Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

வெளியீட்டுச் சிக்கல், ஹீரோக்களின் 'ஈகோ' மோதல்?

07 டிச, 2018 - 12:21 IST
எழுத்தின் அளவு:
Movie-release-:-Actors-Ego-clash.?

கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகைகளுக்கு வெளிவர உள்ள புதிய படங்களால் அன்றைய தினங்களில் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. இந்தப் போட்டியை 'பேட்ட' படத்தின் மூலம் ஆரம்பித்து வைத்தார்கள்.


பொங்கலுக்கு 'விஸ்வாசம்' வெளியாகும் என்று எப்போதோ அறிவித்தார்கள். ஆனால், அதே தினத்தில் 'பேட்ட' படமும் வெளிவரும் என அவர்களும் அறிவித்தார்கள். பின்னர் சிம்பு படமான 'வந்தா ராஜாவாதான் வருவேன்', 'எல்கேஜி' ஆகிய படங்களும் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டன.துவக்கி வைத்த டிச.,21
2019ல் ஆரம்பமாகப் போகும் அந்த பொங்கல் போட்டியின் முன்னோட்டமாக 2018 டிசம்பர் 21 அமைய உள்ளது. அன்றைய தினத்தில் “மாரி 2, அடங்க மறு, கனா, சிலுக்குவார்பட்டி சிங்கம்'' ஆகிய படங்களும் 20ம் தேதி 'சீதக்காதி' படமும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.

உடன்பாடில்லை
ஒரே சமயத்தில் இத்தனை பெரிய படங்கள் மோதுவதைத் தவிர்க்க தயாரிப்பாளர் சங்கம் சார்பாக கூட்டம் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் காரசார விவாதமும் நடந்தது. ஆனால், யாருமே அவர்களது வெளியீட்டுத் தேதியை மாற்றி வைக்க சம்மதிக்கவில்லை. அதனால், தயாரிப்பாளர் சங்கம் கிறிஸ்துமல், பொங்கல் பண்டிகையில் தயாரிப்பாளர்கள் அவரவர் விருப்பப்படி படங்களை வெளியிட்டுக் கொள்ளலாம் என அறிவித்தது.

இனி கடும் நடவடிக்கை
2019 பொங்கலுக்குள் அனைத்து சங்கங்களும் இடம் பெறும் ஒரு கூட்டத்தை தயாரிப்பாளர் சங்கம் நடத்த உள்ளதாம். பொங்கலுக்குப் பிறகு வெளியாக உள்ள படங்களை முறைப்படுத்த திட்டமிட்டுள்ளார்களாம். அதன்படி நடந்து கொள்ளாத தயாரிப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஈகோ மோதல்?
கிறிஸ்துமஸ், பொங்கல் படங்களுக்குள் ஏன் இப்படி தவிர்க்க முடியாத போட்டி என திரையுலகத்தில் விசாரித்த போது அது ஹீரோக்களுக்குள் இருக்கும் 'ஈகோ' மோதல் என்று சொல்கிறார்கள். 'மாரி 2' படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், 'கனா' படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' படத்தின் தயாரிப்பாளர் விஷ்ணு விஷால், 'அடங்க மறு' படத்தின் தயாரிப்பாளர் ஜெயம் ரவியின் மனைவி குடும்பத்தினர், ஹீரோக்களே அவர்களது படங்களின் தயாரிப்பாளர்களாக இருப்பதால் ஒருவரும் விட்டுக் கொடுக்க மறுக்கிறார்களாம். மேலும், பொங்கலுக்கு வெளிவரும் படங்களில் ரஜினிகாந்த், அஜித், சிம்பு ஆகியோரும் அந்த 'ஈகோ'வால்தான் பிடிவாதமாக இருக்கிறார்கள் என்கிறார்கள்.

தற்போது இந்த வெளியீட்டுக்களுக்காக தியேட்டர்களைப் பிடிக்க கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளதாம். தமிழ் சினிமாவை தலை கவிழ வைக்க வேறு யாரும் வரத் தேவையில்லை, இவர்களே போதும் என பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சில திரையுலக மூத்தவர்கள் முணுமுணுக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
ராஜாவும், ராயல்டியும் : என்னதான் பிரச்னை?ராஜாவும், ராயல்டியும் : என்னதான் ... பல கோடிகளை வசூலித்த நவம்பர் மாதம் பல கோடிகளை வசூலித்த நவம்பர் மாதம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

