Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

2018ல் அதிகமாக வெளிவந்த 'பார்ட் 2' படங்கள்

22 டிச, 2018 - 15:08 IST
எழுத்தின் அளவு:
More-sequel-movies-released-in-2018-tamil-cinema

2018ம் ஆண்டில் இன்னும் ஒரே ஒரு வெள்ளிக்கிழமைதான் இருக்கிறது. அன்றைய தினம் ஒரு சில படங்கள் மட்டுமே வெளிவர உள்ளன. நேற்றுடன் வெளிவந்த படங்களுடன் இந்த ஆண்டில் இதுவரை 172 படங்கள் வெளிவந்துள்ளன.

இந்த ஆண்டில் இதுவரையில் இல்லாத அளவிற்கு அதிகமான 'பார்ட் 2' படங்கள் வெளிவந்துள்ளன. 'கலகலப்பு 2, கோலி சோடா 2, தமிழ்ப் படம் 2, விஸ்வரூபம் 2, சாமி 2, சண்டக்கோழி 2, 2.0, மாரி 2” என மொத்தமாக 8 படங்கள் வெளிவந்துள்ளன. இவற்றில் 'கலகலப்பு 2, தமிழ்ப் படம் 2' ஆகிய படங்கள் மட்டுமே வெற்றிப் படங்களாகி உள்ளன. 'மாரி 2' படம் நேற்றுதான் வெளிவந்துள்ளதால், அதன் வெற்றி, தோல்வி என்ன என்பது அடுத்த சில தினங்களில்தான் தெரிய வரும்.



கலகலப்பு 2


சுந்தர் சி இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில், ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கல்ராணி, கேத்தரின் தெரேசா என முதல் பாகத்தில் நடிக்காத நட்சத்திரங்கள் இரண்டாவது பாகத்தில் நடித்தனர். 2012ம் ஆண்டு வெளிவந்த 'கலகலப்பு' படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த அளவிற்கு இல்லை என்றாலும் 'கலகலப்பு 2' படமும் லாபம் தந்த வெற்றிப் படமாக அமைந்தது.

கோலி சோடா 2


விஜய் மில்டன் இயக்கத்தில், அச்சு இசையமைப்பில், சமுத்திரக்கனி, பரத்சீனி, வினோத், இசக்கி பரத், சுபிக்ஷா, க்ரிஷா குரூப் மற்றும் பலர் நடித்த படம். இப்படத்தின் முதல் பாகத்தில் 'பசங்க' படத்தின் சிறுவர்கள் நடித்தனர். 2014ம் ஆண்டில் வந்த முதல் பாகம் ஒரு யதார்த்தமான படமாக அமைந்து பெரிய லாபத்தைக் கொடுத்தது. ஆனால், இரண்டாம் பாகத்தில் அப்படி எதுவும் இல்லாததால் படம் பெரிய தோல்வியைத் தழுவியது.



தமிழ்ப் படம் 2


சிஎஸ் அமுதன் இயக்கத்தில், கண்ணன் இசையமைப்பில் சிவா, ஐஸ்வர்யா மேனன் மற்றும் பலர் நடித்த படம். 2010ம் ஆண்டில் வெளிவந்த இப்படத்தின் முதல் பாகம் கமர்ஷியல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்று படத்தை வாங்கிய அனைவருக்கும் லாபத்தைக் கொடுத்தது. முந்தைய ஹிட் படங்களைக் கிண்டலடித்து அமைக்கப்பட்ட காட்சிகளுடன் அந்தப் படம் அமைந்தது. ஆனால், இரண்டாம் பாகத்தில் அப்படி அதிகமான காட்சிகள் இல்லை என்றாலும் இந்தப் படம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்று ஆச்சரியப்படுத்தியது.

விஸ்வரூபம் 2


கமல்ஹாசன் இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைப்பில், கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜா குமார் மற்றும் பலர் நடித்த படம். முதல் பாகம் எடுக்கப்பட்ட சமயத்திலேயே இரண்டாம் பாகத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டன. 2013ம் ஆண்டில் வெளிவந்த முதல் பாகம், சர்ச்சையின் காரணமாக பரபரப்பை ஏற்படுத்தி வெற்றிப்படமாகியது. அந்த சர்ச்சைதான் அப்படத்தின் வெற்றிக்குக் காரணமோ என இரண்டாம் பாகத்தின் தோல்வி யோசிக்க வைத்தது. வந்த சுவடு தெரியாமல் படுதோல்வியைச் சந்தித்தது விஸ்வரூபம் 2.

