Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

2017 தமிழ் சினிமா - சாதித்ததும், சறுக்கியதும்

31 டிச, 2017 - 12:43 IST
எழுத்தின் அளவு:
tamil-cinema-in-2017

2017ம் ஆண்டு தமிழ் சினிமா சில தடுமாற்றங்களைச் சந்தித்து, கடைசி இரண்டு மாதங்களில் கொஞ்சம் தலை நிமிர்ந்தது. சில ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 200ஐத் தாண்டியது. இத்தனை படங்கள் வெளிவந்தாலும், அதில் 20 படங்கள் கூட வெற்றி பெற முடியாத நிலை தொடர்வது சோதனை.

ஒவ்வொரு வாரமும் சராசரியாக நான்கு படங்கள் வருகின்றன. பெரிய ஹீரோக்களின் படங்களே ஓடுவதற்கு தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில், சிறு ஹீரோக்கள் படங்களும், புதுமுகங்கள் படங்களும் அதிக கவனம் ஈர்க்க முடியவில்லை.


கதையை மட்டுமே நம்பி எடுக்கப்படும் படங்கள், வெற்றிகரமாக ஓடியுள்ளன. ஆண்டு கடைசியில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்த அறம், அருவி ஆகியவை ஆச்சரிய வரவேற்பை பெற்று மற்ற படைப்பாளிகளை அதிர்ச்சியடைய வைத்தன. இரண்டு படங்களுமே அறிமுக இயக்குனர்கள் இயக்கியவை.


கவனம் ஈர்க்க காரணம்


அறம் படத்தில் முன்னிணி நடிகை நயன்தாராவும், அருவி படத்தில் அறிமுக நடிகை அதிதி பாலனும் நடித்திருந்தார்கள். இந்த ஆண்டின் சிறந்த நடிகைகள் பட்டியல் உருவானால் இவர்கள் இருவருமே டாப் லிஸ்ட்டில்தான் இருக்க வேண்டும்.


அதிர்ச்சி தோல்விகள்


இந்த ஆண்டின் அதிர்ச்சி தோல்விப் படங்கள் விவேகம், காற்று வெளியிடை, வேலையில்லா பட்டதாரி 2. அஜித் நடித்து வெளிவந்த விவேகம். இதில் வேதாளம் கூட்டணி மீண்டும் இணைந்த விவேகம் படம் எதிர்பார்ப்புகளை எகிற வைத்து, படுதோல்வியைத் தழுவி அதிக அதிர்ச்சியடைய வைத்தது.


தனுஷ் நடித்து வெளிவந்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் தோல்வியும் எதிர்பார்க்காதது. முதல் பாகம் வெற்றியைப் பெற்றதால், 2வது பாகமும் ஓடிவிடும் என எதிர்பார்த்தார்கள். அழுத்தமில்லாத கதையும், உப்பு சப்பில்லாத முடிவும் படத்தைத் தோல்வுயுற வைத்தன.


ஓகே கண்மணிக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில், கார்த்தி - அதிதி ராவ் நடித்த காற்று வெளியிடை படம், மணிரத்னத்தின் ஸ்டைல் என்று எந்த அம்சமும் இல்லாமல் தோற்றது.


மெர்சலும் - ஜிஎஸ்டி சர்ச்சையும்


முன்னணி ஹீரோக்களில், இந்த ஆண்டில் இரண்டு படங்களில் நடித்தவர் விஜய். அவர் நடித்து பொங்கலை முன்னிட்டு வெளிவந்த பைரவா சுமாரான வரவேற்பைப் பெற்றது. அதே சமயம் தீபாவளிக்கு வெளிவந்த மெர்சல் சர்ச்சையைக் கிளப்பி வசூலை ஈட்டியது.


கடுமையாக விமர்சிக்கப்பட்ட படமாக இருந்தாலும் சர்ச்சைகளால் வசூல் சாதனை புரிந்தது. தமிழ்நாட்டில் மட்டும் இந்தப் படம் சுமார் 130 கோடியை வசூலித்ததாகச் சொல்லப்படுகிறது.


