Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

இளையராஜா பற்றி சில சுவையான தகவல்கள்

28 ஜன, 2018 - 15:11 IST
எழுத்தின் அளவு:
ilayaraja-special-article

இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக நெட்டிசன்கள் இளையராஜாவை புகழ்ந்து வருகிறார்கள். தங்களுக்கு தெரிந்த அவரைப் பற்றிய சுவையான தகவல்களையும் பகிர்ந்து வருகிறார்கள். அவற்றிலிருந்து சில தகவல்கள்...

* ஒரு பாடலை உருவாக்க வெளிநாட்டு பயணமோ, அழகான லொகேஷன்களோ, வார அல்லது மாதக்கணக்கில் நேரமோ இளையராஜாவுக்குத் தேவைப்பட்டதில்லை. தென்றல் வந்து தீண்டும்போது... என்ற பாடலை உருவாக்க இசைஞானி எடுத்துக் கொண்டது வெறும் அரை மணி நேரம்தான்.


* இளையராஜா 12 மணி நேரத்தில் மொத்த ரீரிகார்டிங்கையும் செய்துமுடித்த படம் நூறுவாது நாள்"


* சிகப்பு ரோஜாக்கள் படத்திற்கான ரீரிகார்டிங்கிற்கு ஆன மொத்த செலவு வெறும் பத்தாயிரம்.. மூன்றே நாளில் வெறும் ஐந்தே ஐந்து இசைக்கலைஞர்களை கொண்டு அந்த படத்திற்கு இசை சேர்க்கப்பட்டது


* எல்லோரும் இசையை வாசித்துதான் காட்டுவார்கள். ஆனால் ராஜா மட்டும்தான் இசையை பக்கா நோட்ஸாக இசைக் கலைஞர்களுக்கு எழுதியே கொடுப்பவர்.


* அமிர்தவர்ஷினி என்ற மழையை வரவழைப்பதற்கான தனித்துவமுடைய ராகத்தில் "தூங்காத விழிகள் ரெண்டு" பாடலை உருவாக்கினார்.


* இளையராஜாதான் முதல்முறையாக ரீதிகவுள என்ற ராகத்தை சினிமாவில் பயன்படுத்தினார் ."கவிக்குயில்" என்னும் படத்தில் "சின்ன கண்ணன் அழைக்கிறான்" என்ற பாடல்தான் அது.


கவுண்டர்பாயிண்ட் என்ற யுக்தியை சர்வதேச இசையின் நுட்பங்களை இசைஞானி சிட்டுக்குருவி படத்தில் இடம்பெற்ற "என் கண்மணி" என்ற பாடலில் பயன்படுத்தினார்.


* இந்தியத் திரை இசையில் காயத்ரி என்ற படத்தில்தான் முதன் முதலாக இசைஞானி "எலெக்ட்ரிக் பியானோ" உபயோகபடுத்தினார்.


* செஞ்சுருட்டி ராகத்தில் இசையமைத்த ஒரே பாடல் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு. 16 வயதினிலே படத்தில் இடம்பெற்றது. கவிஞர் கண்ணதாசன் இந்த பாடலை 30 நிமிடத்தில் எழுதிக் கொடுத்தார்.


* உலகில் வேறு எந்த இசையமைப்பாளரும் முயற்சி செய்திருக்கவே முடியாத விஷயம்., ஓர் இசையமைப்பாளர் ஏற்கனவே இசையமைத்து, பாடல் வரிகள் எழுதப்பட்டு, படமாக்கப்பட்டு, அந்த சவுண்ட் ட்ராக்கை அப்படியே நீக்கிவிட்டு, அந்தக் காட்சியை மட்டும் அப்படியே வைத்துக்கொண்டு, உதட்டசைவு, உடலசைவு, காட்சித்தேவை அனைத்துக்கும் பொருத்தமாக புதிய இசையை எழுதி வியப்பின் உச்சிக்கு நம்மை அழைத்து சென்றவர் இசைஞானி . அந்தப் படம் ஹேராம்.* ஒரு ரீல் திரையில் பார்த்தால் போதும் உடனே இசைக்குறிப்புகளை எழுத ஆரம்பித்து விடுவார். அதை வாசித்தாலே போதும். அது மிகச்சரியா பொருந்தும்.


* ஆசியாவிலே முதன் முறையாக சிம்பொனி இசை அமைத்தவர் இசைஞானி, சிம்போனி கம்போஸ் பண்ண குறைஞ்சது ஆறு மாசமாவது ஆகும். வெறும் 13 நாளில் மற்ற கம்போஸர்களை மிரள ச் செய்தவர் இசைஞானி.


* விசிலில் டியூன் அமைத்து அதை ஒலினாடாவில் பதிவு செய்து பின்பு பாடகரை வைத்து பாடிய பாடல் "காதலின் தீபம் ஒன்று".


* படத்தின் கதையை கேட்காமல் பாடலுக்கான சூழ்நிலைகளை மட்டும் கேட்டு இசையமைத்த ஒரே படம், "கரகாட்டக்காரன்".


