Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் முன் நிற்கும் சவால்கள்

03 ஏப், 2017 - 11:38 IST
எழுத்தின் அளவு:
Challenges-in-front-of-Vishal-in-Producer-council

சினிமாவில் ஏற்ற இறக்கம் இருந்தாலும் சங்க பணிகளில் விஷாலுக்கு ஏறுமுகம் தான். எந்த நடிகர் சங்கம் அவரை நீக்கியதோ அதே நடிகர் சங்கத்தின் செயலாளர் ஆனார். எந்த தயாரிப்பாளர் சங்கம் நீக்கியதோ அதே தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகியிருக்கிறார். நடிகர் சங்கத்தை பொறுத்தவரை அவர் முன் இருந்த ஒரே சவால் சங்க கட்டடம் தான். தனியாரிடமிருந்த சங்க நிலத்தை மீட்டு, கட்டடத்திற்கு நிதி திரட்டி அடிக்கல்லும் நாட்டிவிட்டார். நல்லபடியாக கட்டத்தை முடித்து விட்டால் அதுவே அடுத்த முறையும் அவரை தலைவராக்கி விடும்.


ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தின் நிலையே வேறு. ஒரு சில குறிப்பிட்ட தயாரிப்பாளர்களே மாறி மாறி தலைவராகவும், நிர்வாகிகளாவும் வந்து கொண்டிருந்தார்கள். தலைவரானதும் வீராவேசமாக பேசுவார்கள். தங்கள் இரண்டாண்டு பதவிக்காலத்தில் தயாரிப்பாளர்களுக்கு நிதி உதவி, தீபாவளிக்கு பட்டாசு சுவீட், பொங்கலுக்கு வேட்டிசேலை என கண்துடைப்பு வேலைகளை மட்டுமே செய்திருக்கிறார்கள். இப்போது தயாரிப்பாளர் சங்கத்தின் இருக்கையை தேய்த்தவர்கள் துடைத்து எறியப்பட்டு விட்டார்கள். விஷால் தலைமையில் இளரத்தம் பாய்ந்திருக்கிறது. இந்த இளம் ரத்தற்திற்கு இருக்கும் சவால்கள் அதிகம்.


சிறுமுதலீட்டு படங்கள் தயாரிப்பும், வெளியீடும் முறைப்படுத்தப்பட வேண்டும். ஒரு வாரத்தில் 10 படங்கள் வரை வெளியாகி தியேட்டர் கிடைக்காமல் வந்த சுவடே தெரியாமல் போகும் படங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தியேட்டர்களை ஒரு சில தனி நபர்கள் கையில் வைத்துக் கொண்டு நாட்டாமை செய்து வருவதை தடுத்து நிறுத்த வேண்டும்.


நடித்த படத்தின் புரமோசன்களுக்கு உதவி செய்யாத நடிகர் நடிகைள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகர் நடிகைகளுக்கு இனி சம்பளம் கிடையாது லாபத்தில் பங்கு என்ற திட்டம் வரவேண்டும். அப்போதுதான் மார்க்கெட் இல்லாவிட்டாலும் கோடிக் கணக்கில் சம்பளம் கேட்பது குறையும். கலைஞர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையில் எழும் பிரச்சினையில் எந்த விதத்திலும் நாட்டாண்மைதனம் வெளிப்படாமல் நியாயமான முறையில் அவைகள் தீர்க்கப்பட வேண்டும்.


சங்கத்திற்கென்று சொந்த இடமோ கட்டிடமோ கிடையாது. சேம்பரின் வாடகை கட்டடத்தில்தான் இயங்கி வருகிறது. அதற்கு மாற்றுவழி காண வேண்டும். நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில் தயாரிப்பாளர்களை கையேந்த வைக்காமல் கவுரவமான உதவிகளை வழங்க வேண்டும்.


கடந்த 7 ஆண்டுகளாக தமிழக அரசு சிறுமுதலீட்டு படங்களுக்கு மானியம் வழங்கவில்லை. சுமார் 400 படங்கள் மானியத்துக்காக தேர்வு பெற்றும் அது வழங்கப்படவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக தமிழக அரசு கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கவில்லை. இதுகுறித்து கவனம் செலுத்த வேண்டும்.


திருட்டு விசிடி பற்றி பேசாதாவர்கள் சினிமாவில் கிடையாது. ஆனால் தயாரிப்பாளர் சங்கம் இதுகுறித்து உருப்படியான நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்கவில்லை. திருட்டு விசிடி ஒழிப்பில் ஆர்வம் கொண்ட விஷால் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.


சினிமா, சின்னத்திரை இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், வர்த்தக ஒப்பந்தம், விளம்பர ஒப்பந்தம் போன்றவை முறைப்படுத்தப்பட வேண்டும். டிஜிட்டல் திரையிடலுக்கான கருவிகளின் வாடகை அதிகரித்தருப்பதை கட்டுப்படுத்த வேண்டும். பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்த அரசு உயர்த்திய கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அரசியல்வாதிகளுக்கு பாராட்டு விழா நடத்தி அவர்களை குளிர்ச்சி படுத்துவதை விட்டுவிட்டு உரிமைகளை கேட்டுப் பெற வேண்டும். தேவைப்பட்டால் போராடி பெற வேண்டும்.


சங்கத்திற்கென்று தனி தொலைக்காட்சி நடத்துவது, சங்க உறுப்பினர்களுக்கு வீடு கட்டி கொடுப்பது போன்றவற்றை நீண்ட கால திட்டமாக திட்டமிட்டு அதன் பணிகளை துவங்க வேண்டும்.


இப்படி பல சவால்கள் விஷால் முன் நிற்கிறது. "வரும் இரண்டாண்டுகள் தயாரிப்பாளர் சங்கத்தின் பொற்காலமாக இருக்கும்" என்று கூறியிருக்கிறார் விஷால். இரண்டு வருடங்களில் இவற்றில் எதையாவது அவர் நிறைவேற்றுகிறார் என்பதை பொறுத்து தான் அந்த பொற்காலம் தீர்மானிக்கப்படும்.


Advertisement
எஸ்பிபி., சர்ச்சை : இளையராஜா செய்தது சரியே....!எஸ்பிபி., சர்ச்சை : இளையராஜா செய்தது ... தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நடந்த அரசியல் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நடந்த ...


வாசகர் கருத்து (4)

CSK - Chennai  ( Posted via: Dinamalar Windows App )
03 ஏப், 2017 - 13:25 Report Abuse
CSK sir my best wishes...pls reduce cinema theatre tickets and eatble item rates immediately though the theatres are selling ob higher rates...we hope you will do it.
Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
03 ஏப், 2017 - 13:24 Report Abuse
Srinivasan Kannaiya தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல போகிறாரா..
Rate this:
pjv - Coimbatore  ( Posted via: Dinamalar Android App )
03 ஏப், 2017 - 12:45 Report Abuse
pjv நிச்சயம் செய்வார் வாழ்த்துக்கள் விஷால்
Rate this:
Murugan - 66000 Perpignan,பிரான்ஸ்
03 ஏப், 2017 - 12:01 Report Abuse
Murugan நல்வாழ்த்துக்கள் விஷால்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Thimiru pudichavan
  Tamil New Film Kaa
  • கா
  • நடிகை : ஆண்ட்ரியா
  • இயக்குனர் :நாஞ்சில்
  Tamil New Film Mr Chandramouli
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in