ரஜினி - கமல் இல்லை


ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடித்து, இந்த ஆண்டு ஒரு படம் கூட வரவில்லை. மற்ற சீனியர் ஹீரோக்களில் சரத்குமார் நடித்த சென்னையில் ஒரு நாள் 2 படம் மட்டுமே வெளிவந்து தோல்வியைத் தழுவியது. பார்த்திபன் இயக்கம் நடிப்பில் வெளிவந்த கோடிட்ட இடங்களை நிரப்புக, வெற்றி இடத்தை நிரப்பாமலேயே வந்த வேகத்தில் போய்விட்டது.


முன்னணியில் விஜய்சேதுபதி


இந்த ஆண்டில் குறிப்பிட்ட வெற்றிகளைக் கொடுத்ததில் விஜய் சேதுபதி முன்னணியில் இருக்கிறார். அவர் நடித்து வெளிவந்த படங்களில் கவண், விக்ரம் வேதா, கருப்பன் ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும் லாபத்தைக் கொடுத்ததாக கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.


மகேஷ் பாபு பணால்


அறிமுகமான நடிகர்களில் தெலுங்குத் திரையுலகின் முன்னணி ஹீரோவான மகேஷ் பாபு குறிப்பிட வேண்டியவர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியும் அவர் நடித்து வெளிவந்த ஸ்பைடர் படம் தோல்வியைத் தழுவியது. தமிழில் அறிமுகமாகும் ஆசையில் வந்த மகேஷ் பாபு, ஏமாந்து போனதால். இனி, தமிழ் பக்கம் அவர் வருவாரா என்பது சந்தேகம்தான்.


கவனிக்க வைத்த வசந்த் ரவி


மற்ற புதுமுக நடிகர்களில் தரமணி படத்தில் அறிமுகமான வசந்த் ரவி மட்டுமே கவனத்தை ஈர்த்தார்.


அசத்திய அறிமுக நடிகைகள்


அறிமுக நடிகைகளில், அருவி அதிதி பாலன் முதல் படத்திலேயே சிறப்பாக நடித்து, பாராட்டுக்களைப் பெற்றார். மற்றவர்களில், காதல் கண் கட்டுதே அதுல்யா, காற்று வெளியிடை அதிதி ராவ், வனமகன் சாயிஷா சைகல், இவன் தந்திரன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், துப்பறிவாளன் அனு இம்மானுவேல், மேயாத மான் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நன்றாகவே அறிமுகமாயினர்.


அடையாளம் தந்த அறிமுக இயக்குநர்கள்


இந்த ஆண்டில் அறிமுகமான பல இயக்குனர்களில், குறிப்பிடப்பட வேண்டியவர்கள். லோகேஷ் கனகராஜ் - மாநகரம், தனுஷ் - பா.பாண்டி, சுரேஷ் சங்கையா - ஒரு கிடாயின் கருணை மனு, ஏ.ஆர்.கே.சரவணன் - மரகத நாணயம், ஹிப்ஹாப் தமிழா - மீசைய முறுக்கு, நிதிலன் - குரங்கு பொம்மை, ரத்னகுமார் - மேயாத மான், மிலிந்த் - அவள், கோபி நயினார் - அறம், சி.வி.குமார் - மாயவன், அருண் பிரபு புருஷோத்தமன் - அருவி ஆகியோர், தங்களை அடையாளப்படுத்திக் கொண்டார்கள்.


சாதித்து சறுக்கியவர்கள்


கடந்த ஆண்டில் சில வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனர்கள், இந்த ஆண்டில் தோல்விப் பட இயக்குனர்களாக மாறிப் போனார்கள். அவர்களில், “கடம்பன் படத்தை இயக்கிய ராகவன், சரவணன் இருக்க பயமேன் படத்தை இயக்கிய எழில், பிருந்தாவனம் படத்தை இயக்கிய ராதாமோகன், தொண்டன் படத்தை இயக்கிய சமுத்திரக்கனி, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன், வனமகன் படத்தை இயக்கிய விஜய், விவேகம் படத்தை இயக்கிய சிவா, ஸ்பைடர் படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் குறிப்பிட வேண்டியவர்கள்.


