Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

இந்திய சினிமாவே கொண்டாடும் பாகுபலி-2 - குவியும் பாராட்டுகள்

01 மே, 2017 - 15:18 IST
எழுத்தின் அளவு:
Celebrating-wishing-bahubali-2

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் மரகதமணி இசையமைப்பில் பிரபாஸ், ராணா டகுபட்டி, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த 'பாகுபலி 2' படம் இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவிலும் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


இந்தியாவிலிருந்தும் ஹாலிவுட்டிற்கு சவால் விடும் விதத்தில் திரைப்படங்களை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப உருவாக்க முடியும் என்று பெருமைப்பட வைத்துள்ளது.


இந்திய திரையுலகத்திற்கே ஒரு பெருமை என 'பாகுபலி 2' படத்தைப் பலரும் பாராட்டி வருகிறார்கள். அப்படிப் பாராட்டியவர்களின் பாராட்டு வரிகள்...இதோ...


ரஜினிகாந்த் : பாகுபலி 2 இந்திய சினிமாவின் பெருமை. கடவுளின் சொந்தக் குழந்தை ராஜமௌலிக்கும் அவருடைய குழுவினருக்கும் என்னுடைய சல்யூட். மாஸ்டர் பீஸ்.


ஷங்கர் : பாகுபலி 2 - இந்திய சினிமாவின் பெருமை. என்ன ஒரு வீரம், அழகு, பிரம்மாண்டம், இசை...பிரமிப்பு. ராஜமௌலி மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள்.


தனுஷ் : ராஜமௌலி சார்...இதை விட சொல்ல வேறில்லை. மாஸ்டர் பீஸ். உச்சத்தில் அதன் எழுத்து. விதிகளை உடை. எதையும் மாற்றி எழுது. நான் சொல்வது அனைத்தையும்...


குஷ்பு : இந்தியாவின் சிறந்த படம் 'பாகுபலி 2' படம் பற்றிய ஒவ்வொரு வார்த்தையையும் ரசித்துக் கொண்டிருக்கிறேன். நான் நாட்டில் இல்லாததால் படம் பற்றி பார்க்க முடியாமல் இருக்கிறேன். ராஜமௌலி மற்றும் குழுவினருக்காக பெருமைப்படுகிறேன்.


சிரஞ்சீவி : பாகுபலி 2 ஒப்பற்ற திரைப்படம். இப்படி ஒரு ஆச்சரியத்தைப் படைக்கவும் பாராட்டவும் ராஜமௌலி தகுதியானவர். எல்லைகளைக் கடந்து தெலுங்கு சினிமாவை விரைவாக வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றுவிட்டார்.


நாகார்ஜுனா : பிரபாஸ், அனுஷ்கா, ராணா, ரம்யா கிருஷ்ணன் உங்களை 'பாகுபலி 2' படத்திற்காக கடந்த ஐந்து வருடங்களாக உங்களது அர்ப்பணிப்பை நம்பவே முடியவில்லை.


மகேஷ் பாபு : மனதில் அச்சத்தை ஏற்படுத்தும் படைப்பு, மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள படம். ராஜமௌலி மற்றும் குழுவினருக்குப் பாராட்டுக்கள். மிகச் சிறந்த கதை சொல்பவர் மீண்டும் வந்துவிட்டார். எதிர்பார்ப்புகளை மீறி வெளிவந்த 'பாகுபலி 2' ஒரு திருவிழா திரைப்படம்.


பிரியங்கா சோப்ரா : மற்றுமொரு கண்கொள்ளா காட்சிக்கு வாழ்த்துகள் ராஜமௌலி சார். உங்கள் கொடி பறந்து கொண்டிருப்பதை வைத்திருங்கள்.


சமந்தா : 'பாகுபலி ' குழுவினருக்கு நன்றி. 'காவியம்' என்ற வார்த்தைக்கு முழுமையான புது அர்த்தத்தைக் கொடுத்த கடவுளின் தாய்க்கும் நன்றி.


