Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

படைக்கத் தெரிந்தவன் நான் - இசையமைப்பாளர் கே!!

I am creatable person says music director kமிஷ்கின் இயக்கத்துல வெளிவந்த "யுத்தம் செய்" படத்தை பார்த்தவங்க எல்லாரையும் படத்துக்கு யாருப்பா மியூசிக்னு கேட்க வைச்சவர் இளம் இசையமைப்பாளர் கே. மிஷ்கின் அடுத்ததா இயக்கிட்டு இருக்கற தமிழின் முதல் சூப்பர் ஹீரோ படமான "முகமூடி" படத்திற்கும் இவர்தான் இசை. இரண்டாவது படத்துலேயே தனக்கு கிடைச்சிருக்கிற பிரம்மாண்டமான வாய்ப்பை பத்தி இனிக்க இனிக்க பேசுறாரு கே.

* முகமூடி பற்றி...?

இதுவரைக்கும் வந்த மிஷ்கினோட படங்கள் ரொம்ப சீரியஸா இருக்கும். ஆனா முகமூடி காதல், காமெடி, சென்டிமென்ட், பிரமிக்க வைக்கிற ஆக்ஷ்ன்னு எல்லாம் கலந்த ஒரு புதுமையான, முழுமையான பொழுதுபோக்கு படமா இருக்கும்.

* "யுத்தம் செய்" இசை, "முகமூடி" இசை என்ன வித்தியாசம்?

யுத்தம் செய்‌க்கு உணர்வுப்பூர்வமான இசை தேவையா இருந்துச்சு. அதிகமான பாடல்களுக்கு அந்த படத்துல வாய்ப்பில்லை. ஆனா... காதல் காட்சிக்கு, சாகச காட்சிக்கு, பார் பின்னணியிலன்னு இளைஞர்களை ஈர்க்கக்கூடிய பல பாடல்கள் முகமூடியில் இருக்கு.

* பின்னணி இசையில் சிறப்பு?

அதிரடியான ஆக்ஷ்ன் சாகச காட்சிகள்னு முகமூடிக்கு தேவைப்பட்ட பின்னணி இசை ரொம்ப பெருசு. ஜீவா, சூப்பர் ஹீரோ வா வர்ற காட்சிகள்ல ரசிகர்களை பரவசப்படுத்துறதுக்காக, ட்ரம்பெட் மாதிரியான ஹார்ன் இசைக்கருவிகளை அதிகமா பயன்படுத்தியிருக்கேன்.

* இசையமைப்பில் நீங்கள் அதிகம் பயன்படுத்தும் தொழில்நுட்பம்?

பாடகர்கள் கொஞ்சம் முன்னே பின்னே பாடி இருந்தாலும் அதை சரி செய்யக்கூடிய, பதிவு செஞ்ச இசையை இன்னும் மெருகேத்தக்கூடிய ஆட்டோடியூன்ங்கற மென்பொருளை பயன்படுத்தியிருக்கேன். பெரும்பாலான இசையமைப்பாளர்கள் இப்போ இதைத்தான் பயன்படுத்திட்டு இருக்காங்க.

* இசைக்கலைஞன், இசை அமைப்பாளர் - என்ன வேறுபாடு?

இசையை முறையா கத்துக்கிட்டு, அதை இசைக்க மட்டும் தெரிஞ்சவங்க கலைஞர்கள். அந்த இசையை அடிப்படையா வைச்சு, தன்னோட கற்பனைத் திறனையும் கலந்து, புதுப்புது இசை வடிவங்களை படைக்க தெரிஞ்சவங்க... என்னை மாதிரியான இசை அமைப்பாளர்கள்.

Tags »
music director k, மியூசிக் டைரக்டர் கே,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (1)

அசோக் குமார் - Trichy,இந்தியா
2012-07-16 16:49:37 Report Abuse
 அசோக் குமார் ஒரு பாட்டு அல்லது ஒரு re ரெகார்டிங் சில வருடங்களுக்காவது நிற்க வேண்டும் என்பதை ஒத்து கொள்கிறீர்களா அப்படி என்றால். அது போன்ற இசை இனி புதியவர்களிடம் இருண்டு வரப்போவதில்லை.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் ஸ்பெஷல் ரிப்போர்ட்

Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in