சித்தார்த்துக்காக மெனக்கெட்ட சந்தானம்! | கெட்டப்பை மாற்றி களமிறங்கினார் கடல் கெளதம்! | மலையாளத்தில் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி புதிய படம்! | நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்த ஸ்ருதிஹாசன்! | சித்தார்த்துக்காக கவுரவ வேடத்தில்நடிக்கிறார் சமந்தா? | புதிதாக பிறந்தேன் மனிஷா உருக்கம் | அஞ்சலியின் அதிரடி அமலா ஆவேசம் | நான் தான் நம்பர் ஒன்உற்சாகத்தில் தமன்னா | விஜய் ஜோடியாக நடிப்பேன்பூர்ணா சபதம் | போட்டி இருந்தால் தான்சாதிக்க முடியுமாம் |
சினிமாவுல தயாரிப்பாளருக்கு அடுத்தபடியா அதிகமா ரிஸ்க் எடுக்கறது எங்க சண்டை கலைஞர்கள் தான் ரசனையா பேசுறாரு தமிழ் சினிமாவோட இளம் சண்டைக்காட்சி வடிவமைப்பாளர் திலீப் சுப்பராயன். பிரபல சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயனோட மகன். பொதுவா பாடல் காட்சியை படமாக்கத்தான் வெளிநாடு போவாங்க. ஆனா, வந்தே மாதரம் புகழ் பரத்பாலா இயக்கத்துல தனுஷ் நடிக்கற மரியன் படத்துக்காக நமீபியாவுல ஒரு சண்டைக்காட்சியை படமாக்கிவிட்டு வந்திருக்கற திலீப்கிட்டே ஒரு சின்ன பேச்சுவார்த்தை.
* அப்பாவைப் போலவே சண்டைப் பயிற்சியாளரானது... சிறு வயது விருப்பமா...?
இல்லைங்க. ஓரம்போ படத்துல உதவி இயக்குனராதான் ஆரம்பிச்சேன். அந்த படத்துக்கு வசனம் எழுதின குமாரராஜா, அவரோட ஆரண்ய காண்டம் படத்துக்கு சண்டைக்காட்சி அமைக்க கூப்பிட்டார். அப்பாவோட படங்கள்ல வேலை பார்த்த அனுபவம் இருந்ததால, களம் இறங்கிட்டேன்.
* குறுகிய காலத்தில் குறிப்பிடத்தக்க வெற்றி - ரகசியம் என்ன...?
ரகசியமெல்லாம் எதுவும் இல்லை. இப்பல்லாம் திடீர்னு வீரம் வந்து ஒரே அடியில் பத்து பேரை ஹீரோ அடிச்சா, ரசிகர்கள் சிரிக்க ஆரம்பிச்சிடுறாங்க. அதனால எல்லா சண்டைக்காட்சிகளையும் யதார்த்தமா அமைச்சேன். இயக்குனர்களுக்கு இது பிடிச்சிருந்ததால, தொடர்ந்து சண்டை மூட்டிவிட சொல்லிட்டாங்க.
* திறமையான சண்டைக்கலைஞர்கள் இருந்தும் ஹாலிவுட்டின் ஆக்ஷ்ன் தரத்தை தொட முடியவில்லையே?
அங்கே பயிற்சியாளரை கூப்பிட்டு படத்தோட ஸ்கிரிப்ப்டையும், பெரிய தொகையையும் கொடுத்து, நாலஞ்சு மாசம் ஒத்திகை பார்த்து, பக்காவான பாதுகாப்பு அமைப்புகளோட படமாக்குவாங்க. இங்கே இந்தவாரம் கதை சொல்லி அடுத்த வாரம் ஷூட்டிங் வரச் சொல்றாங்க. பிரச்னை எங்ககிட்ட இல்லைங்க.
* இந்திய சினிமாவில் எந்த மொழியின் சண்டைக்காட்சி அமைப்பு பிடிக்கும்?
இன்னும் தெலுங்கு சினிமா சண்டைகள்ல நம்ப முடியாததெல்லாம் நடக்குது. இந்தியில பேன்டசி அதிகமா இருக்கு. மலையாள சினிமா சண்டைகள்தான் ரொம்ப யதார்த்தமா இருக்கு. தமிழ் சினிமாவும் இப்போ அந்த பாதைக்கு வந்துட்டு இருக்கறதால எனக்கு பிடிச்சது தமிழும், மலையாளமும் தான்.
* உள்ளுக்குள் உறங்கும் இயக்குனர் கண்விழிக்க வாய்ப்புண்டா?
கண்டிப்பா! இவன் எப்படியும் ஆக்ஷ்ன் படம்தான் எடுத்திருப்பான்!னு எதிர்பார்த்து வர்ற ரசிகர்களை ஏமாத்தி, கண்ணுல தண்ணி வர்ற அளவுக்கு சிரிக்க வைக்கிற மாதிரி ஒரு காமெடி படத்தை கண்டிப்பா இயக்குவேன். ஆனா, எது எப்போ?ன்னுதான் தெரியலை!