Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

'விவேகம் வீடியோக்கள் ' - ஓர் பார்வை

19 ஆக, 2017 - 11:42 IST
எழுத்தின் அளவு:
Vivegam-Videos...-Small-review

ஒரு முன்னணி ஹீரோவுக்கு ரசிகர்களிடம் எப்படிப்பட்ட வரவேற்பு இருக்கிறது என்பதை முன்பெல்லாம் அவர்கள் படங்களையும் ஓடும் நாட்களையும், அவர்கள் படங்கள் வசூல் செய்யும் தொகையையும் வைத்துத்தான் சொல்வார்கள். சமூக வலைத்தளங்கள், யு டியூப் ஆகியவை மக்களிடம் அதிகம் பிரபலம் ஆன பிறகு முன்னணி ஹீரோக்களின் பிரபலமும் அவற்றை வைத்தும் கணக்கிடப்படுகிறது.

அஜித் எந்த ஒரு சமூக வலைத்தளங்களிலும் செயல்படவில்லை. அவருக்கென தனியாக எந்த ரசிகர் மன்றமும் இல்லை. ஆனாலும், அவர் நடிக்கும் படங்கள் வெளிவரும் சமயங்களில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறார். அவருடைய படங்கள் சம்பந்தமான வீடியோக்கள், பல சாதனைகளை முறியடித்து புதிய சாதனை படைக்கின்றன.

இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அடுத்த வாரம் வெளிவர உள்ள 'விவேகம்' படம் சம்பந்தமான வீடியோக்கள் பல சாதனைகளைப் புரிந்துள்ளன. குறிப்பாக படத்தின் டீசர், டிரைலர் ஆகிய இரண்டைச் சொல்ல வேண்டும்.

'விவேகம்' டீசருக்கு இதுவரை 1 கோடியே 96 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளன. இன்னும் 4 லட்சத்திற்கும் குறைவான பார்வைகள் கிடைத்தால் 2 கோடியைத் தொட்டுவிடும். டீசருக்குக் கிடைத்துள்ள லைக்குகள் மட்டும் 5 லட்சத்து 37 ஆயிரம்.

சில தினங்களுக்கு முன்பு வெளியான 'விவேகம்' டிரைருக்கு இதுவரை 77 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளன. இரண்டு நாட்களுக்குள் 4 லட்சம் லைக்குகளைக் கடந்துள்ளது. குறைந்த நாளில் அவ்வளவு லைக்குகள் ஒரு டிரைலருக்குக் கிடைத்தது மிகப் பெரும் சாதனை.

'விவேகம்' படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'சர்வைவா..' பாடல் பெரும் வரவேற்பைப் பெற்று 1 கோடி பார்வைகளை யு டியூபில் கடந்தது. பாடலுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் லைக்குகள் இதுவரை கிடைத்துள்ளன.

அதன் பின் வெளியான 'தலை விடுதலை' பாடலுக்கும் மிதமான வரவேற்பு கிடைத்தது. 47 லட்சம் பார்வைகளும் 1 லட்சத்து 59 ஆயிரம் லைக்குகளும் இதுவரை கிடைத்துள்ளன.

அடுத்து வெளிவந்த 'காதலாட..' இனிமையான மெலடி பாடலாக இருந்தும் ஓரளவிற்கே வரவேற்பைப் பெற்றது. 20 லட்சம் பார்வைகளும் 76 ஆயிரம் லைக்குகள் மட்டுமே இதுவரை கிடைத்துள்ளன.

இசை வெளியீட்டிற்குப் பின் வெளியான மற்ற லிரிக் வீடியோ பாடல்களுக்கு பெரிய அளவில் வரவேற்பில்லை. 'வெறியேற' பாடல் மட்டுமே 7 லட்சம் பார்வைகளைப் பெற்றது. மற்ற லிரிக் வீடியோக்களுக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லாதது ஆச்சரியமாக உள்ளது.

ஏகே தீம் இசை, நெவர் எவர் கிவ் அப், காதலாட பாட்டின் மறுபதிப்பு ஆகியவை மற்ற லிரிக் வீடியோக்களுடன் ஒப்பிடும் போது குறைவான பார்வைகளையே பெற்றுள்ளன.

ஏகே தீம் இசை மிகப் பெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், அஜித்தின் முந்தைய படங்களின் தீம் மியுசிக்கை விட இந்த தீம் மியூசிக் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை.

இதுவரை 'விவேகம்' தொடர்பான 10 வீடியோக்கள் யு டியூபில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த பார்வைகள் 5 கோடியைக் கடந்துள்ளன. மொத்த லைக்குகள் 17 லட்சத்தைக் கடந்துள்ளன.

படம் வெளிவருவதற்குள் டீசரும், டிரைலரும் மேலும் சில புதிய சாதனைகளைப் படைக்க வாய்ப்புள்ளது. படம் வெளிவந்த பின் மற்ற பாடல் வீடியோக்கள் இன்னும் அதிகமான பார்வைகளையும், லைக்குகளையும் பெறலாம்.

Advertisement
முடக்கமும், முன்னேற்றமும் - ஜூலை மாதப் படங்கள் ஓர் பார்வைமுடக்கமும், முன்னேற்றமும் - ஜூலை ... பெரிய ஹீரோக்களின் ஃபிளாப் படங்கள் - ஓர் பார்வை பெரிய ஹீரோக்களின் ஃபிளாப் படங்கள் - ...


வாசகர் கருத்து (3)

Raj M - Tirunelveli,இந்தியா
31 ஆக, 2017 - 11:14 Report Abuse
Raj M நாங்க இங்க காட்டு கத்து கத்திட்டு இருக்கும் போது, நீ என்ன வேணும்னாலும் கத்து.. நான் என் வேலைய பாக்குறேனுட்டு தெனாவட்டா இருக்கீங்க பாருங்க அந்த திமிரு தான் தல எங்களுக்கு பிடிச்சிருக்கு.. நான் என் வேலைய பாக்குறேன்.. நீயும் உங்க வேலைய பாருங்கனு சொல்லாம சொல்றீங்க..
Rate this:
Ajith Mangatha - Mumbai  ( Posted via: Dinamalar Windows App )
19 ஆக, 2017 - 17:54 Report Abuse
Ajith Mangatha Ajith Always Rocks.
Rate this:
19 ஆக, 2017 - 12:54 Report Abuse
JackJoshua ajith good actor ok . mass actor i accept that . but itharkku kaaranam jio matrum vetti pasanga thaan . vera onum illa . vara vara dinamalar ajithmalar aagivitadhu . over ajith pugzhal paadal .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Gorilla
  • கொரில்லா
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : ஷாலினி பாண்டே
  • இயக்குனர் :டான் சாண்டி
  Tamil New Film Imaikkaa nodigal
  Tamil New Film ennai nokki paayum thotta
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in