Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

சீரியல்களுக்கு டிரெண்ட் கிடையாது - நடிகர் கிரீஷ்

23 பிப், 2017 - 11:28 IST
எழுத்தின் அளவு:
Actor-Girish-special-interview

குடும்ப சூழல், சரித்திர தொடர் என எதுவாக இருந்தாலும் நல்ல விசயங்களை சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். நல்ல கதைகளை எத்தனை முறை கொடுத்தாலும் மக்கள் ரசிக்க தயாராக இருக்கிறார்கள். இதுதான் டிரெண்ட் என்று சீரியல்களைப் பொறுத்தவரை சொல்ல முடியாது என்கிறார் சீரியல் நடிகர்

கிரீஷ்.


தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...


நடித்துள்ள சீரியல்கள் பற்றி?


நிறைய சீரியல்களில் நடித்திருக்கிறேன் என்றாலும் கலைஞரின் ரோமாபுரி பாண்டியன், தென்பாண்டி சிங்கம், ராமானுஜம் போன்ற சரித்திர தொடர்களில் நடித்தது ரொம்ப பெருமையாக உள்ளது. அதிகமாக பாசிட்டிவ் வேடம்தான் பண்ணியுள்ளேன். அதில் மறக்க முடியாதது ராமானுஜனில் பெரிய நம்பி வேடம். தென்பாண்டி சிங்கத்தில் கேனல் அக்னியூ பயங்கரமான வில்லன்.


மேலும், ராமானுஜம் தொடரில் 431 எபிசோடோடு முடிந்துள்ளது. தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தென்பாண்டி சிங்கமும் நிறுத்தப்பட்டுள்ளது. கலைஞரின் கதை என்பதால் வசனம் எழுதிவிட்டு அவரிடம் அனுமதி வாங்கிய பிறகுதான் பயன்படுத்தி வந்தனர். இப்போது அவர் உடல்நலம் சரியில்லாமல் இருப்பதால் இந்த தொடர்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தொடர்கள் விரை வில் மீண்டும் தொடரும் என்று எதிர்பார்க்கிறேன்.


சரித்திர தொடர்களுக்கு எந்த அளவுக்கு ரீச் உள்ளது?


ராமானுஜன் மதங்களை கடந்த மகான். அந்த தொடரை மக்கள் எவ்ளோ ரசித்தார்கள் என்பது ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், கும்பகோணம் ஆகிய ஊர்களுக்கு சென்றபிறகுதான் தெரிந்தது. ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று சமூக பொறுப்புகளை சொன்ன சீரியலை ஏன் நிறுத்தி விட்டீர்கள் என்று கேட்டனர். ஆக, குடும்ப சூழல், சரித்திர தொடர் என எதுவாக இருந்தாலும் நல்ல விசயங்களை சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். மகாபாரதம் தொடரில் பலராமனாக நடித்தேன். அந்த சீரியலுக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. எத்தனை முறை கொடுத்தாலும் மக்கள் ரசிக்க தயாராக இருக்கிறார்கள். இதுதான் டிரெண்ட் என்று சீரியலைப் பொறுத்தவரை சொல்ல முடியாது.


சரித்திர தொடர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டுமா?


மற்ற சீரியல்களை விட அதிகமாகும். ரோமாபுரி பாண்டியன், இந்த தொடர்களில் நிறைய செலவு. சுத்தமான தமிழ் என நிறைய டயம் எடுக்கும். 8 மணிக்கே ரெடியாக வேண்டும். ஸ்பாட்டில் ஏழரை மணிக்கு இருக்க வேண்டும். 12 மணி நேரம் இந்த சீரியல்களுக்காக உழைக்க வேண்டும். இதற்கு குட்டி பத்மினி மேடம் மாதிரி சில தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். தமிழ் உச்சரிப்பு நம்ம தமிழ் மொழி இம்ப்ரூ ஆகும். நான் 18 வருடமாக மேடை நாடகங்களில் நடிக்கிறேன். இதுவரை 500 மேடைகளில் நடித்துள்ளேன்.


