நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
மலையாள சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களிலும் நம்ம ஊர் சந்தானம் போல தவிர்க்க முடியாத நண்பர் கேரக்டரில் வந்து காமெடியில் கலக்குபவர் நகைச்சுவை நடிகர் அஜு வர்கீஸ்.. இந்த ஓணம் சீசனில் வெளியான நான்கு படங்களில் மூன்றில் இவரது பங்களிப்பு இருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.. ஆனால் அதைவிட மிகப்பெரிய சந்தோஷமாக சமீபத்தில் இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகியுளார் அஜு வர்கீஸ்..
இதில் இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால் ஏற்கனவே 2014லிலேயே இவரது மனைவி இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார் என்பது தான். அஜு வர்கீசும் அவரது மனைவி அகஸ்டினாவும் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள்.. முதலில் இரட்டையராக பிறந்த பெண் குழந்தைகளுக்கு இவான் மற்றும் சஜூவானா என பெயரிட்ட அஜு வர்கீஸ் தம்பதியினர், இப்போது பிறந்துள்ள ஆண் குழந்தைகளுக்கு ஜேக் மற்றும் லூக் என பெயர் வைக்க இருக்கிறார்களாம்.