Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

பூமி அறிந்திரா... புது யுகத்தின் வீரா

22 ஜூலை, 2016 - 08:49 IST
எழுத்தின் அளவு:
a-new-record-by-kabali

சூப்பர் ஸ்டார் பட்டம் எப்படி


கலைப்புலி தாணு விநியோகஸ்தராக இருந்தபோது வெளிவந்தது பைரவி படம். அப்போது ரஜினி வளர்ந்து வரும் ஹீரோ. துணிச்சலுடன் அந்தப் படத்தை வாங்கி, முதன் முறையாக 30 அடி உயரத்தில் கட்அவுட் வைத்து அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்தவர் தாணு.


அதை ரஜினி வேண்டாம் என்று மறுத்தபோது “உங்களை எனக்கு பிடிச்சிருக்கு நான் அப்படித்தான் செய்வேன்” என்று உறுதியாக இருந்தார் தாணு. அன்று உரு


வானது இருவருக்கும் இடையே நட்பு. கே.பாலச்சந்தருக்கு பிறகு இவர் சாதிக்கப் பிறந்தவர் என்று ரஜினியை 200 சதவிகிதம் நம்பியது தாணு தான்.


1984ல் தாணு தனது நண்பர்களுடன் இணைந்து யார் என்ற படத்தை தயாரித்தார். அது ஒரு திகில் படம். அப்போது வருடத்துக்கு 8 படங்கள் வரை நடித்துக் கொண்டிருந்த ரஜினி தாணுவுக்காக அந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துக் கொடுத்து தன் நன்றி கடனை தீர்த்தார். யார் படத்தின் 100 வது நாள் விழாவில் கலந்து கொண்ட ரஜினி அடுத்து உங்களுக்கு ஒரு படம் நடிச்சுத் தர்றேன் கதை ரெடி பண்ணுங்க” என்று மேடையிலேயே அறிவித்தார்.இந்த நீண்ட நாள் கனவு தற்போது நனவாகியுள்ளது. ஒருநாள் ரஜினியிடமிருந்து போன் “மகள் சவுந்தர்யா ஒரு இயக்குனரை கண்டுபிடிச்சிருக்காங்க மெட்ராஸ் படம் பண்ணியிருக்கார்ல ரஞ்சித் அவர்தான்.


கதைய கேளுங்க... பண்ணலாம்”னு சொன்னார். அதற்கு தாணு நான் கதை கேட்கவில்லை உங்களுக்கு பிடிச்சிருந்தா போதும் என்று கூறிவிட்டார். எல்லா முன் ஏற்பாடுகளும் முடிந்து படப்பிடிப்பு துவங்கிய அன்று தான் ரஞ்சித்திடம் கபாலி கதையை கேட்டார் தாணு. அந்த அளவிற்கு ரஜினி மீது நம்பிக்கை வைத்திருந்தார்.


அமெரிக்கா செல்வதற்கு முன்பு ரஜினியும், தாணுவும் அமர்ந்து கபாலி படம் பார்த்தார்கள். படம் முடிந்ததும் ரஜினி,உங்களுக்கும் எனக்கும் எத்தனை வருட நட்பு? என, கேட்டார்.


அதற்கு தாணு 36 வருடம் இருக்கும் என்றார். இந்த நட்புக்கும் உங்க கம்பெனிக்கும் கபாலி ஒரு மகுடம்” என்று கூறிவிட்டு பிளைட் பிடித்து அமெரிக்கா பறந்தார் ரஜினி. தனக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்தவர் என்கிற ஒரே காரணத்துக்காக 36 ஆண்டுகள் நட்பு வளர்த்து, அந்த நன்றி கடனையும் தீர்த்திருக்கும் ரஜினி உண்மையிலேயே சூப்பர் ஸ்டார்தான்.


முள்ளும் மலரும் : இந்த படத்தில் ரஜினியின் கேரக்டர், அவரது முள்ளும் மலரும் திரைப்படத்தை போல இருக்கும் என இயக்குநர் ரஞ்சித் தெரிவித்தார்.


நோ பஞ்ச் : கபாலி படத்தில் ரஜினி, பஞ்ச் வசனம் பேசாமல் நடித்துள்ளார். அவரது ரசிகர்கள், தலைவர் (ரஜினி) இருந்தாலே போதும். பஞ்ச் வசனம் தேவையில்லை என மகிழ்ச்சி


தெரிவிக்கின்றனர்.


முதல் படப்பிடிப்பு : கபாலி படத்தின் முதல் படப்பிடிப்பு, சென்னையில் உள்ள ரஷ்யா அறிவியல் மற்றும் கலாசார மையத்தில் நடந்தது.


