'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாளத்தில் மம்முட்டியின் மகன் என்கிற அறிமுகத்தோடு துல்கர் சல்மான் ஹீரோவாக களம் இறங்கிய, 'செகண்ட் ஷோ' படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது.. இந்த நான்கு வருடங்களுக்குள் துல்கரின் வளர்ச்சி கிடுகிடுவென உயர்ந்து விட்டது. இதுநாள் வரை மலையாள திரையுலகில் அதிகமாக பின்தொடர்பவர்களை (பாலோயர்கள்) கொண்டிருந்த மோகன்லாலை (36 லட்சம் பேர்) ஓவர்டேக் செய்து நாற்பது லட்சம் பேருக்கு அதிகாமான பின்தொடர்பாளர்களை பெற்று முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் துல்கர் சல்மான்.
மலையாள சினிமாவின் தவிர்க்கமுடியாத இளம் முன்னணி நடிகராக மாறிவிட்ட துல்கர்சல்மானுக்கு இன்று பிறந்தநாள்.. இந்த இனிய நாளில் தனது பெயரில் புதிய வெப்சைட் ஒன்றை ஆரம்பித்துள்ளார் துல்கர்.. இனிமேல் துல்கர் பற்றிய விபரங்கள், அவர் நடித்துக்கொண்டு இருக்கும் படம் பற்றிய விபரங்களை இதன்மூலம் ரசிகர்கள் நேரடியாக அறிந்துகொள்ளலாம். தங்களது கருத்துக்களையும் அதில் பதிவிடலாம். அந்த வகையில் ஏற்கனவே மோகன்லால், பிருத்விராஜ், திலீப் ஆகியோருக்கு அடுத்ததாக வெப்சைட் தொடங்கியவர்கள் பட்டியலில் துல்கரும் இணைந்துவிட்டார்.