Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

அனைவரும் விரும்பும் பெண்ணாக இருக்க ஆசை: ரித்திகா சிங்

15 செப், 2016 - 07:33 IST
எழுத்தின் அளவு:
Everyone-wants-to-like-me-:-rittika-Singh

இறுதிச்சுற்று படம் மூலம், கோடம்பாக்கத்தில், தன் முதல் சுற்றை துவங்கியவர். ஒரே படம், ஊர் முழுக்க பாராட்டு, தேசிய விருது என, பேசப்படும் பெருமைக்குரிய நடிகையாகி விட்டார் ரித்திகா. பாக்ஸிங் வீராங்கனை என்பது, அவரது பேச்சிலும் தெரிகிறது. அவருடன் பேசியதிலிருந்து...


ஆண்டவன் கட்டளை படம், அதில் உங்க ரோல் பற்றி...


என் முதல் படத்திற்கும், ஆண்டவன் கட்டளை படத்திற்கும் ரொம்பவே வித்தியாசம் இருக்கும். ரொம்ப நல்ல கதை. காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டன் இயக்கிய படம். நான் ரிப்போர்ட்டராக நடித்திருக்கிறேன். விஜய் சேதுபதி, கிராமத்தில் இருந்து சென்னைக்கு வரும் ஒரு இளைஞர். அவர் சந்திக்கும் பிரச்னைகள் தான் கதை.


படப்பிடிப்பு தளம் எப்படி இருந்தது?


ஒரே ஜாலி தான். துவக்கத்தில், எனக்கு அவ்வளவாக தமிழ் பேச தெரியாது, புரிந்து கொள்ள முடியும். யாரும் ஆங்கிலத்தில் பேசமாட்டாங்க. எனக்கும், படக்குழுவினருக்கும் ஒரு மொழிபெயர்ப்பாளர் இருந்து தான், உதவி செய்தாங்க. இப்போது, தமிழ் கொஞ்சம் பேச ஆரம்பிச்சிட்டேன். ரிப்போர்ட்டராக நடித்ததால், டிவி சேனல்களை பார்த்து, கற்றுக் கொண்டேன்.


நீங்கள் பேட்டி எடுக்க ஆசைப்படும் நபர் யார்?


ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற, சிந்துவை பேட்டி எடுக்க ஆசைப்படுகிறேன். கடின உழைப்பால், பதக்கம் பெற்று பாராட்டப்பட்டவர். அவரை பேட்டி எடுத்தால் சந்தோஷப்படுவேன். அவர் சாதித்தது, இந்தியாவுக்கே பெருமை.


விஜய் சேதுபதி பற்றி...


படத்தில் எனக்கு டயலாக் பேச ரொம்ப உதவினார். கேமரா ஸ்டார்ட் ஆனதும், பக்கத்தில் நின்று, மறக்காமல் வசனம் பேச உதவினார். ரொம்ப நல்ல மனிதர். செட்டில், அவர் இருந்தாலே கலகலப்பாக இருக்கும்.


இந்த படத்தில் நடிக்கலாம் என்று ஒரு கதையை எப்படி தேர்வு செய்றீங்க?


முதலில், யார் இயக்குனர் என்பதை பார்க்கிறேன். ஏனென்றால், நான் பயிற்சி பெற்ற நடிகை அல்ல. எப்படி நடிக்க வேண்டும் என, இயக்குனர்கள் சொல்வதை செய்கிறேன். ஒரு மாணவியாக, அவர்கள் முன் நிற்கிறேன். அதனால், இயக்குனர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன். அதற்கு அடுத்து தான், மற்ற எல்லாவற்றையும் பார்க்கிறேன்.


இப்போது எந்தெந்த படங்களில் நடிக்கிறீங்க?


தமிழில், லாரன்சுடன் ஒரு படம், பாதி முடிந்து விட்டது. தெலுங்கில், வெங்கடேசுடன் ஒரு படம்; இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.


முதல் படத்தில் தேசிய விருது கிடைத்தது எப்படி இருந்தது?


எனக்கு முதலில் அழுகையே வந்து விட்டது. ஏனென்றால், முதல் படத்தில் தேசிய விருது கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. தேசிய விருது என்பது, ஒவ்வொரு நடிகருக்கும் தங்க மெடல் கிடைத்தது போல. இந்த விஷயத்தில், நான் அதிர்ஷ்டசாலி என்று தான் சொல்வேன். நடிகையாக எனக்கு கிடைத்த வாய்ப்பை, சரியாக பயன்படுத்தி இருக்கேன்னு நினைக்கிறேன்.


தமிழ் ரசிகர்கள் பற்றி...


ரொம்ப நல்ல மனிதர்கள். எனக்கு ரொம்பவும் ஆதரவு அளித்தனர். கண்டிப்பாக, அவர்கள் சந்தோஷப்படுவது போன்ற, நல்ல படங்கள் தருவேன்.


படங்களில் வர்ற மாதிரி நீங்க ரொம்ப துறுதுறு பொண்ணா?


எனக்கு மனதில் என்ன படுகிறதோ, அதை பட்டென சொல்லி விடுவேன். குறிப்பாக, நான் ஒரு அழகான பெண்ணை சந்தித்தால், நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என, உடனடியாக கூறிவிடுவேன். வேகமாக செயல்பட விரும்புவேன். எல்லாரும் விரும்பும் பெண்ணாக இருக்கவே ஆசைப்படுகிறேன்.


சமீபத்தில் குத்துச்சண்டை போட்டிகளில் கலந்து கொண்டீர்களா?


இல்லை. இப்போது குத்துச் சண்டை போட்டிகளில் பங்கேற்றால், நான்கு ரவுண்ட் வரை சண்டை போட வேண்டியுள்ளது. முகத்தில், காயம் பட்டாலோ அல்லது அடிபட்டு வீக்கம் ஏற்பட்டாலோ, படப்பிடிப்பு பாதிக்கும். அதனால், இப்போது போட்டிகளில் பங்கேற்கவில்லை. நடிகை என்பதால், முகத்தில் கவனம் செலுத்த வேண்டிஉள்ளது. தொடர்பு விட்டுப் போகாமல் இருப்பதற்கு, தினமும் சிறிய அளவில் பயிற்சி எடுத்து வருகிறேன்.


உங்க ரோல் மாடல் யார்?


ஜோதிகா மேடம்; அவங்க நடிப்பு எனக்கு பிடிக்கும்.


தமிழில் எந்த ஹீரோவுடன் நடிக்க விரும்புறீங்க?


அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடிக்க ஆசை. தனுஷ், மாதவன் இப்படி, பெரிய லிஸ்ட் இருக்கு.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in