விக்ரம் பிரபு : ஒரு சிறந்த படைப்பாளியிடமிருநது ஒரு காவியம். ஒரு அற்புதமான சினிமா பார்க்கும் அனுபவத்தைக் கொடுத்த ராஜமௌலி சாருக்கும் அவருடைய குழுவுக்கும் வாழ்த்துகள். இப்படி ஒரு பெரும் படைப்பு உருவாகக் காரணமாக இருந்து, 5 வருடங்களாக தங்களுடைய வாழ்க்கையைம் அர்ப்பணித்த பிரபாஸ், அனுஷ்கா, ராணா மற்றும் குழுவினருக்காக பெருமைப்படுகிறேன்.


ரகுல் ப்ரீத் சிங் : 'பாகுபலி 2' என்ற மேஜிக்கால் தூக்கி வீசப்பட்டேன். இது படமல்ல, ஒரு அனுபவம். ஒவ்வொரு காட்சி, வசனம், நடிப்பு உங்களை புல்லரிக்க வைக்கும். நன்றி ராஜமௌலி சார். தெலுங்கு சினிமாவை மட்டுமல்ல, இந்திய சினிமாவையும் உலகத் தரத்திற்கு உயர்த்தியுள்ளீர்கள். ஒவ்வொரு பிரேமும் ஐந்து வருடங்களுக்கான உழைப்பையும், பேரார்வத்தையும் காட்டுகிறது.


மகேஷ்பட் - ஹிந்தி திரைப்பட இயக்குனர் : பாகுபலி திரைப்படம் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ள படம். இந்திய சினிமாவைப் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை, உங்களால் புரிந்து கொள்ளப்பட்டதை மாற்றி எழுத வந்துள்ள படம்.


சேகர் கபூர் : தைரியம், பெரும் ஆர்வம், கிளர்ச்சி, நம்பிக்கை, தன்னை நம்புதல். அனைத்து விதிகளையும் உடைத்தல், அர்ப்பணிப்பு, பணிவு. வாழ்த்துகள் ராஜமௌலி.


ராம் கோபால் வர்மா : 'பாகுபலி 2' படத்தை ஒரு புயல் என்று சொல்வது அதை அவமதிப்பது போல. அது ஒரு சூறாவளி. எரிமலையுடன் இணைந்து பல பூமி அதிர்வுக் குழந்தைகளை உருவாக்கியுள்ளது.


பாகுபலி 2 பாலிவுட்டில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிக அதிகமானது. ஒவ்வொரு சூப்பர் ஸ்டார் மற்றும் சூப்பர் இயக்குனர் ஆகியோருடைய அடுத்த படங்கள் 'பாகுபலி 2' படத்துடன் இணைத்து பார்க்கப்படும்.


'பாகுபலி 2' படம் இந்தியாவிலிருந்து வெளிவந்துள்ள ஒரு 'அவதார்'. அந்தப் படத்திற்காக ஜேம்ஸ் கேமரூன் செலவிட்ட தொகையில் நேரம் மற்றும் பணம் ரீதியாக ஒரு சிறு துளியில் ராஜமௌலியால் உருவாக்கப்பட்டதுதான் 'பாகுபலி 2'.


'பாகுபலி 2' படத்தைப் பற்றி தொடர்ந்து பலரும் பாராட்டி வருகிறார்கள். அதே சமயம் பாலிவுட்டின் சூப்பர் வசூல் ஸ்டார்கள் இன்னும் கூட ஒரு வார்த்தை சொல்லாதது ஆச்சரியமாக இருக்கிறது.


இந்தியத் திரையுலகின் சரித்திரம் ஹிந்திப் படங்கள் மூலம் மட்டுமே நிகழ வேண்டும் என்பதில்லை. அது தெலுங்குப் படங்கள் மூலமும் நிகழலாம், தென்னிந்தியப் படங்கள் மூலமும் நிகழலாம். இனி, இந்திய சினிமா என்றால் தென்னிந்திய மொழிப் படங்களையும் சேர்த்தே பேச வேண்டி வரும். அப்படி ஒரு மகத்துவத்தை 'பாகுபலி 2' மூலம் உருவாக்கியிருக்கிறார் எஸ்.எஸ். ராஜமௌலி.