மெட்ராஸ் டீம் : இயக்குநர் ரஞ்சித், தனது மெட்ராஸ் திரைப்பட டீமை, இந்தப் படத்திலும் களமிறக்கியிருக்கிறார். கலையரசன், ரித்விகா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.


ஒன்றரை நிமிடம் : கபாலி படத்தில் ரஜினி அறிமுகமாகும் காட்சி, ஒன்றரை நிமிட ஸ்லோ மோஷன் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களின் ஆவலை எகிறச்செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாம்.


கிளைமாக்ஸ் எப்படி : கபாலி படத்தின் கிளைமாக்ஸ், சோகமான வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ரசிகர்களுக்காக கிளைமாக்சை சிறிதளவு சந்தோஷமானதாக மாற்றுமாறு தயாரிப்பாளர் தாணுவும், ரஜினி மகள் சவுந்தர்யாவும் இயக்குநர் ரஞ்சித்திடம் கேட்டனர். ஆனால் ரஜினி, கிளைமாக்சை மாற்ற வேண்டாம் என தெரிவித்துவிட்டாராம்.


நோ டூப் : டீசரில் காண்பிக்கப்படும், ரஜினி கார் ஓட்டும் காட்சி, எவ்வித டூப் போடாமல், ரஜினியே ஓட்டினாராம். இவரது கார் ஓட்டும் திறமையை கண்டு படக்குழுவே அசந்து போனார்களாம்.


நிஜ சிறையில் : மலேசியாவின் மலாக்காவில் உள்ள சிறையில், உண்மையான கைதிகளுடன் சிறப்பு அனுமதி வாங்கி படப்பிடிப்பு நடந்துள்ளது. ரஜினியை பார்த்த கைதிகள் ஆச்சர்யத்தில் உறைந்து போனார்களாம்.


தீபாவளி : படப்பிடிப்பு தளத்தில் ரஜினி அதிகமாக கேரவனில் இருந்தது இல்லை. படக்குழுவினருடன் தரையில் உட் கார்ந்து அவர் களுடன் நன்றாக சிரித்து பேசி மகிழ் வாராம். கடந்த தீபாவளி அன்று கூட படப் பிடிப்பில் கலந்து கொண்டு நடித்திருக் கிறார் ரஜினி.


மகிழ்ச்சி... : ரஷ்ய துாதரகம், சென்னை விமான நிலையம், பின்னி மில், மோகன் ஸ்டுடியோ போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. மோகன் ஸ்டுடியோவில் தாய்லாந்தில் இருப்பது போன்ற செட் அமைக்க, சுமார் 125 கார்பென்ட்டர், 45 நாட்கள் வேலை பார்த்துள்ளனர். மாண்டேஜ் சாங், ரஜினி வீடு, சண்டைக்காட்சி, குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல காட்சிகள் அங்கு தான் படமாக்கப்பட்டது.


முட்டுக்காட்டில் ரோபோ ஹவுஸில் 11 நாள் சண்டைக்காட்சி, செட்டிநாடு மருத்துவமனையில் 1 நாள் ஷூட்டிங், இவிபி தீம் பார்க்கில் 5 நாள் ஷூட்டிங் நடந்துள்ளது. கோவாவிலிருந்து சுமார் 1,500 வெளிநாட்டுக்காரர்களை வரவழைத்து பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. சதீஷ் நடனம் அமைத்துள்ளார். 14 துணை இயக்குநர்கள், 6 கேமரா உதவியாளர்கள், 8 உதவி ஆர்ட் டைரக்டர்கள் என அதிக உதவியாளர்கள் மகிழ்ச்சியுடன் வேலை பார்த்துள்ளனர்.


அமைதியாய் ஆசிரமத்தில்: உலகமே கபாலியை வரவேற்க ஆரவாரத்துடன் குதூகலித்துக் கொண்டிருக்கும்போது, ரஜினி வெளியுலக தொடர்புகள் எதுவுமின்றி ஆசிரமத்தில் அமைதியை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.


அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியா மாகாணத்தில் சுவாமி சச்சிதானந்தாவால் தொடங்கப்பட்ட லோட்டஸ் ஆசிரமம் உள்ளது. 600 ஏக்கரில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த ஆசிரமத்தில் உலக பெரும் கோடீஸ்வரர்கள், சாதாரண மக்களை போன்று தரையில் படுத்து, எளிய உணவு உண்டு, தியானத்தில் ஈடுபட்டு அமைதியாக ஓய்வெடுக்கிறார்கள். அவர்கள் உள்ளே செல்வதிலிருந்து வெளியில் வரும்வரை அலைபேசி உள்ளிட்ட எந்த தகவல் தொடர்பு சாதனைகளுக்கும் அனுமதி இல்லை. உலகில் ரஜினிக்கு பிடித்த இடங்களில் இதுவும் ஒன்று.


