Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

‛அப்பா - அப்பப்பா..., ‛கபாலி - மகிழ்ச்சிடா... : ஜுலை மாதப் படங்கள் ஓர் பார்வை...!

02 ஆக, 2016 - 13:06 IST
எழுத்தின் அளவு:
How-is-July-month-for-Tamil-Cinema

2016ம் ஆண்டின் ஜுலை மாதம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான மாதமாக அமைந்துவிட்டது. இந்தியத் திரையுலக வரலாற்றிலேயே ஒரு படம் வெளியான சில நாட்களிலேயே 300 கோடி ரூபாயைக் கடந்த வசூல் சாதனையை கபாலி படம் பெற்றுள்ளது. இது தமிழ்த் திரையுலகத்திற்குக் கிடைத்துள்ள ஒரு பெருமை.

ஹிந்தித் திரையுலகத்திலும், தெலுங்குத் திரையுலகத்திலும், மலையாள, கன்னடத் திரையுலகத்திலும் கபாலி படத்திற்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போயுள்ளார்கள். ஒரு பிராந்திய மொழிப் படத்திற்கு 60 வயதைக் கடந்த ஒரு நடிகர் நடித்த படத்திற்கு இவ்வளவு வரவேற்பா என திகைத்துப் போயுள்ளார்கள்.


கபாலி பட வசூலையும் வெற்றியையும் தமிழ்த் திரையுலகமும், தமிழ் ரசிகர்களும் கொண்டாட வேண்டிய சூழ்நிலையில் சில காரணங்களுக்காக அந்த வெற்றியை சிலர் மறைக்கப் பார்க்கிறார்கள் என்பதுதான் வேதனையான விஷயம். தயாரிப்பாளரே படத்தின் வசூல் இவ்வளவு என்று சொல்லிய பிறகும் விவாதங்கள் தொடர்வதை வைத்தே அதைப் புரிந்து கொள்ளலாம்.


ஜுலை 22ம் தேதி உலகம் முழுவதும் மிக அதிகமான திரையரங்களில் கபாலி படம் வெளியானது. தமிழ் நாட்டில் சுமார் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானதால் 22ம் தேதிக்கு முன் வாரமும், பின் வாரமும் சிறிய பட்ஜெட் படங்களே வெளிவந்தன.


ஜுலை 29ம் தேதி வெள்ளிக்கிழமை 13ம் தேதி என்ற ஒரே ஒரு படம் மட்டுமே வெளியானது. கிராஃபிக்ஸ் தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழ்த் திரையுலகம் ஹாலிவுட்டுக்கு இணையாக வளர்ந்து வரும் நிலையில் இந்தப் படத்தில் இப்படி ஒரு கிராஃபிக்சா என நொந்து போக வைத்துவிட்டார்கள்.


ஜுலை 15ம் தேதி “கோடம்பாக்கத்தில் கோகிலா, ஒன்பதிலிருந்து பத்து வரை, கிழக்கு சந்து, சும்மாவே ஆடுவோம், மேக மூட்டம்” ஆகிய படங்கள் வெளிவந்தன. அன்றைய தேதியில் வெளிவந்த படங்கள் அனைத்து மினிமம் பட்ஜெட் படங்கள்தான். அந்தப் படங்களுக்கு அவர்கள் செய்த விளம்பரப் பணமாவது திரும்ப கிடைத்திருக்குமா என்பதும் சந்தேகம்தான்.


ஜுலை 8ம் தேதி கககபோ, அர்த்தநாரி” ஆகிய இரண்டு படங்கள் வெளிவந்தன. இரண்டு படங்களுமே வழக்கம் போல இந்த ஆண்டின் படங்களின் எண்ணிக்கையை கூட்டும் படங்களாக மட்டுமே அமைந்தன.


