Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

2016 முடிவில் முத்திரை பதித்த படங்கள் - டிசம்பர் மாதப் படங்கள் ஓர் பார்வை

07 ஜன, 2017 - 17:15 IST
எழுத்தின் அளவு:
Which-movie-got-success-in-Decmber.?

2016ம் ஆண்டு நிறைவடைந்து நேற்று சில சிறிய படங்களுடன் 2017ம் ஆண்டின் வெளியீடும் ஆரம்பமாகிவிட்டது. 2016ம் ஆண்டில் 200 படங்கள் வெளிவந்தாலும் பத்துக்கும் குறைவான படங்கள் மட்டுமே அனைவருக்கும் லாபத்தைக் கொடுத்த படங்களாக அமைந்தது. வழக்கம் போலவே சிறிய படங்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது. பல படங்கள் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் வந்து, போனது.


2016ம் ஆண்டில் அதிகமான படங்கள் வெளிவந்த மாதமாக டிசம்பர் மாதமும் இருந்தது. ஏப்ரல் மாதத்தில் 23 படங்கள் வெளியானது, அதற்குப் பிறகு டிசம்பர் மாதத்தில்தான் 23 படங்கள் வெளியானது. மற்ற மாதங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் வருடத்தின் முடிவில் வந்த சில படங்கள் முத்திரை பதித்தது.


விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' படம் 2016ம் ஆண்டின் வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்தது. அந்தப் படத்தின் வெற்றியை வைத்தே டிசம்பர் 1ம் தேதியன்று வெளியான 'சைத்தான்' படத்தின் வியாபாரத்தையும் முடித்தார்கள். ஆனால், 'பிச்சைக்காரன்' அளவிற்கு 'சைத்தான்' படம் வெற்றி பெறவில்லை. இருந்தாலும் முதலுக்கு மோசமில்லாமல் வசூலைப் பெற்றதாகச் சொல்கிறார்கள்.


டிசம்பர் 2ம் தேதியன்று 'அழகென்ற சொல்லுக்கு அமுதா, பழைய வண்ணாரப்பேட்டை, மாவீரன் கிட்டு' ஆகிய படங்கள் வெளிவந்தன. 'மாவீரன் கிட்டு' படத்தை நன்றாகவே விளம்பரப்படுத்தினார்கள். ஆனால், படத்தில் டாகுமென்டரி வாசனை அதிகம் இருந்ததால் கமர்ஷியலாகப் பெரிய வெற்றியைப் பெறவில்லை. 'அழகென்ற சொல்லுக்கு அமுதா, பழைய வண்ணாரப்பேட்டை' ஆகிய படங்கள் சிறிய பட்ஜெட் படங்களாக இருந்தாலும் ரசிகர்களைக் கவரும் வண்ணம் எடுக்கப்பட்டிருந்தன. ஆனால், அவற்றை சரியாக விளம்பரப்படுத்தாததால் ரசிகர்ளைச் சென்றடையாமல் போய்விட்டன.


டிசம்பர் 9ம் தேதி, 'அட்டி, பறந்து செல்லவா, சென்னை 28 - இரண்டாவது இன்னிங்ஸ்' ஆகிய படங்கள் வெளிவந்தன. 'அட்டி' படத்தில் மகாபா ஆனந்த் கதாநாயகனாக நடித்திருந்தார். அவரும் எவ்வளவோ முயன்று பார்க்கிறார், வெள்ளித் திரையில் இன்னும் அவருக்கு வெற்றி கிடைப்பேனா என்கிறது. தனது முந்தையப் படத் தோல்வியிலிருந்து 'சென்னை 28 - இரண்டாவது இன்னிங்ஸ்' படத்தின் வெற்றி மூலம் தப்பித்துக் கொண்டார் வெங்கட் பிரபு. 'பறந்து செல்லவா' வந்த உடனேயே தியேட்டர்களை விட்டு பறந்து சென்றுவிட்டது.


டிசம்பர் 16ம் தேதி 'விருகம், அந்தமான், வீரசிவாஜி' ஆகிய படங்கள் வெளியாகின. விக்ரம் பிரபு நடித்து வெளியாகும் படங்கள் தொடர் தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் 'வீர சிவாஜி'யும் சேர்ந்தது. 'விருகம், அந்தமான்' ஆகிய படங்கள் எண்ணிக்கையைக் கூட்டிய படங்கள்.


