சென்னை அபிராமியில் 7டி தியேட்டர் திறப்பு | கிரிக்கெட் சூதாட்டம் : இந்தி நடிகர் கைது | வீடு திரும்பினார் டி.எம்.எஸ்! | சிங்கம்-2 ஆடியோ ரிலீஸ்: ஜூன் 2ம் தேதிக்கு மாற்றம் | கால் கேர்ள் ஆக நடிப்பது ஏன்? சார்மி விளக்கம்!! | குஷ்பூவின் சமூக அக்கறை! | லட்சுமிராயை துரத்தும் வருமான வரித்துறை அதிகாரிகள்! | சோனியா அகர்வாலின் சைடு பிஸ்னஸ்! | சைவத்துக்கு மாறினார் சிம்பு! | பேஸ்புக்கில் கடலை போடும் சர்வானந்த்! |
சிவாஜியின், "கர்ணன் படத்திற்கு போட்டியாக, "குடியிருந்த கோவில் படத்தை மறு வெளியீடு செய்ய வைத்து, சென்னையில் நேற்று திருவிழா கொண்டாடினர் எம்.ஜி.ஆர்., ரசிகர்கள்.
தமிழக திரையுலகில் அசைக்க முடியாத மன்னர்களாய் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் வாழ்ந்து மறைந்தவர்கள். இவர்களுக்கு மாற்று இல்லை என்கிற அளவுக்கு, திரையுலக வரலாற்றில் வசூல் சாதனை படைத்ததோடு, தமிழக ரசிகர்களின் இதயங்களில் நீங்காத இடம் பிடித்தவர்கள் இந்த இருவர்.இவர்களின் மறைவிற்கு முன்பும், பின்பும் எத்தனையோ நடிகர்கள் அறிமுகமாகி, குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றாலும், இவர்களின் சாதனையை முறியடிக்க முடியவில்லை; உயரத்தை தொடவில்லை. தமிழக திரையரங்குகள் பலவற்றை இப்போதும், எம்.ஜி.ஆரும், சிவாஜியும் அலங்கரித்த வண்ணம் இருக்கின்றனர்.
இன்றும் வசூல் மன்னர்கள்: நல்ல பழக்கங்களை மட்டுமே கொண்ட கதாநாயகனாக திரையில் வாழ்ந்த எம்.ஜி.ஆரும், பல சரித்திர புருஷர்களை, தேசத் தலைவர்களை நம் கண் முன் நிறுத்திய சிவாஜியும் இன்றும் வசூல் மன்னர்களாகவே தொடர்கின்றனர். அர்த்தமில்லாத இன்றைய திரைப்படங்கள் பலவற்றைப் பார்த்து வெறுத்துப்போன, சினிமா ரசிகர்கள், இவர்களின் படங்களை இன்றும் ஆராதித்து வருகின்றனர்.அதன் எதிரொலியாக, இவர்கள் நடித்து, "ஹிட் அடித்த படங்கள் மறு வெளியீடு செய்யப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், 1960ம் ஆண்டு வெளியான சிவாஜி நடித்த, "கர்ணன் திரைப்படம் டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்பட்டு, கடந்த 16ம்தேதி வெளியானது.சென்னையில் பிரபல திரையரங்குகளான சத்யம், அபிராபி உள்ளிட்டவற்றிலும் திரையிடப்பட்டு, "ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறான் கர்ணன். ஏற்கனவே, "உலகம் சுற்றும் வாலிபன், நாடோடி மன்னன் போன்ற படங்களை மறு வெளியீடு செய்த, "திவ்யா பிலிம்ஸ் நிறுவனத்தினரே கர்ணனையும் மறு வெளியீடு செய்துள்ளனர்.
