வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
2016ம் ஆண்டில் எண்ணிக்கையின் அடிப்படையில் அதிக படங்களில் நடித்து டாப் 5 இடம் பிடித்துள்ள நடிகைகள் வருமாறு....
ஜஸ்வர்யா ராஜேஷ் : அட்டக்கத்தி படத்தின் மூலம் அறிமுகமான ஜஸ்வர்யா ராஜேஷ், 2016ம் ஆண்டில் ஆறாது சினம், ஹலோ நான் பேய் பேசுகிறேன், மனிதன், தர்மதுரை, குற்றமே தண்டனை, கடலை, பறந்து செல்ல வா, மோ ஆகிய 8 படங்களில் நடித்து முதல் இடத்தை பிடித்துள்ளார்.
ஸ்ரீதிவ்யா : பென்சில், மருது, காஷ்மோரா, மாவீரன் கிட்டு, பெங்களூரு நாட்கள் ஆகிய 5 படங்களில் நடித்து 2வது இடத்தை பிடித்துள்ளார்.
இவர்களுக்கு அடுத்தப்படியாக நயன்தாரா, ஹன்சிகா, தலா 4 படங்களில் நடித்து 3வது இடத்தை பிடித்துள்ளனர்.
நயன்தாரா: இது நம்ம ஆளு, திருநாள், இருமுகன், காஷ்மோரா படங்களில் நயன்தாரா நடித்துள்ளார்.
ஹன்சிகா : அரண்மணை-2, போக்கிரி ராஜா, உயிரே உயிரே, மனிதன் ஆகிய நான்கு படங்களில் ஹன்சிகா நடித்துள்ளார்.
நிக்கி கல்ராணி: கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், கடவுள் இருக்கான் குமாரு ஆகிய 3 படங்களில் நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.
த்ரிஷா : அரண்மணை 2, நாயகி, கொடி ஆகிய மூன்று படங்களில் நடித்திருக்கிறார்.
தமன்னா : தோழா, தேவி, கத்தி சண்டை என மூன்று படங்களில் நடித்திருக்கிறார்.
ஆனந்தி : விசாரணை, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு ஆகிய 3 படங்களில் நடித்திருக்கிறார்.
சாந்தினி : வில்அம்பு, நய்யப்புடை, கண்ல காச காட்டப்பா படங்களில் நடித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ் : ரஜினி முருகன், தொடரி, ரெமோ என மூன்று படங்களில் நடித்திருக்கிறார்.
இந்தாண்டு அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் நடித்த படங்கள் எதுவும் வெளிவரவில்லை.