டிசம்பர் 23ம் தேதி 'கன்னிசாமி, நேர்முகம், மணல் கயிறு 2, கத்தி சண்டை, பலே வெள்ளையத்தேவா' ஆகிய படங்கள் வெளியாகின. ஓரளவிற்காவது ஓடி விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட 'கத்தி சண்டை, பலே வெள்ளையத்தேவா' ஆகிய படங்கள் பலத்த தோல்வியைச் சந்தித்துள்ளன. விஷால், சசிகுமார் இருவருமே தங்களது திரையுலக வாழ்க்கையில் இப்படிப்பட்ட மோசமான படங்களைக் கொடுத்தது கிடையாது. மற்ற படங்களைப் பற்றி சொல்லி ஒன்றுமில்லை.


டிசம்பர் 29ம் தேதி 'துருவங்கள் 16' படம் வெளியானது. படத்தின் டிசைன்கள் இது வேறு மாதியான படமாக இருக்குமோ என உணர்த்தின. அதன்படியே படமும் வேறு மாதிரி இருந்தது. இளம் இயக்குனர் கார்த்திக் நரேன், ஒரு வித்தியாசமான படத்தைக் கொடுத்து முன்னணி இயக்குனர்கள் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.


டிசம்பர் 30ம் தேதி 'அதிரன், அச்சமின்றி, கண்டதைச் சொல்லுகிறேன், மோ, மியாவ், தலையாட்டி பொம்மை, ஏகனாபுரம்' என 7 படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'மோ, அச்சமின்றி' ஆகிய இரண்டு படங்களும் சுமாரான வெற்றியைப் பெற்றன. போட்ட முதலீட்டை இந்த இரண்டு படங்களும் எடுத்துவிடும் என்கிறார்கள். மற்ற படங்கள் 2016ம் ஆண்டின் பட எண்ணிக்கையை 200ஐத் தாண்ட உதவின.


2016ம் ஆண்டில் அதிகமான சிறிய படங்களே வெளிவந்தன. அவற்றை சரியான அளவில் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கக் கூட அந்தப் படங்களின் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் நினைக்கவில்லை. பத்திரிகையாளர் காட்சியைக் கூடப் போடாத பல படங்கள் இருந்தன. பத்திரிகைகளுக்கு புகைப்படங்களைக் கூடக் கொடுக்காத படங்களும் இருந்தன.


சம்பந்தப்பட்டவர்கள் சிறிய பட்ஜெட் படங்களுக்கென ஒரு வரையறையை நிர்ணயித்தால் மட்டுமே ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் நஷ்டம் கொஞ்சமாவது குறைய வழி பிறக்கும். இந்த புது வருடமாவது சிறப்பாக ஆரம்பமாகும் என்று பார்த்தால் 2017ன் முதல் வாரத்திலேயே சிறிய படங்கள்தான் வெளியாகியுள்ளன. சிறிய பட்ஜெட் படங்களாக இருந்தாலும் சிறந்த படங்களாக இருந்தால் மட்டும அவற்றிற்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுப்பார்கள் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


டிசம்பர், 2016 வெளியான படங்களின் விவரம்...டிசம்பர் 1 : சைத்தான்


டிசம்பர் 2 : அழகென்ற சொல்லுக்கு அமுதா, பழைய வண்ணாரப்பேட்டை, மாவீரன் கிட்டு


டிசம்பர் 9 : அட்டி, பறந்து செல்லவா, சென்னை 28 - இரண்டாவது இன்னிங்ஸ்


டிசம்பர் 16 : விருகம், அந்தமான், வீரசிவாஜி


டிசம்பர் 23 : கன்னிசாமி, நேர்முகம், மணல் கயிறு, கத்தி சண்டை, பலே வெள்ளையத்தேவா


டிசம்பர் 29 : துருவங்கள் 16


டிசம்பர் 30 : அதிரன், அச்சமின்றி, கண்டதைச் சொல்லுகிறேன், மோ, மியாவ், தலையாட்டி பொம்மை, ஏகனாபுரம்


முந்தைய ஆண்டுகளை விட 2017ம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு முத்திரை பதிக்கும் ஆண்டாக அமையட்டும்.


Advertisement
2017 -ல் எதிர்பார்க்கப்படும் படங்கள்2017 -ல் எதிர்பார்க்கப்படும் படங்கள் தமிழ் சினிமாவிற்கு 2017-ல் முதல் மாதம் எப்படி...? - ஒரு பார்வை தமிழ் சினிமாவிற்கு 2017-ல் முதல் மாதம் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mr Chandramouli
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Karu
  • கரு
  • நடிகை : சாய் பல்லவி
  • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
  Tamil New Film Pariyerum perumal

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in