ஓயவில்லை யுத்தம்: தமிழ் திரையுலகின் இரு துருவங்களாக இருந்த எம்.ஜி.ஆர்., - சிவாஜியின் ரசிகர்களுக்குள் அப்போது இருந்த ஆர்வம், போட்டி இப்போதும் குறையவில்லை. சிவாஜியின், "கர்ணன் படத்திற்கு கிடைத்த வரவேற்பும், செய்யப்பட்ட விளம்பரங்களும் எம்.ஜிஆர்., ரசிகர்களை சூடேற்ற, உடனே சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டரில் எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா இணைந்து நடித்த, "குடியிருந்த கோவில் திரைப்படத்தை திரையிடவைத்து, திருவிழா கொண்டாடினர்.படம் திரையிடப்பட்ட நேற்று மாலை, தியேட்டர் வளாகம் முழுக்க எம்.ஜி.ஆர்., பக்தர்களின் பேனர்களும், கட்-அவுட்களுமாக நிரம்பி வழிந்தன. புதிய ரிலீஸ் படம் போல் உற்சாகம் பொங்க, தியேட்டரில் குவிந்த ரசிகர்கள், எம்.ஜி.ஆரின் கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்து தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
பால், பழம், பன்னீர் என்று விதவிதமான அபிஷேகங்கள் ஒருபுறம் நடக்க, மறுபுறம் ரசிர்கர்களும், ரசிகைகளும் குத்தாட்டம் போட்டு குஷியாகினர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அ.தி.மு.க.,வில் எந்த பொறுப்பும் இல்லாத, எம்.ஜி.ஆரின் பக்தர்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.எம்.ஜி.ஆர்., ரசிகர்களின் இந்த கொண்டாட்ட விவகாரம் சிவாஜி ரசிகர்களுக்கும் கசிய, அவர்களும் நேற்று மாலை சிவாஜியின் கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் நடத்தியது ஹைலைட்.
வதம் ..................
வதம் இது ஒரு திரைப்படத்தின் பெயர் .........விரைவில் திரைக்கு வர இருப்பதாக சொல்கிறார்கள் .....இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் பகுதியில் டிசம்பர் மாத தாங்கமுடியாத குளிரில் இரவும் பகலும் நடந்ததாம் .....இதில் பணியாற்றிய இயக்குனர் முதல் அனைத்து தொழிலாளர்களும் மிக மிக கடினமாக உழைத்தார்கலாம் .......ஆனால் வதம் படத்தின் தயாரிப்பாளர் வேலையை வாங்கிவிட்டு இன்றுவரை யாருக்கும் உழைத்ததற்கான ஊதியத்தை ஒரு பைசா கூட தரவில்லையாம் .....
படப்பிடிப்பின் பொழுது சாப்பாடுகூட பலநாட்கள் சரியாக தராமல் பட்டினியோடு வேலை பார்த்தார்களாம் ......
தமிழ் திரையுலகில் இதுவரை இப்படி தொழிலாளர்களின் வயிற்றில் அடித்தவர்களை பத்து பைசா தராமல் படம் எடுத்த சாமார்த்தியமான தயாரிப்பாளரை கண்டதில்லை என ஏமாற்றப்பட்டதையும் மறந்து பாராட்டுகின்றனர் ...திரைப்பட தொழிலாளர்கள் ........
கலவாணி படத்தை தயாரித்தவர் தான் வதம் படத்தின் தயாரிப்பாளர் ....
கர்ணன் முதலில் ரிலீஸ் ஆகும் பொழுது சூப்பர் ஹிட் ஆக வில்லை என்றாலும் படு தோல்வி ஆகவில்லை. ஆனால் பலமுறை திரை அரங்குகளில் மீண்டும் மீண்டும் திரையிடப்பட்டு விநியோகஸ்தர்களுக்கு கொள்ளை லாபம் ஈட்டி தந்த வசூல் திரை படம் கர்ணன் . விநியோகஸ்தர்கள் லாபம் பெற்ற படம் என்று சொன்னால் அது ஒன்றும் தோல்வி படம் அல்ல.
அதுபோல் சிவாஜி நடிப்பை எம். ஜி. ஆர். அவர்களின் சமூக, அரசியல் வாழ்வுடன் ஒப்பிடுவது குழந்தைதனம். சிவாஜி சினிமா நடிப்பில் ஹீரோ. எம்.ஜி.ஆர். உண்மை வாழ்வில் ஹீரோ.
Dear Friends,
Sivaji starred Karnan is an epic, it has lot of ingredients of (for) life. The real Karnan has been brought in front of us through silver screen by the all time legend Mr. Sivaji Ganesan. The tremendous performance of the Hero "Sivaji" can never be compared to any other film personality in the globe.Please watch the movie you will find "Karnan" in Mahabarath. Karnan was not a failure at the time of release, it went on a normal range, collection. Now, it has created a record of collecting a crore within 3 to 6 days. One thing to remember hard work, worship for work is always rewarded cum praised