'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படத்தில் நாயகியாக நடிக்கும் காஜல் அகர்வால், நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இணைந்து நடிக்கும் ஜனதா கேரேஜ் படத்தில் குத்தாட்டம் போட்டுள்ளார். படங்களில் நாயகியாக நடித்து வரும் காஜல் அகர்வால், முதன் முறையாக ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். அப்பாடலில் இடம்பெறும் காட்சிகளின் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றது. ஷ்ருதிஹாசன், தமன்னா உள்ளிட்டோரின் குத்தாட்ட பாடல்கள் ரசிகர்களைக் கவர்ந்துள்ள நிலையில் காஜலின் குத்தாட்ட பாடலுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமந்தா, நித்யா மேனன் என இரு நாயகிகள் நடித்துள்ள ஜனதா கேரேஜ் திரைப்படம் செப்டம்பர் 1ல் திரைக்கு வரவுள்ளது.