ஜுலை 7ம் தேதி தில்லுக்கு துட்டு, அட்ரா மச்சான் விசிலு ஆகிய படங்கள் வெளிவந்தன. லிங்கா படத்தின் ஏற்பட்ட நஷ்டத்தை மையமாக வந்து ரஜினியைக் கிண்டலடிக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட படம்தான் அட்ரா மச்சான் விசிலு. இப்படி ஒரு படம் எடுத்து மீண்டும் நஷ்டப்படுவதற்குப் பதிலாக லிங்கா நஷ்டத்தைப் பொறுத்துக் கொண்டு அமைதியாகவே அமர்ந்திருக்கலாம்.


தில்லுக்கு துட்டு படம் நாயகனாக நடிக்க ஆரம்பித்த பின் சந்தானத்திற்கு முதல் முறையாக திருப்புமுனையைக் கொடுத்த படமாக அமைந்தது. அதற்கு முன் அவர் நாயகனாக நடித்த படங்கள் கமர்ஷியல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை. ஆனால், தில்லுக்கு துட்டு படத்தின் வெற்றி சந்தானத்தை வைத்து செல்வராகவன் படம் இயக்கும் அளவிற்கு போயுள்ளது. அடுத்தடுத்து மேலும் சில படங்களிலும் நாயகனாக நடிக்க சந்தானம் ஒப்பந்தமாகிவிட்டார். இனி, அவர் எங்கே நகைச்சுவைப் பக்கம் திரும்பப் போகிறார்.


ஜுலை 1ம் தேதி அப்பா, ஜாக்சன் துரை, பைசா, ஒரு மெல்லிய கோடு ஆகிய படங்கள் வெளிவந்தன. அவற்றில் அப்பா, ஜாக்சன் துரை ஆகிய படங்கள் கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக சமுத்திரக்கனி இயக்கி நடித்த அப்பா படம் சிறந்த படமாகவும் அமைந்து, வியாபார ரீதியாக பலருக்கும் லாபத்தையும் சம்பாதித்துக் கொடுத்துள்ளது. ஜாக்சன் துரை படம் வழக்கமான பேய்ப் படமாக இல்லாமல் அமைந்ததால் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. அன்றைய தேதியில் வெளியான மற்ற இரண்டு படங்களும் வந்த சுவடு தெரியாமல் போய்விட்டன.


ஜுலை மாதத்தைப் பொறுத்தவரையில் 15 திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும் அப்பா, ஜாக்சன் துரை, தில்லுக்கு துட்டு, கபாலி ஆகிய நான்கு படங்கள் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முந்தைய மாதங்களில் ஓரிரு படங்கள் மட்டுமே வெற்றி பெற்று வந்த நிலையில் ஜுலை மாதம் நான்கு படங்கள் வெற்றிப் பட்டியலில் இணைந்தது ஆச்சரியம்தான். அதிலும் கபாலி படம் உலக அளவில் புதிய சாதனையைப் படைத்தது மிகப் பெரிய விஷயமாக அமைந்தது.


இந்த ஆண்டில் வெளிவரும் படங்களைப் பற்றி பிற்காலத்தில் பேசப்படும் போது இந்த ஜுலை மாதம் கண்டிப்பாகப் பேசப்படும் ஒரு மாதமாக இருக்கப் போகிறது. அதற்கு கபாலி மிக முக்கியக் காரணமாக அமைந்துவிட்டது.


ஜுலை மாதம் வெளியான படங்கள்


ஜுலை 1 : அப்பா, ஜாக்சன் துரை, பைசா, ஒரு மெல்லிய கோடு


ஜுலை 7 : தில்லுக்கு துட்டு, அட்ரா மச்சான் விசிலு


ஜுலை 8 : அர்த்தநாரி, கககபோ


ஜுலை 15 : கோடம்பாக்கத்தில் கோகிலா, ஒன்பதிலிருந்து பத்து வரை, கிழக்கு சந்து, சும்மாவே ஆடுவோம், மேக மூட்டம்


ஜுலை 22 : கபாலி


ஜுலை 29 : வெள்ளிக்கிழமை 13ம் தேதி


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in