லாபம் பார்த்த படங்கள்


2017ம் ஆண்டில் எதிர்பார்த்ததை விட அதிக வசூலைக் குவித்த படங்களாக பாகுபலி-2, மெர்சல், விக்ரம் வேதா, தீரன், அவள், குற்றம் 23, ஹரஹர மகாதேவகி, மீசைய முறுக்கு, அறம், துப்பறிவாளன், ஆகிய படங்கள் அமைந்தன.


மாநகரம், கருப்பன், கவண், மரகத நாணயம், அருவி ஆகிய படங்கள் லாபத்தின் பக்கத்தில் வந்து போயிருக்கின்றன.


அதிக நஷ்டம்


அதிக நஷ்டத்தைக் கொடுத்த படங்களின் வரிசையில் “விவேகம், சி3, பைரவா, ஸ்பைடர், கடம்பன், அன்பானவன் அசராதவன் அடங்காதவன், வேலையில்லா பட்டதாரி 2” ஆகியவை அடங்கும்.


போராடும் இளம் நடிகர்கள்


தமிழ் சினிமாவில் 50 வயதைக் கடந்த ஹீரோக்களின் படங்கள் வருவது குறைந்துவிட்டது. 40 வயதைக் கடந்த அஜித், விஜய், சூர்யா, விஜய் சேதுபதி, விஷால் ஆகியோர் வெற்றியோ, தோல்வியோ, தொடர்ந்து மார்க்கெட்டைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


40 வயதுக்கும் குறைவான ஹீரோக்களில் பலரும், இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். வளரும் ஹீரோக்களில் யார், விஜய், அஜித் இடத்தைப் பிடிக்கப் போகிறார்கள் என்பது இனிமேல்தான் தெரியும். அந்த இடத்திற்குத் தகுதியானவர்கள் என்று முன்பு எதிர்பார்க்கப்பட்ட தனுஷ், சிம்பு நிலையான வெற்றியைக் கொடுக்கத் தவறிவிடுகிறார்கள்.


பாதையை மாற்றும் நயன்தாரா


நயன்தாரா போன்ற சீனியர் நடிகைகள் இன்னமும் மற்ற ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து, கிளாமர் காட்டி, ஆடிப்பாடி நடிப்பதைக் குறைத்துக் கொள்வது நலம். அறம் படம் நயன்தாராவின் இமேஜை அடியோடு மாற்றிவிட்டது. அது அவருக்குப் புரிந்திருந்தால் இனி வேறு தளத்தில் அவர் பயணிக்கலாம்.


இசை


இசையைப் பொறுத்தவரை, இந்த ஆண்டை சூப்பர் ஹிட் ஆண்டாகச் சொல்ல முடியாது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தும் மெர்சல் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் வரிசையில் சேரவில்லை. அனிருத் விவேகம், வேலைக்காரன் படங்களில் ஏமாற்றிவிட்டார்.


யுவன்ஷங்கர் ராஜா தரமணியில் மட்டும் கொஞ்சம் கவனிக்க வைத்தார். டி.இமான் இசையில் வந்த படங்களின் பாடல்களும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. வளரும் இசையமைப்பாளர்களில் விக்ரம் வேதா சாம் சி.எஸ். திரையுலகத்தினரின் கவனத்தை அதிகம் பெற்றுள்ளார். பல புதிய படங்களில் அவர் விறுவிறுவென ஒப்பந்தம் ஆகி வருகிறார்.


ஜிஎஸ்டி ஸ்டிரைக்


2017ம் ஆண்டில் அனைத்து வாரங்களிலும் படங்கள் வெளிவந்த நிலைமையே இருந்தது. ஜிஎஸ்டி வரிக்கும், கேளிக்கை வரிக்கும் எதிர்ப்பு தெரிவித்து நடந்த ஸ்டிரைக்கால் மட்டும், இரண்டு வாரங்கள் புதிய படங்கள் வெளியாகவில்லை.


