Advertisement

சிறப்புச்செய்திகள்

சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

இந்தாண்டு ‛தெறி தீபாவளி - மகளுடன் மீனாவின் தீபாவளி பேட்டி!

27 அக், 2016 - 16:03 IST
எழுத்தின் அளவு:
This-year-Theri-diwali-says-Meena

நைனிகா நடித்த தெறி, இந்த ஆண்டோட பெரிய ஹிட்; நானும், மூணு வருஷத்துக்கு பின், இப்ப, மலையாளத்துல மோகன்லால் சார் கூட நடிச்சிட்டு இருக்கேன். அந்த விதத்துல பார்த்தா, நிஜமாவே இது, எங்களுக்கு, தெறி தீபாவளி தான்... தன் மீன் போன்ற கண்களில், பூரிப்பு மத்தாப்பை தெறிக்க விட்டபடி பேசுகிறார், நடிகை மீனா. மகளோடு சேர்த்து தனக்கும் இது வெற்றிகரமான ஆண்டாக அமைந்ததில் இரட்டை சந்தோஷத்தில் இருக்கிறார்.


தெறிக்கு முன், பின், நைனிகா எப்படி?


எந்த மாற்றமும் இல்லை; அப்படியே தான் இருக்காங்க. நடிச்சுட்டு இருக்கிறோம்ங்கிற எண்ணமே இல்லாம தான் அந்த படத்தை முடிச்சு கொடுத்தாங்க. ஏதோ, பிக்னிக் போற மாதிரி ஜாலியா போயிட்டு, ஜாலியா வந்துட்டாங்க. ஆனா, படத்தோட இசை வெளியீட்டு விழாவுல அவ்ளோ பெரிய கூட்டத்தை பார்த்ததும் கொஞ்சம் பயந்துட்டாங்க. அதுதான், அவங்க கலந்துக்கிற முதல் சினிமா பங்ஷன்! ஆனா, இப்பெல்லாம் நான் ஷூட்டிங் கிளம்பினா, எனக்கு எப்போ ஷூட்டிங்?ன்னு கேட்கிறாங்க. இப்போதைக்கு படிப்புல மட்டும் கவனமா இருங்கன்னு சொல்லி வைச்சிருக்கேன்.


தெறிக்கு கிடைத்த பாராட்டுகள்ல மறக்க முடியாதது?


நிறைய சொல்லலாம்; புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா அது, இதுன்னு நிறைய பாராட்டுகள். ஆனா, தெறி படத்தோட, க்ளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்பின் போது, நீ ஆசிர்வதிக்கப்பட்ட நடிகை மட்டும் இல்லம்மா; ஆசிர்வதிக்கப்பட்ட தாயும் கூடன்னு சொன்னார், மகேந்திரன் சார். என்னை பொறுத்த வரைக்கும், அந்த வார்த்தைகளை, பெரிய பரிசா நினைக்கிறேன்.


பெரியவங்க, குழந்தைங்க உலகத்துக்குள்ளே போறதுக்கு, டிப்ஸ் தாங்களேன்...?


தினமும் அவங்க கூட கொஞ்சம் நேரம் உட்கார்ந்து பேசுங்க; அது போதும். ஆபிஸ் டென்ஷன், குடும்ப பிரச்னை இதெல்லாத்தையும் துாக்கி போட்டுட்டு, அவங்ககிட்ட, இன்னைக்கு ஸ்கூல்ல என்ன செய்தீங்க; மிஸ் என்ன சொன்னாங்க... அப்படின்னு தினமும் ரெண்டு நிமிஷம் பேசுனா போதும்; நம்மளை, அவங்க உலகத்துக்குள்ளே, சுலபமா அழைச்சிட்டுப் போயிடுவாங்க.


குழந்தை நட்சத்திரம் மீனா; நடிகை மீனா; அம்மா மீனா எதில் சிரமங்கள் அதிகம்?


நான் நடிகையா இருந்தப்போ, நாள் முழுக்க ஷூட்டிங் இருக்கும். அப்பெல்லாம் நினைச்சுப்பேன்; நம்ம வாழ்க்கையிலயே இதுதான் சிரமமான காலம்ன்னு! ஆனா, அம்மாவான பின் தான் தெரியுது, இது எவ்ளோ பெரிய கஷ்டம்ன்னு! நிறைய பொறுப்புகள் கூடியிருக்கு; இவங்கள பத்தின சிந்தனை தான் எந்நேரமும் மனசுல ஓடிட்டே இருக்கு, இந்த வகையில சொல்லணும்ன்னா, அம்மா மீனா ரொம்ப பாவங்க.