பாபா படத்தின்போது தான் சச்சிதானந்த சுவாமிகள் ரஜினிக்கு அறிமுகம். முதல் முறையாக பாபா படம் தோல்வி அடைந்தபோது அங்கு சென்ற ரஜினி. பின்பு நேரம் கிடைக்கும் போதெல்லாம் செல்ல ஆரம்பித்தார். தற்போது உயர் மருத்துவ சிகிச்சைக்கு அவர் அமெரிக்காவை தேர்ந்தெடுத்ததற்கு காரணமும் லோட்டஸ் ஆசிரமம் தான். மருத்துமவனையில் சிகிச்சை எடுத்துவிட்டு ஆசிரமத்தில் தங்குவதுதான் திட்டம். அதன்படிதான் எல்லாம் நடக்க அமைதியாய் பொழுதை கழித்தார் ரஜினி.


விமானம் டூ நாணயம் : சாதாரணமாக சினிமா பட போஸ்டரை டூவீலர்ல ஒட்டி பாத்துருப்ப.. ஆட்டோல ஒட்டி பார்த்துருப்ப.. கார்ல ஒட்டி பார்த்துருப்ப.. ஏன் பஸ்ல கூட ஒட்டி பார்த்துருப்ப.. பிளைட்ல ஒட்டி பார்த்திருக்கயா... கபாலி நெருப்புடா என்று சில ரஜினி ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். இதற்கு ஏர் ஏசியா நிறுவனம், தங்களது விமானத்தில் கபாலி படத்தின் ஸ்டிக்கர்களை ஒட்டியதே காரணம். தவிர, கபாலி சிறப்பு விமானங்களையும் இயக்குகிறது.


பிரபல நிதி நிறுவனமான முத்துாட் பைனான்ஸ் நிறுவனமும் கபாலியை முன்னிறுத்தி விளம்பரம் செய்து வருகிறது. அந்த நிறுவனத்தின் சார்பில் கபாலி வெள்ளி நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நாணயம் 5 கிராம், 10 கிராம், 20 கிராம் என மூன்று விதங்களில் கிடைக்கும். இதன் விலை முறையே ரூ.350, ரூ.750 மற்றும் ரூ.1400. இதில் ரஜினியின் உருவமான கபாலி படம் அச்சிடப்பட்டிருக்கும்.


* ஏர்டெல் நிறுவனமும், கபாலியை முன்னிறுத்தி விளம்பரம் செய்ய ஆரம்பித்திருக்கிறது. கபாலி மற்றும் ரஜினி ரசிகர்களை கவரும் விதமாக கபாலி பேக்கேஜ் என்ற ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.


* மலேசிய அரசு, கபாலி படத்தை அங்கீகரிக்கும் விதமாக ஸ்டாம்ப் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.


* இதுவரை சினிமா சரித்திரத்தில் இல்லாத அளவிற்கு பல தனியார் நிறுவனங்கள் இன்று விடுமுறை நாளாக அறிவித்துள்ளன. சென்னை மட்டுமல்லாது பெங்களூரு, கோவையிலும் சில ஐ.டி நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளன. கபாலிக்கு விடப்படும் விடுமுறையை சனிக்கிழமை பணிக்கு வந்து சரி செய்து கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளன.


வசூல் ராஜா : சென்னையில் உள்ள சில மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ப்ரீ-புக்கிங் எனப்படும் முன்பதிவு ஆரம்பமான அரை மணி நேரத்திலேயே ஐந்து நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. குறிப்பாக மால் தியேட்டர்களில் படம் பார்க்க ஐ.டி., துறையில் இருக்கும் ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக புக்கிங் செய்துள்ளனர். ஒரு சில டிக்கெட்டுகள் மட்டுமே ஒவ்வொரு தியேட்டர்களிலும் உள்ளன. ஆறாம் நாளிலும், ஏழாம் நாளிலும் மாலை, இரவுக் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன.


முன்பதிவிலேயே கபாலி படம் 30 கோடிக்கும் மேல் வசூல் செய்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தமிழ்நாட்டிற்கு மட்டுமேயானது. வெளிநாடுகளில் பிரிமீயர் காட்சிகளுக்கான முன்பதிவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படம் வெளியான ஒரு சில நாட்களிலேயே கபாலி வசூல் 100 கோடியைப் பிடிக்கும்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in