2017 எப்படி இருக்க போகிறது...? - மனம் திறக்கும் பிரபலங்கள்...! - How 2017 will happend for celebrities
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

2017 எப்படி இருக்க போகிறது...? - மனம் திறக்கும் பிரபலங்கள்...!

31 டிச, 2016 - 18:34 IST
எழுத்தின் அளவு:
How-2017-will-happend-for-celebrities

சினிமாவையும், ரசிகர்களையும் பிரிக்க முடியாத ஒன்று, காலத்திற்கு ஏற்றபடி சினிமா பல்வேறு விதமான பரிணாமங்களை சந்தித்து வருகிறது. ரசிகர்களின் ரசனையும் மாறிக்கொண்டே வருகிறது. ஆஸ்தான நடிகர்களின் படங்கள் மட்டுமின்றி நல்ல கதையம்சம் உடைய படங்களாக இருந்தால் புதுமுக நடிகர்களின் படங்களை கூட சூப்பர் படமாக்கிவிடுவார்கள் ரசிகர்கள். காசு கொடுத்து படம் பார்க்க வரும் ரசிகர்கள் ஒரு நல்ல படம் பார்த்தோம் என்ற திருப்தியுடன் செல்ல வேண்டும் என விரும்புகிறார்கள். அதற்கு நடிகர்கள், நல்ல கதையையும், வித்தியாசமான படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்தால் தான் பீல்ட்டில் நிலைக்க முடியும். 2016-ம் ஆண்டு ஒவ்வொரு நடிகர்களுக்கும் ஒவ்வொரு விதமான அனுபவமாக இருந்தது. சிலருக்கு வெற்றியையும், சிலருக்கு சறுக்கல்களையும் தந்துள்ளது.


2016-ம் ஆண்டு திரை நட்சத்திரங்களுக்கு எப்படடி இருந்தது, வரும் 2017-ம் ஆண்டு எந்த மாதிரி அமைய போகிறது என்று அவர்கள் சொல்வதை இங்கு பார்ப்போம்...
த்ரிஷா : இந்த வருடம் அரண்மனை2, கொடி, நாயகி, மோகினி என நான்கு படங்களில் நடித்தேன். என்னை நிலைநிறுத்தி கொள்ள நல்லதொரு ஆண்டாக இருந்தது. வரும் ஆண்டுக்காக காத்திருகிறேன். ஏனென்றால் வழக்கமான கதையில் இருந்து மாறி, ‛என்ஹெச்-10, விஜய்சேதுபதியுடன் 96, சாமி-2, சதுரங்க வேட்டை-2, அதர்வா தயாரிப்பில் ஒரு படம், மலையாளத்தில் முதல்முறையாக ஒருபடம்... என வரிசையாக நிறைய படங்களில் நடிக்கிறேன். இனி கதை தேர்வில் சொதப்ப மாட்டேன் என்கிறார் த்ரிஷா.


கயல் ஆனந்தி : 2016ம் ஆண்டின் தொடக்கத்திலேயே ‛எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்தில் நடித்தேன். அதன்பிறகு தேசிய விருது படமான விசாரணையில் நல்ல பெயர் கிடைத்தது. அடுத்து கடவுள் இருக்கான் குமாரு படத்தில் நடித்தேன். 2017-ல் சிவி குமார் தயாரிப்பில் ஒருபடம், புதுமுகம் நடிப்பில் ஒரு படம், பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் உடன் ஒரு படத்தில் நடிக்கிறேன். இனி வரும் ஆண்டுகளில் நல்ல படங்களில் நடிப்பேன், அதை நீங்களே பார்ப்பீர்கள். கதை தேர்வு இன்னும் நன்றாக இருக்கும் என்கிறார் கயல் ஆனந்தி.


தனுஷ்: எல்லா வருடம் போலவே 2016-ம் ஆண்டும் சிறப்பாகவே அமைந்தது. விசாரணை, அம்மா கணக்கு போன்ற நல்ல படங்களை தயாரித்தேன். வரும் வருடம் இன்னும் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறன். விஐபி-2, மாரி-2, எனை நோக்கி பாயும் தோட்டா, கார்த்திக் சுப்புராஜ் படம், ஹிந்தி படம், ஹலிவுட் படம் என்று 2017-ம் ஆண்டு முழுக்க அதிகமாக உழைக்க உள்ளேன். இதை தவிர ரஜினி சார் நடிக்கவுள்ள படம் எங்கள் நிறுவனத்தில் தயாரிக்கப்பட இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் எனது பயணம் அடுத்தக்கட்டத்தை நோக்கி பயணிக்கும், எல்லாருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றார் தனுஷ்.விஷ்ணு விஷால்: 2016-ம் ஆண்டு எனக்கு ரொம்ப சிறப்பான வருடமா அமைந்தது. வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படம் என் சொந்த தயாரிப்பில் வெளிவந்து நல்ல பெயரை பெற்று தந்தது. அதேப்போன்று மாவீரன் கிட்டு படமும் மக்களால் பேசப்பட்டது. 2017-ம் ஆண்டில் 5 படங்களில் நடிக்கிறேன். மிகவும் தன்னம்பிக்கையோடு இருக்கிறேன். வரும் ஆண்டு என் சினிமா பயணத்தில் முக்கியமான ஆண்டாக இருக்கும் என்கிறார் விஷ்ணு.