நைனிகா வளர்ப்பில் உங்கள் தாய் மற்றும் கணவரின் பங்களிப்பு...?


உண்மையை சொல்லணும்ன்னா, எங்கம்மா தான் நைனிகாவை முழுமையா பார்த்துக்குறாங்க. முதல்ல என்னை வளர்த்து, ஆளாக்குனாங்க; இப்போ என் மகளை! பாவம்... அவங்களுக்கு அம்மா போஸ்டிங்ல இருந்து புரோமோஷனே கிடையாது போல! அதே மாதிரி, பொண்ணுக்கு நேரம் ஒதுக்குறது, வெளியே கூட்டிட்டுப் போறதுன்னு நல்ல அப்பாவா இருக்கார், என் கணவர். என்ன... நான் ஷூட்டிங் போயிட்டா பாப்பாவை தனியா மேனேஜ் பண்றதுல அவருக்கு கொஞ்சம் சிரமம்.


உங்களுக்கும், நைனிகாவுக்கும் ஒத்துப்போற குணம்...?


(பலமாக சிரிக்கிறார்) பார்க்கத் தான் என்னை மாதிரி இருக்காங்க; ஆனா, குணத்துல அவங்க அப்பா மாதிரி. நான் கொஞ்சம் அமைதியான கேரக்டர்; எதையும் நிதானமா செய்வேன். அவங்க அப்படி கிடையாது; பரபரன்னு ஏதாவது செய்துட்டே இருப்பாங்க. அவங்களை பத்திரமா பார்த்துக்கிறதே நமக்கு பெரிய வேலையா இருக்கும்.


இந்த தீபாவளிக்கு என்ன ஸ்பெஷல்?


தெறி தான் ஸ்பெஷல்; 100 நாட்கள் ஓடும் சினிமாவை இப்பெல்லாம் பாக்கவே முடியறது இல்ல. நான் ஹீரோயினா இருந்த காலத்துல, 175வது நாள் வெற்றிவிழா எல்லாம் நடக்கும். ஆனா, இப்போ, வார கடைசிகள்ல மட்டும் தான் படங்கள் கவனிக்கப்படுது. இந்தமாதிரியான சூழல்ல, ஒரு படம், 100 நாட்கள் ஓடுறது சாதாரணமான விஷயம் இல்ல. நைனிகாவுக்கும், அந்த படத்துல பங்கு இருக்குன்னு நினைக்கும் போது, ரொம்ப சந்தோஷமா இருக்கு.


தமிழ் சினிமா பக்கம் வர மாட்டேங்குறீங்களே...?


அய்யய்யோ... வரக்கூடாதுன்னு இல்ல; நல்ல கதாபாத்திரம் கிடைச்சா நடிக்கிறதுக்கு ஆவலாகத் தான் இருக்கேன். ஏன்னா, என் மனசுக்கு எப்பவுமே நெருக்கமானது, தமிழ் இண்டஸ்ட்ரி. த்ருஷ்யம் படம் மாதிரி நல்ல பாத்திரங்கள் தமிழ்ல அமைஞ்சா கண்டிப்பா நடிப்பேன்.


துறுதுறுவென்று அங்குமிங்கும் அலைபாய்ந்தபடி இருந்த, தெறி பேபியிடம், சில பட்டாசு கேள்விகளை முன் வைத்தோம்...


நைனிகாவுக்கு பட்டாசு பிடிக்குமா?


ம்ம்ம்...நோ... எனக்கு அம்மாவும், அப்பாவும் பட்டாசு வெடிக்கிறதைப் பார்க்கத் தான் பிடிக்கும்; மத்தாப்பு தான் என்னோட, பேவரைட்!


உங்களுக்கு பிடிச்ச கார்ட்டூன் கேரக்டர்?


ஸ்னோ குயின் எல்ஸா தான் ரொம்ப பிடிக்கும். நானும் அவங்களை மாதிரி, மேஜிக் எல்லாம் பண்ணுவேனே!


உங்களுக்கு எவ்ளோ ப்ரெண்ட்ஸ் இருக்காங்க?


நிறைய இருக்காங்க. கிளாஸ்ல எல்லாரும் என் ப்ரெண்ட்ஸ் தான். எல்லாரும் என்னை, தெறி பேபின்னு தான் கூப்பிடுவாங்க.


மீனாவின் கையில் இருந்த அலைபேசியை சட்டென்று வாங்கி, கேமராவை, ஆன் செய்து, படம் பிடிப்பதில் ஆர்வமாகிறார் நைனிகா. அலைபேசியை அவரிடம் இருந்து கைப்பற்ற, மீனா அவரை துரத்த, மின்னலாய் பாய்கிறார், தெறி பேபி!


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in