Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

2016-ல் ‛இன்னிசை' தந்த இசையமைப்பாளர்கள் யார்...?

31 டிச,2016 - 13:50 IST
எழுத்தின் அளவு:

பாடல்கள் இல்லாமல் தமிழ் சினிமா கிடையாது. படத்தின் பாடல்களை வைத்தே ஏராளமான படங்கள் ஹிட்டாகியுள்ளன. அந்தளவுக்கு ஒரு படத்தில் பாடல் என்பது முக்கியமான ஒன்றாகிவிட்டது. ஜிவி.பிரகாஷ், விஜய் ஆண்டனி போன்றவர்கள் நடிப்பில் பிஸியாகிவிட்டதால் இசையமைப்பதை குறைத்துவிட்டார். இருந்தாலும் அவ்வப்போது சில படங்களில் இசையமைத்து வருகின்றனர். 2016ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் தங்கள் இசையால் ரசிகர்களை மகிழ்வித்த இசையமைப்பாளர்களை பற்றி இங்கு பார்ப்போம்...


இமான் : 2015-ம் ஆண்டை போலவே 2016-ம் ஆண்டிலும் இமானே முன்னிலையில் இருக்கிறார். இவர் 2016-ல் ‛‛ரஜினி முருகன், மிருதன், போக்கிரி ராஜா, வெற்றி வேல், மருது, வாகா, முடிஞ்சா இவன புடி, தொடரி, றெக்க, மீன்குழம்பும் மண்பானையும், மாவீரன் கிட்டு என 12 படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதில் ஒரு சில படங்களை தவிர அனைத்து படங்களின் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. குறிப்பாக ‛‛உன் மேல ஒரு கண்ணு..., மிருதா மிருதா..., கண்ண காட்டு போதும்...., கண்ணம்மா கண்ணம்மா... போன்ற பாடல்களை ரசிகர்கள் அதிகம் விரும்பி கேட்டனர்.


இளையராஜா : தான் என்றும் ராஜா தான் என இப்போது பிஸியான இசையமைப்பாளராக உள்ளார் இளையராஜா. 2016-ம் ஆண்டில், ‛‛தாரை தப்பட்டை, கிடாரி மகுடி பூசாரி, ஓய், அம்மா கணக்கு, ஒரு மெல்லிய கோடு, அப்பா, குற்றமே தண்டனை என 7 படங்களுக்கு இசையமைத்தார். இதில் தாரை தப்பட்டை படம் அவரது 1000-மாவது படமாக இருந்தது சிறப்பு. ஆனால் அந்தப்படம் தோல்வியை தழுவியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது.


சந்தோஷ் நாராயணன் : குறுகிய காலத்திலேயே ரஜினி படத்திற்கு இசையமைக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டார் சந்தோஷ் நாரயணன். 2016-ம் ஆண்டில், ‛‛இறுதிசுற்று, காதலும் கடந்து போகும், மனிதன், இறைவி, கபாலி, காஷ்மோரா, கொடி போன்ற படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இதில் ரஜினியின் கபாலி படம் அவரை வேறு லெவலுக்கு கொண்டு போய் சேர்த்தது.


ஜிவி பிரகாஷ் குமார் : ஹீரோவாகிவிட்ட போதும் 2016-ம் ஆண்டில் இசையமைப்பிலும் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார் ஜிவி பிரகாஷ். இவர், ‛‛விசாரணை, தெறி, பென்சில், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, மீண்டும் ஒரு காதல் கதை, கடவுள் இருக்கான் குமாரு'' என 6 படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.


ஜஸ்டின் பிரபாகரன் : தமிழ் சினிமாவில் நம்பிக்கை தரும் ஒரு இசையமைப்பாளர் என்று இவரை சொல்லலாம். இவரது இசையமைப்பில், ‛‛ஒரு நாள் கூத்து, ராஜா மந்திரி, கோ 2, கவலை வேண்டாம், சேதுபதி போன்ற படங்கள் வெளிவந்தன. இதில் ஒரு நாள் கூத்து, சேதுபதி படங்கள் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றன.


சித்தார்த் விபின் : ‛‛காபி வித் கும்ஸ்'' எனும் ஒற்றை டயலாக்கில் ரசிகர்களை கவர்ந்த சித்தார்த் விபின், 2016-ம் ஆண்டில் ‛‛ஜாக்சன் துரை, முத்தின கத்திரிக்கா, நவரச திலகம், ஹலோ நான் பேய் பேசுறேன் போன்ற படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இன்னும் கொஞ்சம் தரமான இசையை இவர் தந்தார் என்றால் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய ரவுண்ட் வரலாம்.விஜய் ஆண்டனி : விஜய் ஆண்டனி இசையமைப்பில் ‛‛பிச்சைக்காரன், நம்பியார், சைத்தான்'' படங்கள் வெளிவந்தன. இதில் அவரது படங்கள் இரண்டு. நம்பியார் மட்டும் ஸ்ரீகாந்த் படம், இதுவும் சில ஆண்டுகளுக்கு முன்னர் இசையமைத்தது. படம் வெளியாக தாமதமாகிவிட்டது. மூன்றில் பிச்சைக்காரன் மட்டும் கொஞ்சம் பேசப்பட்டது.