Advertisement
பாகுபலி - இந்தியத் திரையுலகின் பெருமை! ஓர் பார்வைபாகுபலி - இந்தியத் திரையுலகின் ... ஏமாற்றம்... வரவேற்பு... பிரமாண்டம்...! ஏப்ரல் மாதப் படங்கள் ஓர் பார்வை ஏமாற்றம்... வரவேற்பு... பிரமாண்டம்...! ...


வாசகர் கருத்து (9)

Yegnasamy Rajagopalan - Bangkok,தாய்லாந்து
02 மே, 2017 - 09:00 Report Abuse
Yegnasamy Rajagopalan Excellent. Each and every scene, wow. Five years hardwork, the output of the movie touches the heart of the viewers. A history d by S.S. Rajmouli and team. In those days, where technology was in advance stage, Gemini's "Chandralekha" d a turning point. Especially, the drum dance. Now, this movie, all the fights, graphic etc. made everybody to touch their noses. Deep thinking, well planned and team spirit made this film to take some other level. Wishing all the members of the Bahubali 2 team.
Rate this:
Natesan Narayanan - Sydeny,ஆஸ்திரேலியா
02 மே, 2017 - 01:22 Report Abuse
Natesan Narayanan இது முதலில் போடா வேண்டிய முக்கியமான தகவலா ?
Rate this:
AaaAaaEee - Telaviv,ஆப்கானிஸ்தான்
01 மே, 2017 - 23:45 Report Abuse
AaaAaaEee Average movie, over hyped first version much better
Rate this:
Arivu Nambi - madurai,இந்தியா
01 மே, 2017 - 19:47 Report Abuse
Arivu Nambi எப்போதுமே தென்னிந்திய திரைப்படங்கள், மற்றும் நடிகர்களை பற்றி வடஇந்தியர்கள் ஏளனமாகவே பேசுவதைப்பார்த்து அவர்களை துவைக்கவேண்டும் என்று தோன்றும், இப்போது ராஜமௌலி அவர்கள் கான்களில் இருந்து கண்டதையும் அடித்து கிட்ட வரமுடியாத தூரத்திற்கு துரத்தியிருக்கிறார். இனி அவர்கள் நான் இவ்வளவு வசூலித்தேன் என்று பெருமைப்பட கனவுகளில்தான் கூறிக்கொள்ளவேண்டும் நினைத்தே பார்க்கமுடியாது. ராஜமௌலி சார் உங்களை பாராட்ட வார்த்தைகளில்லை. தென்னிந்தியர்களை பெருமைப்பட வைத்துள்ளீர்கள். இன்னும் தொடர்ந்து சம்மட்டியை கையில் எடுத்துக்கொண்டு வீரநடையை தொய்வில்லாமல் போடவும். மனம் நிறைந்த வாழ்த்துக்கள். வீரத்திராவிடன் வாழ்க. நீங்கள் திராவிடன் என்று நினைக்கிறீர்களோ இல்லையோ தமிழர்களின் ரத்தத்தில் திராவிடம் ஊறியுள்ளது. அதை மாற்ற முடியாது. மறுபடியும் வாழ்த்துக்கள்.
Rate this:
Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா
01 மே, 2017 - 18:07 Report Abuse
Nallappan Kannan Nallappan இது போல் ரொம்ப மோசமான ஒரு இந்தியன் சினிமா இதுவரை வந்தது இல்லை
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Gorilla
  • கொரில்லா
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : ஷாலினி பாண்டே
  • இயக்குனர் :டான் சாண்டி
  Tamil New Film Imaikkaa nodigal
  Tamil New Film ennai nokki paayum thotta
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in