சினிமா என்பது, இன்னும் பலரால் முழுமையாக அறிந்து கொள்ள முடியாத, ஒரு துறை. எதை ரசிப்பார்கள், எது வெற்றி பெறும், எது தோல்வியடையும் என்பது கணிக்க முடியாமலேயே உள்ளது.2017 - அதிகப் படங்களில் நடித்த நடிகர்


கவுதம் கார்த்திக் : முத்துராமலிங்கம், ரங்கூன், இவன் தந்திரன், ஹரஹர மகாதேவகி, இந்திரஜித்


அதிகப் படங்களில் நடித்த நடிகை


நிக்கி கல்ரானி : மொட்ட சிவா கெட்ட சிவா, மரகத நாணயம், நெருப்புடா, ஹரஹர மகாதேவகிஅதிகப் படங்களுக்கு இசை


டி.இமான் : போகன், சரவணன் இருக்க பயமேன், அதாகப்பட்டது மகாஜனங்களே, ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், ரூபாய், பொதுவாக எம்மனசு தங்கம், கருப்பன், இப்படை வெல்லும், நெஞ்சில் துணிவிருந்தால்அதிக படத்தயாரிப்பாளர்


எஸ்.ஆர்.பிரபு : மாநகரம், கூட்டத்தில் ஒருத்தன், தீரன் அதிகாரம் ஒன்று, அருவிநடிகர் டூ இயக்குனர்


தனுஷ் - பா பாண்டிநடிகர் டூ இசையமைப்பாளர்


சிம்பு - சக்க போடு போடு ராஜாஇசையமைப்பாளர் டூ இயக்குநர்
ஹிப்ஹாப் தமிழா - மீசைய முறுக்கு
தமிழ் சினிமா நிலை எப்படி?


ஒரு ஆண்டில் வெளிவரும் 200 படங்களில் 20 படங்கள் கூட வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற முடியவில்லை என்றால் தமிழ் சினிமாவின் தரத்தை என்னவென்று சொல்வது. புதியவர்கள் வந்தாலும் சிலர் மட்டுமே நம்பிக்கை கொடுக்கிறார்கள்.


பைரசி, இணையதள பிரச்சனை, ஜிஎஸ்டி, கேளிக்கை வரி, திரையுலகில் நிலவும் அரசியல் என இந்த ஆண்டு தமிழ் சினிமா பல பிரச்சனைகளைச் சந்தித்தது.


அவை எதுவும் இல்லாமல், புதிய ஆண்டு புத்துணர்ச்சி ஆண்டாக அமையட்டும்.


Advertisement
2017ல் அதிகம் பேசப்பட்ட படங்கள் : ஓர் பார்வை2017ல் அதிகம் பேசப்பட்ட படங்கள் : ஓர் ... 2018 - திரை நட்சத்திரங்களின் புத்தாண்டு சபதங்கள் 2018 - திரை நட்சத்திரங்களின் புத்தாண்டு ...


வாசகர் கருத்து (1)

Manaada Mayilaada - Chennai,இந்தியா
31 டிச, 2017 - 15:26 Report Abuse
Manaada Mayilaada தலைவனுக்கு அழகு தன்னம்பிக்கை, அச்சமின்மை, சவால்கள் எதிர்நோக்கும் பண்பு, பிரிவினை அற்ற ஜனநாயகம், புதியவர்களை வரவேற்கும் மாண்பு, சரியான ஆடுகளத்தை தேர்த்துஎடுத்தல், தேர்தல் அரசியல் வேறு புரட்சி இயக்கம் வேறு மற்றவர்களை மட்டம் தட்டி பேசுவது, ஒருமையில் பேசுவது கேரளா அரசியல் அது தமிழ்நாட்டுக்கு பண்பாட்டுக்கு புதுசு. எல்லாத்தையும்விட தேர்தல் அரசியல் களம் கொள்ளும் தலைவர் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தமால் இருப்பது தொண்டர்கள் மத்தியில் மரியாதையை தரும். தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்த மாநிலம், மக்கள் கொடுத்த தீர்ப்பை மதிக்க வேண்டும், ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு நல்ல தலைவர்களை பாராட்ட வேண்டும். தன் தாய் தமிழை வைத்து அரசியல் செய்வது தமிழனுக்கு பிடிக்காது. தலைவனனுக்கு எவரையும் எதிர்நோக்கும் தைரியம் வேண்டும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Chekka Chivantha Vaanam
  Tamil New Film 96
  • 96
  • நடிகர் : விஜய் சேதுபதி
  • நடிகை : த்ரிஷா
  • இயக்குனர் :பிரேம்குமார்
  Tamil New Film MGR
  Tamil New Film Kalavani Mappillai
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in