தமன் : தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் மாறி மாறி இசையமைத்து வரும் தமன், 2016-ம் ஆண்டில் தமிழை விட தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தினார். இதனால் 2016-ல் இவரது இசையமைப்பில் சாகசம், ஆறாது சினம், தில்லுக்கு துட்டு படங்கள் மட்டும் தான் வெளிவந்தன.


விஷால் சந்திரசேகர் : புதுமுக வரவு விஷால் சந்திர சேகர், ‛‛ஜில் ஜங் ஜக், ஆக்கம், சவாரி என 3 படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதில் ஜில் ஜங் ஜக் படத்தில் ‛ஷூட் த குருவி' மட்டும் ரசிகர்களை கவர்ந்தது.


பெண் இசையமைப்பாளர் : 2016-ம் ஆண்டில் ஸ்ரீவித்யா என்ற பெண் இசை அமைப்பாளர் அறிமுகமானார். இவர் ‛‛என்ன பிடிச்சிருக்கா, ஜம்புலிங்கம் 3டி படத்துக்கும் இசை அமைத்திருந்தார்.


ஷான் ரோல்டன் : வரும் ஆண்டில் நம்பிக்கை தரக்கூடிய ஒரு இசையமைப்பாளர் என்று ஷான் ரோல்டனை சொல்லலாம். 2016-ம் ஆண்டில் ‛ஜோக்கர்' படத்திற்கு இசையமைத்தார். நல்ல வரவேற்பு கிடைத்தது. வரும் ஆண்டில் தனுஷ் படம் உட்பட பல பெரிய படங்களுக்கு இசையமைக்கிறார்.


ஏ.ஆர்.ரஹ்மான் : இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், 2016-ம் ஆண்டில் ‛‛24, அச்சம் என்பது மடமையடா'' என இரண்டு படங்களுக்கு இசையமைத்தார். இரண்டு படங்களின் பாடல்களும் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் அச்சம் என்பது மடமையடா படத்தின் பாடல்கள் அமோக வரவேற்பை பெற்றது.


ஹாரீஸ் ஜெயராஜ் : ஹாரீஸ் ஜெயராஜ், கெத்து, இருமுகன் என இரண்டு படங்களுக்கு இசையமைத்தார். இதில் இருமுகன் வரவேற்பை பெற்றது.


யுவன் ஷங்கர் ராஜா : ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் ரீ-என்ட்ரியாகியுள்ள யுவன், ‛‛தர்மதுரை, சென்னை 28-2'' படங்களுக்கு இசையமைத்து தன் பங்குகிற்கு வெற்றி கொடுத்தார். வரும் ஆண்டில் இன்னும் பல படங்களை அவரிடம் எதிர்பார்க்கலாம்.


அனிருத் : 2016-ம் ஆண்டின் துவக்கத்திலேயே ‛பீப்' பாடல் சர்ச்சையில் சிக்கிய அனிருத்திற்கு ரெமோ படம் மட்டும் தான் வெளிவந்தது. அதுவும் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. அடுத்தாண்டு இவரது இசையமைப்பில் அஜித்தின் 57-வது படம் உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளது.


ஆக, 2016-ம் ஆண்டில் பல இளம் புதிய இசையமைப்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். வரும் ஆண்டுகளில் கண்டிப்பாக தனக்கென ஒரு இடத்தை இவர்கள் தங்களது இசையால் ரசிகர்களை மகிழ்விப்பர் என நம்பலாம்...!


Advertisement
2016: காற்றில் கலந்தவர்கள்2016: காற்றில் கலந்தவர்கள் 2016 - திரையுலகில் சண்டைகளும்... சர்ச்சைகளும்...! 2016 - திரையுலகில் சண்டைகளும்... ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Naalu Peruku Nalladhuna Edhuvum Thappilla
  Tamil New Film Yaar Ivan
  • யார் இவன்
  • நடிகர் : சச்சின் ஜே.ஜோஷி
  • நடிகை : இஷா குப்தா
  • இயக்குனர் :சத்ய
  Tamil New Film Kadamban
  • கடம்பன்
  • நடிகர் : ஆர்யா
  • நடிகை : கத்ரீனா தெரஸா
  • இயக்குனர் :என்.ராகவன்
  Tamil New Film vanamagan
  • வனமகன்
  • நடிகர் : ஜெயம் ரவி
  • நடிகை : சாயிஷா சைகல்
  • இயக்குனர் :ஏ.எல்.விஜய்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in