மேலும், மேடைகளில் ரிகர்சல் பார்த்து நடிப்பேன். சீரியல்களில் உடனடியாக கேட்டு நடிக்க வேண்டும். அதிக இன்வால்வ்மென்ட் இருக்க வேண்டும். கட் பண்ணி போக முடியாது. ஒரே நாளில் 4 காட்சிகள் எடுப்பார்கள். ஒர்க்கில் பாஸ்டாக இருக்க வேண்டும். இது டைரக்டர்களுக்கு பெரிய சவால். எல்லோருமே அலார்ட்டாக இருக்க வேண்டும்.


பாடிலாங்குவேஜ் பயிற்சி உண்டா?


நான் மேடை நாடகங்களில் நடித்தது பெரிய உதவியாக உள்ளது. எந்தெந்த கதாபாத்திரத்திற்கு எப்படி நடிக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும். ஒரு விச யத்தை சொன்னால் உடனடியாக கேட்ச் பண்ண முடியும். ராமானுஜர் என்றால் அந்த கதாபாத்திரத்தின் தன்மையை மனதில் கொண்டு வருவேன். கேனல் என்றால் அதற்கேற்ப மாறுவேன். மேடை நாடகங்களில் பலதரப்பட்ட வேடங்களில் நடித்திருப்பதால் இப்போது எனக்கு அது சீரியல்களுக்கு பெரிய உபயோகமாக உள்ளது.


கலைஞர் கதை வசனத்தில் நடித்தது பற்றி?


இதுவரைக்கும் கலைஞர் வசனத்தில் ரோமாபுரி பாண்டியன், ராமானுஜர், தென்பாண்டி சிங்கம் என நடித்துள்ளேன். இந்த மூன்று சீரியலுமே 100-வது எபிசோடு முடித்தபோது முக்கிய நடிகர்களை அழைத்தார் கலைஞர். அப்போது எங்கள் நடிப்பு பற்றி தான் ரசித்ததை சொல்லி பாராட்டினார்.


குடும்ப உறவு, சரித்திர தொடர்களில் எந்தமாதிரியான வித்தியாசத்தை உணருகிறீர்கள்?


என்னைப்பொறுத்தவரை சரித்திர கதைகளில் பண்ணும்போது ஸ்ட்ரெய்ன் ஜாஸ்தி. சோசியல் என்றால் அந்த கேரக்டர் மாதிரி பலபேரை நாம் பார்த்திருக்கிறோம். அதை வைத்து ஒரு ஐடியா பண்ணி நடித்து விடலாம். ஆனால் சரித்திர கேரக்டர்கள் நாம் பார்க்காத கேரக்டர்கள். அப்போது சம்பந்தப்பட்ட தொடரின் இயக்குனர் அந்த கேரக்டரை பற்றி என்னென்ன சொன்னாரோ அதை மனதில் உள்வாங்கிக் கொண்டு நடிக்க வேண்டும்.


சமீபத்தில் ராமானுஜர் சீரியல் முடிந்து நான் ஸ்ரீரங்கம் போயிருந்தோம். அப்போது நிஜமாலுமே பெரிய நம்பி வாழ்ந்த வீட்டுக்கு போறோம். என்னைப்பார்த்த துமே எங்க ஆச்சாரியாரு வந்திருக்காரு என்று கூப்பிட்டு சென்றனர். அப்போது எனக்கு உடம்பெல்லாம் ஆடிப்போனது. அன்றைக்கு ராமானுஜரோட கடைசி எபிசோடு ஒளிபரப்பானது. பெரிய நம்பி நிஜமாலுமே உபயோகித்த அவரோட காலடி பாதத்தை வச்சி எனக்கு ஆசீர்வாதம் செய்தனர். அது மறக்க முடியாத அனுபவம்.


பக்த விஜயம் சீரியலில் சைதன்ய மகாபிரபு கேரக்டர் பண்ணினேன். அதுவும் இந்த மாதிரி ஆன்மீக விசயம்தான். 63 நாயன்மார்கள் பற்றிய கதை. பக்தி சம்பந்தமான மக்களுக்கு நல்ல விசயங்களை சொன்ன சீரியல்களில் நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது.