NPKARTHIK - coimbatore,இந்தியா
08 டிச, 2018 - 12:17 Report Abuse
NPKARTHIK முன்பெல்லாம் எல்லா படங்களும் எல்லா தேதிகளிலும் பொதுவா பண்டிகை காலங்களில் ரிலீஸ் ஆகும். ஒரு பேமிலி ரெண்டு அல்லது மூணு படம் கூட பார்ப்பாங்க. என்ன திரை அரங்குகள் குறைவாகவே ஒரு படத்தை எடுத்துப்பாங்க. இப்போ ஒரே நாள்ல ஐநூறு மேல பிரதிகள் தமிழ்நாடு மட்டும் ரிலீஸ் பண்ண ட்ரை பண்ணா எப்படி? படங்களும் ஐம்பது நாள் மேல ஓடும். பத்து நாள்ல பணம் பண்ண நினச்சா போட்டா போட்டி தான். தியேட்டர் பிடிப்பதே பெரிய வேலையா போய்டும்.
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
07 டிச, 2018 - 18:59 Report Abuse
Vasudevan Srinivasan ஏற்கனவே சொல்லியுள்ளேன் மீண்டும் சொல்கிறேன் திரைப்படம் தயாரிப்பது ஒரு தொழில் இதில் போட்டி வியாபாரம் தவிர்க்க முடியாதது..அவரவர்களின் வசதி மற்றும் பலத்திற்கு தக்க வியாபாரம் செய்ய முயல்வது சகஜமே..இதில் சங்கம் தலையிடுவது சரியோ.. பல ஆண்டுகளாக தியாகராய நகர் பனகல் பார்க்கில் நல்லி மற்றும் குமரன் ஸ்டோர்கள் வியாபாரம் செய்து வரும்பொழுது அங்கு சரவணா ஸ்டோர்கள் வருவது தவறு என்று சொல்ல முடியுமா....? தொழில் நுட்ப திருட்டுத்தனம் (பைரஸி) போட்டிதான் முக்கிய காரணம் திரைப்படங்களின் தோல்விக்கு.. உண்மையான திரைப்பட ரசிகர்கள் இளைஞர்களே அப்படிப்பட்டவர்கள் திரை அரங்கில் பார்ப்பதையே பெரிதும் விரும்புவர் அவர்களை மாற்று வழிக்கு (பைரஸி) அனுப்புவது சினிமா பார்க்க ஆகும் செலவு.. பார்க்கிங் கட்டண கொள்ளை, சொந்த தின்பண்டங்களை அனுமதிக்காத கொள்ளையடிக்கும் திரை அரங்க கேன்டீன் கொள்ளை.. மேலும் ஆன்லைன் புக்கிங் செய்தால் ஒவ்வொரு டிக்கெட்டுக்கு தனித்த தனியாக சேவை கட்டணம் வாங்கும் கொள்ளை என்று பல விஷயங்கள்தான் ரசிகர்களை தியேட்டர்ப்பக்கம் வருவதை கட்டுப்படுத்துகிறது..
Rate this:
Radj, Delhi - New Delhi,இந்தியா
07 டிச, 2018 - 18:12 Report Abuse
Radj, Delhi போட்டி இருந்தால் தான் யார் சூப்பர் ஸ்டார் ஹீரோ என்று தெரியும். போட்டி இல்லாவிட்டால் சப்பை படம் கூட மக்கள் பார்க்கணும் என்று தயாரிப்பாளர் எதிர்பார்க்கிறது நல்லதல்ல.
Rate this:
James - ABUDHABI,ஐக்கிய அரபு நாடுகள்
07 டிச, 2018 - 16:48 Report Abuse
James இப்போ உங்க சினிமால வரலன்னு யாரு அழுதா ? எல்லா மொக்க படமாத இருக்குபோது நீங்களாம் நடிக்காம இருந்தாலே போதும்
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
07 டிச, 2018 - 15:57 Report Abuse
Endrum Indian ஹீரோன்னா சும்மாவா, ஒருத்தன் புரட்சி தலைவன், இன்னொருவன் தளபதி, இன்னொருவன் தலை......ஆகா மொத்தம் யாரும் சாதாரணர்கள் கிடையாது இந்த சினிமா எண்ணம் மாய உலகத்தில். இதில் செய்யும் நல்ல கெட்ட காரியங்கள் ௦.000000000001 % கூட இவர்களால் நிஜ வாழ்க்கையில் இவர்களால் செய்ய முடியாது. அதுங்களுக்கு நம்ம ஜனம் கர்ப்பூரம் ஏற்றி, பாலாபிஷேகம் செய்து.........என்ன என்னவோ கருமங்கள் செய்வானுங்க இவங்க பிளெக்ஸ் கட் அவுட்டுக்கு. நாசமாப்போச்சு நம்ம டாஸ்மாக் நாடு இவனுங்களாலே, டாஸ்மாக்களே, இலவசத்தாலே. இதுலே இவனங்களுக்கு யாரு பெரியவன் என்ற மதர்ப்பு???சென்னை பின்னாடி ரசிக வெறியர்கள் மன்றம் இருக்கின்றது அல்லவா.
Rate this:
Susi - ,
08 டிச, 2018 - 11:52Report Abuse
Susiசரியான பதிவு... இந்த கூத்தாடிகள் தொல்ல தாங்க முடியல...
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Ispet rajavum idhaya raniyum
  Tamil New Film Viswasam
  • விஸ்வாசம்
  • நடிகர் : அஜித் குமார்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :சிவா
  Tamil New Film Neeya 2
  • நீயா 2
  • நடிகர் : ஜெய்
  • நடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா
  • இயக்குனர் :எல்.சுரேஷ்
  Tamil New Film Monster
  • மான்ஸ்டர்
  • நடிகர் : எஸ்.ஜே.சூர்யா
  • நடிகை : பிரியா பவானி சங்கர்
  • இயக்குனர் :நெல்சன் வெங்கடேசன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in