* ஒரு படத்துக்கு பின்னணி இசை அமைக்கும் முன்பு ஒரு முறைக்கு இரண்டு முறை படத்தை பார்ப்பார், மூன்றாவது முறை படம் திரையில் ஆரம்பிக்கும்போது நோட்ஸ் எழுத ஆரம்பிச்சிடுவார், அவர் ஆரம்பிச்சு முடிக்கும்போது படம் சரியாக முடியும். அந்த அளவுக்கு எந்த இசையமைபாளராலும் நோட்ஸ் எழுத முடியாது.


* இந்தியாவிலேயே பின்னணி இசை கேசட்டாக வந்து ஹிட்டான ஒரே படம் பிள்ளை நிலா


"பருவமே புதிய பாடல் பாடு" என்ற பாடலுக்கு தொடையில் தட்டி தாளத்திற்கு புதிய பரிமாணத்தை கொடுத்தவர் இளையராஜா.


* இந்தியாவில் முதல் முறையாக சிறந்த பிண்ணனி இசைக்கான விருதை வாங்கியவர் இசைஞானி (படம்: பழசிராஜா )


* இசைஞானி முதன் முதலாக ஸ்டீரியோ முறையில் பாடல்களை பதிவு செய்த படம் பிரியா.


137 வாத்தியங்கள் பயன்படுத்தப்பட்ட பாடல் "சுந்தரி கண்ணால் ஒரு சேதி"


இசைஞானியின் பாடலுக்காக கதை எழுதி வெற்றிக்கண்ட படங்கள் "வைதேகி காத்திருந்தால்", "அரண்மனைக்கிளி".


* இந்தியாவுக்கு கம்ப்யூட்டர் இசையை அறிமுகப்படுத்தியவர் இசைஞானி ( புன்னகை மன்னன் )


அதிகபட்சமாக, அதாவது 24 நாள் பின்னணி இசைகோர்ப்புக்காக எடுத்துக்கொண்ட மலையாளப் படம் காலாபாணி . தமிழில் சிறைச்சாலை .


Advertisement
யு டியுப் தமிழ்ப்படப் பாடல், யார் நம்பர் 1 ?யு டியுப் தமிழ்ப்படப் பாடல், யார் ... தமிழ் சினிமாவும், தமிழக அரசியலும்...! ஒரு அலசல் தமிழ் சினிமாவும், தமிழக அரசியலும்...! ...


வாசகர் கருத்து (15)

Senthil Nathan - Singapore,சிங்கப்பூர்
30 ஜன, 2018 - 18:39 Report Abuse
Senthil Nathan I accept he is a great music director, but when there was a time when everybody thought Illayaraja was the ultimate, AR Rahman overtook him and he has proved he is also a great music director. Now everybody are following AR Rahman's style. Ar Rahman also is a leg
Rate this:
Parthasarathy Ravindran - Chennai,இந்தியா
10 பிப், 2018 - 20:26Report Abuse
Parthasarathy RavindranWhat do you mean by over took. Does he have the ability to compose as quick as RAJA. Music has to be spontaneous, tinkering it for days and months together to get the final output is not music. All of the current MD's are very good in tinkering only....
Rate this:
p.s.palani - vandavasi,இந்தியா
29 ஜன, 2018 - 16:20 Report Abuse
p.s.palani இளையராஜா ஐயா அவர்களுக்கு இத்தனை பெயரும் புகழும் வெற்றியும் இறைவன் கொடுத்த வரம் .வாழ்த்துக்கள் ஐயா ...
Rate this:
a.s.jayachandran - chidambaram,இந்தியா
29 ஜன, 2018 - 15:30 Report Abuse
a.s.jayachandran இசை கடவுள்
Rate this:
Shanmuga Sundaram - Bangalore,இந்தியா
29 ஜன, 2018 - 14:32 Report Abuse
Shanmuga Sundaram agreed... but I am not able to understand why such things are not coming from him... he should continue to insist that "song wordings" should take priority than music so that listeners chant it...
Rate this:
Ramamoorthy P - Chennai,இந்தியா
29 ஜன, 2018 - 14:19 Report Abuse
Ramamoorthy P இவ்வளவு திறமையும் இறை பக்தியும் மாமிசம் தவிர்த்தும் வாழ்பவர் நிச்சயம் பிராமணர் தான். இதை பாரதி ராஜாவுக்கு சந்தேகமே வேண்டாம்.
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Kanni Rasi
  • கன்னி ராசி
  • நடிகர் : விமல்
  • நடிகை : வரலெட்சுமி
  • இயக்குனர் :முத்துக்குமரன்.எஸ்
  Tamil New Film Kalavani Mappillai
  Tamil New Film Pakka
  • பக்கா
  • நடிகர் : விக்ரம் பிரபு
  • நடிகை : நிக்கி கல்ராணி ,பிந்து மாதவி
  • இயக்குனர் :எஸ்.எஸ்.சூர்யா
  Tamil New Film GajiniKanth
  • கஜினிகாந்த்
  • நடிகர் : ஆர்யா
  • நடிகை : சாயிஷா சைகல்
  • இயக்குனர் :சந்தோஷ் பி ஜெயக்குமார்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in