை சுதந்திர தினத்தை கொடியேற்றி கொண்டாடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்களா? குறைந்த பட்சம் தன் வீட்டின் அருகில் உள்ள பள்ளிக்கூடததிற்காவது சென்று குழந்தைகளோடு சுதந்திர தினத்தை கொண்டாடி இருக்கிறார்களா? பணக்கார பள்ளிகள் பணம் கொடுத்து அழைத்தால் தேசப்பற்று பொங்க கொடியேற்றி விட்டு வருவார்கள். அல்லது தங்கள் வீட்டிலாவது தேசிய கொடியேற்றி இருப்பார்களா? இன்று ஒருநாள் தங்கள் சட்டையிலாவது தேசிய கொடியை சூடியிருப்பார்களா?

தனிப்பட்ட நடிகர்களை  விட்டு விடுங்கள். தேசப்பற்று மிக்க தலைவர்களை கொண்ட நடிகர் சங்கம் எந்த ஆண்டாவது நடிகர்களை அழைத்து சுதந்திரன தினத்தை கொண்டாடி இருக்கிறதா? 23 சங்கங்களை உள்ளடக்கிய பெப்சியில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டதுண்டா?- குறைந்தபட்சம் எந்த சங்கமாவது தேசிய கொடியேற்றி இருக்குமா? நடிகர்களும், உழைப்பாளிகளும் இப்படி இருக்கும்போது நடிகைகளை பற்றி கேட்கவே வேண்டாம். ஆடை சுந்திரம் அடைந்துவிட்டேன் என்று பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பதோடும், தேசிய கொடியை பிடித்துக்கொண்டு போஸ் கொடுப்பதோடும் அவர்களின் தேசப்பணி முடிந்துவிடும்.

நடிகர்களும் இந்த சுதந்திர நாட்டின் குடிமகன்தான். சுதந்திரம் அவர்களுக்கும் சேர்த்துதான். சுதந்திரதினத்தை கொண்டாடுவதும், கொண்டாடாமல் இருப்பதும் அவர்கள் தனிப்பட்ட விருப்பம். ஆனால் சுதந்திர தினத்தை கொண்டாடாத, மதிக்காத நடிகர்கள் சினிமாவில் தங்களை பெரிய தேசியவாதியாக காட்டிக் கொள்ளாமல் இருந்தால் போதும். என்பதே ரசிகர்களின் கோரிக்கை.

Advertisement
கருத்துகள் (17) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (17)

V Gopalan - Bangalore,இந்தியா
01 செப், 2012 - 20:54 Report Abuse
 V Gopalan Where are you? So long as the fans are so crazy in going after these tinsel world, how can you expect Patriotism. They just sleep over Lakhs/Crores besides having farm lands at the cost of these general public but if there is a function ie marriages, birthday or any function for that matter, invite CM,MPs and other VIPs, the poor fans would be kept barricade. It is also a fault on general public cinema is only just for entertainment whereas forgetting all these they worship these actors more than deities even more than their parents, and if you ask about patriotism against actors/actresses, these fans will immediately will make a ghero in front of dailies shouting against editors and set fire offices etc. hence finding fault on actors/actresses is of no use obviously.
Rate this:
இபிகோ - Chennai,இந்தியா
16 ஆக, 2012 - 11:54 Report Abuse
 இபிகோ தலைவன் என்று ஒத்துக்கொள்ளப்பட்ட தொண்டர் கூட்டம் கொள்கைகளால் ஈர்க்கபடுவது இயல்பே. அவ்வகையில் தலைவர்களின் நிலைப்பாடு தொண்டர்களை ஒருமுகப்படுத்தவும் நெறிப்படுத்தவும் பெரிதும் உதவும். ஒரு படம் நன்றாக ஓட வேண்டி பொய்யாக பிரச்சாரம் செய்து மக்களை நம்ப வைக்க போராடுகிற தலைவர்கள் ஒரு நிமிடம் மக்களை வழி நடத்த விரும்பவில்லை. இதற்கான பலனை உடனே அனுபவிக்க முடியாது போனாலும், அதற்கான விதைய விதைக்க முடியும். இது தனி மனிதன் சம்பந்தப்பட்ட விஷயமானாலும், தினமலரின் சமூக அக்கறை பாராட்டப்பட வேண்டியதே.
Rate this:
karu - chennai,இந்தியா
16 ஆக, 2012 - 10:40 Report Abuse
 karu தினமலர் ராக்ஸ்
Rate this:
பிரவீன் - aurangabad,இந்தியா
16 ஆக, 2012 - 09:55 Report Abuse
 பிரவீன் நடிகர்களுக்கு என்ன கொம்பா மொளச்சிருக்கு
Rate this:
Bala - NYC,யூ.எஸ்.ஏ
16 ஆக, 2012 - 09:38 Report Abuse
 Bala ஒரு நடிகனை நடிகனாக மட்டும் பார்த்தால் இந்தப் பிரச்சனையே இல்லை.
Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in