உங்களைத்தேடி சரித்திர தொடர்களே அதிகமாக வர என்ன காரணம்?


மேடை நாடகங்களில் நடித்த அனுபவத்தைக்கொண்டு எந்தெந்த கேரக்டரில் நடிக்கிறேனோ அதுவாக முழுவதுமாக என்னை மாற்றிக்கொள்வேன். சரித்திர காலத்து கேரக்டருக்கேற்ற கெட்டப்புக்கு மாறும்போது பெரும்பாலும் என்னை அடையாளமே தெரியாது. அப்படி முழுமையாக என்னை மாற்றிக்கொண்டு நடிப்பதால்தான் தொடர்ந்து சரித்திர தொடார் வாய்ப்புகள் எனக்கு கிடைப்பதாக கருதுகிறேன். சோசியல் பண்ண நிறையபேரு இருக்காங்க. அதனால்தான் எனக்கு சரித்திர வாய்ப்புகள் அதிகமாக வருவதாக கருதுகிறேன்.


மேலும், சரித்திர ரோல்களில் நடிப்பதால் என்னை ஆடியன்ஸ் பெரிதாக கண்டுபிடிப்பதில்லை. ஆனால் கடைசியாக தேவதை என்ற சீரில் பண்ணினேன் மிகப்பெரிய ரீச். எங்கு போனாலும் பரசுராம் என்றுதான் கூப்பிடுறாங்க. ராமானு ஜரைப்பற்றிகூட பேசல. பரசுராம் கேரக்டரைப்பற்றி பேசுறாங்க. அதில் நான் இன்ஸ்பெக்டர் வேடம் பண்ணினேன்.


எதிர்காலத்தில் சீரியல் இயக்கும் ஆசை உள்ளதா?


டைரக்சன் என்பது மிகப்பெரிய பொறுப்பு. அதுக்கு நான் கத்துக்க வேண்டியது நிறைய உள்ளது. மேலும், எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற ஆசையும் உள்ளது. பத்து படங்களில் நடித்துள்ளேன். அதில், கத்தி, என்னை அறிந்தால் படங்களில் நடித்த வேடங்களை சொல்லிக்கொள்ளலாம். சினிமாவில் நல்ல பெயர் வாங்க வேண்டுமென்ற ஆசை உள்ளது. அதற்கான முயற்சி எடுத்து வருகிறேன்.


நான் சினிமாவை விட சீரியல்களிலேயே பெரிய வேடங்களில் நடித்திருப்பதால், படத்தில் நடித்ததை விட சீரியலில் நடித்த கேரக்டரைப்பற்றிதான் ஆடியன்ஸ் பேசுகிறார்கள். ஆனால் ஒரு தடவை ஒரு நல்ல ரோல் சினிமாவில் வந்து விட்டால் அந்த லெவலே வேற. அதை இறைவன்தான் தீர்மானிக்க வேண்டும் என்கிறார் நடிகர் கிரீஷ்.


Advertisement
ரஜினி படத் தலைப்புக்கு ஆசைப்படும் ஹீரோக்கள்ரஜினி படத் தலைப்புக்கு ஆசைப்படும் ... ‛சுசி லீக்ஸ்... - அடுத்தடுத்து குண்டு போடும் சுசித்ரா, டிவிட்டரில் அரங்கேறும் அசிங்கங்கள் ‛சுசி லீக்ஸ்... - அடுத்தடுத்து குண்டு ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Sakka Podu Podu Raja
  Tamil New Film Kodiveeran
  • கொடிவீரன்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : மகிமா ,சனுஷா
  • இயக்குனர் :முத்தையா
  Tamil New Film Pakka
  • பக்கா
  • நடிகர் : விக்ரம் பிரபு
  • நடிகை : நிக்கி கல்ராணி ,பிந்து மாதவி
  • இயக்குனர் :எஸ்.எஸ்.சூர்யா
  Tamil New Film Nimir
  • நிமிர்
  • நடிகர் : உதயநிதி ஸ்டாலின்
  • நடிகை : பார்வதி நாயர்
  • இயக்குனர் :ப்ரியதர்ஷன்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in