கருணாகரன் : 2016-ம் ஆண்டில் இறைவி, தொடரி, ஜாக்சன் துறை என வெளிவந்த பல படங்கள் எனக்கு நல்ல பெயரையும், அனுபவத்தையும் கொடுத்தது. 2017-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே அஜித் படம் உள்ளிட்ட 8 படங்களில் நடிக்கிறேன். இந்தரோல் தான் நடிப்பேன் என்ற ஒரு வட்டத்திற்குள் சிக்காமல் எல்லா ரோல்களிலும் நடிப்பேன் என்கிறார் கருணாகரன்.


மொட்டை ராஜேந்திரன் : பல படங்களில் சவாலான முறையில் சண்டை காட்சிகளில் நடித்திருக்கிறேன். மக்கள் என்னை நடிகரா நடிகராக ஏற்று கொண்டது மகிழ்ச்சி. 2016ம் ஆண்டில் நான் நடித்த, ஜாக்சன் துரை, தில்லுக்கு துட்டு, ரெமோ, போன்ற படங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் என்னை ரசித்தார்கள். டைட்டில் கார்ட்டில் எனது பெயர் போடும்போதே கைத்தட்டி ரசிக்கிறார்கள், சந்தோஷமாக இருக்கிறது. இனி வரும் ஆண்டில் என் நடிப்பை பாருங்க என்று சவால் விடுகிறார் மொட்டை ராஜேந்திரன்.


ஹன்சிகா : 2016ம் ஆண்டு எனக்கு லக்கி தான். அரண்மனை-2, மனிதன் படங்கள் நல்ல பெயரை தந்தன. வரும் ஆண்டும் அப்படியே தொடரும் என நம்புகிறேன். விரைவில் நான் நடித்த போகன் படம் வெளிவர உள்ளது. இன்னும் பல படங்களின் அறிவிப்புகள் வெளியாகும், ரசிகர்களுக்கு நன்றி என்கிறார் ஹன்சிகா.


ஆஸ்னா சவேரி : 2016-ம் ஆண்டு எனக்கு ஆசீர்வதிக்கப்பட்ட ஆண்டு என்று சொல்லலாம். வரும் ஆண்டு கையில் படங்கள் இருக்கிறது. இந்த வருடம் ஸ்கூபா டைவிங் , ஸ்கை டைவ் என்று பலவற்றையும் செய்ய ஆசை, பார்க்கலாம் என்கிறார் ஆஸ்னா.


மது ஷாலினி : அவன் இவன் படம் நல்லதொரு அடையாளத்தை தந்தது. அதன்பின் கமலின் தூங்காவனம் படத்தில் என் நடிப்பை பாராட்டினார்கள். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் தமிழில் எனக்கு நல்ல கதைகள் வரல, ஆனாலும் நல்ல கதைகள் வரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். 2016ம் ஆண்டில் பாலி தீவு சென்று வந்தது எனக்கு அருமையானதொரு ஆரம்பமாக இருந்தது. வரும் வருடம், தெலுங்கில் தேசிய விருது பெற்ற இயக்குனர் படத்தில் நடிக்க உள்ளேன். அதைத்தவிர ஐதராபாத்தில் உள்ள செஸ் அகடாமியில் நானும் ஒரு பார்ட்னராக சேர்ந்து உள்ளேன். வரும் ஆண்டில் பல அதிசயங்களும், ஆச்சர்யங்களும் காத்திருக்கிறது என்கிறார் மதுஷாலினி.


லைலா: என்னை இன்னும் மறக்காமல் தொடர்பு கொண்டு பேசியதற்கு என் நன்றி, தமிழ் ரசிகர்களுக்கும், தினமலர் வாசகர்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள். குடும்பம், குழந்தைகள் என்று மும்பையில் பிசியாக இருக்கேன். இந்த வருடம் எனக்கு கொஞ்சம் போர் தான், ஆக்கபூர்வமான செயல் எதுவும் செய்யவில்லை என்ற உணர்வு உள்ளது. வரும் வருடம் பல செயல் திட்டங்கள் செய்யும் எண்ணம் இருக்கிறது, வரும் ஆண்டு சிறப்பாக இருக்கும் என நினைக்றேன் என்கிறார் லைலா.


ஆர்.ஜே.பாலாஜி : நானும் ரௌடி படம் வெளி வந்த பிறகு மக்கள் கொடுத்த பாராட்டை நான் என்றும் மறக்க மாட்டேன். அந்த தைரியத்தில் தொடர்ந்து நடிக்கலாம் என முடிவு செய்தேன். 2016-ல் வெளிவந்த புகழ், தேவி, கடவுள் இருக்கான் குமாரு, கவலை வேண்டாம் உள்ளிட்ட 6 படங்கள் வெளிவந்தது. வரும் வருடம் மணிரத்தினம் படம் உட்பட பல பெரிய படங்களில் நடிக்க கிடைத்த வாய்ப்பை பெருமையாக கருதுகிறேன். இன்னும் என் படங்களில் சிறப்பான பங்களிப்பை தருவேன் என்கிறார் பாலாஜி.


Advertisement
2016 - திரையுலகில் சண்டைகளும்... சர்ச்சைகளும்...!2016 - திரையுலகில் சண்டைகளும்... ... 2017 -ல் எதிர்பார்க்கப்படும் படங்கள் 2017 -ல் எதிர்பார்க்கப்படும் படங்கள்


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film manik
  • மாணிக்
  • நடிகர் : மா.க.பா.ஆனந்த்
  • நடிகை : சூசா குமார்
  • இயக்குனர் :மார்ட்டின்
  Tamil New Film Melanattu marumagan
  Tamil New Film Mom
  • மாம்
  • நடிகை : ஸ்ரீ தேவி
  • இயக்குனர் : ,ரவி உத்யவர்
  Tamil New Film Puyala Kilambi Varom

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in