சாமி 2


ஹரி இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், விக்ரம், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்த படம். 2003ல் வெளிவந்த இப்படத்தின் முதல் பாகம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று வசூலை அள்ளிக் கொடுத்தது. 15 வருடங்களுக்குப் பிறகு வந்த 'சாமி 2' படம் முதல் பாகத்தில் இருந்த அளவிற்கு ஐம்பது சதவீதம் கூட இல்லாமல் எதற்கு இந்த இரண்டாம் பாகத்தை எடுத்தார்கள் என ரசிகர்களை கேள்வி கேட்க வைத்தது.

சண்டக்கோழி 2


லிங்குசாமி இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்த படம். 2005ல் வந்து பெரிய வெற்றியைப் பெற்றது முதல் பாகம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளிவந்த இரண்டாவது பாகத்தில் முதல் பாகத்தில் இருந்த அளவிற்கு ஆக்ஷனும், பரபரப்பும் இல்லாததால் படம் தோல்வியைத் தழுவியது. முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் இருக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.



2.0


ஷங்கர் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய்குமார் மற்றும் பலர் நடித்த படம். முதல் பாகம் 'எந்திரன்' ஆக 2010ல் வெளிவந்து தமிழ்த் திரையுலக வரலாற்றில் அதிக வசூலைப் பெற்ற படமாக அமைந்தது. ஆனால், இரண்டாம் பாகம் அதிக செலவில் எடுக்கப்பட்ட படம் என்ற பெருமையை மட்டுமே பெற முடிந்தது. செலவு செய்த அளவிற்கு இந்தப் படத்தின் வசூல் அமையவில்லை என்பது பெரிய சோகம். ஹிந்தி நடிகர் அக்ஷய்குமார் நடித்ததால் ஹிந்தியில் மட்டும் 200 கோடி ரூபாய் வசூலைப் பெற்று லாபத்தைக் கொடுத்தது. தமிழ், தெலுங்கில் வெற்றிக்கு அருகில் வந்து தோல்வியைத் தழுவியது.

மாரி 2


பாலாஜி மோகன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். 2015ல் வெளிவந்த 'மாரி' படம் தனுஷுக்கு தனி அடையாளத்தைக் கொடுத்தது. வசூல் ரீதியாக பெரிய லாபம் இல்லை என்றாலும் ஓரளவுக் வசூலை தந்த படமாக அமைந்தது. மாரி கதாபாத்திரம் பேசப்பட்ட ஒன்றாக இருந்தது. அந்த பிரான்ட்டை மீண்டும் பயன்படுத்தி 'மாரி 2' படத்தை நேற்று வெளியிட்டிருக்கிறார்கள். முதல் பாகம் அளவிற்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் படமாக அமையவில்லை என்றாலும், வெற்றிப் படமாக அமையுமா என்பது அடுத்த சில நாட்களில் தெரியும்.

2018ல் வெளிவந்த இரண்டாம் பாகப் படங்களில் வெற்றி பெற்ற படங்களான 'கலகலப்பு 2, தமிழ்ப் படம் 2' தவிர மற்ற படங்கள் முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தேவையிருந்தால் மட்டுமே இரண்டாம் பாகப் படங்கள் வெளிவருவது சிறந்தது என்பதை அந்தப் படங்களுக்குரியவர்களுக்கு அவை புரிய வைத்திருக்கும். முதல் பாகத்தில் கிடைத்த வரவேற்பினால், கடமைக்கு ஒரு கதையை உருவாக்கி, அதை வசூலாக்க முயற்சித்ததன் விளைவே முக்கால்வாசி இரண்டாம் பாகப் படங்களின் தோல்விக்குக் காரணம்.

இரண்டாம் பாகத்தை உருவாக்கிய சில இயக்குனர்கள் பட வெளியீட்டிற்கு முன்னால், 3ம் பாகங்கள் வந்தாலும் வரும் என்று அறிவித்தார்கள். அப்படி அறிவித்தவர்களின் இரண்டாம் பாகப் படங்கள் தோல்வி அடைந்த காரணத்தால் 3ம் பாகப் படங்கள் வருவதற்கு வாய்ப்பில்லை.

எத்தனை பாகம் எடுத்தாலும் 'கன்டென்ட்' சிறப்பாக இருந்தால் மட்டுமே வெற்றி என்பது புதிதாக இரண்டாம் பாகம் எடுக்க ஆசைப்படுபவர்களுக்கும் சேர்த்து புரிந்திருக்கும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in