Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

தலைவா... நெருப்புடா...கபாலிடா...

22 ஜூலை, 2016 - 08:00 IST
எழுத்தின் அளவு:
thalaiva.....-naerupu-da...

தினமலர் இணையத்தில் ஸ்பெஷல்

தினமலர் இணையதளத்தில் www.cinema.dinamalar.com/kabali/index.php கபாலி ஸ்பெஷல் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, சென்னை தினமலர் அலுவலகத்திற்கு நேரில் வந்து துவக்கி வைத்தார். இதில், கபாலி சம்பந்தப்பட்ட லேட்டஸ்ட் செய்திகள், பாடல்கள், டீசர், பிரத்யேக பேட்டி, போட்டோ உள்ளிட்ட அத்தனை விஷயங்களும் இடம்பெற்றுள்ளன.கபாலி...இந்த மந்திரச் சொல் தான் இப்போ உலகையே ஆட்டிப் படைக்கிறது. நெருப்புடா..நெருங்குடா என்ற டீசரே ச்சும்மா அதிருதுல்ல ஸ்டைலில் அட்டகாசமாக இருந்தது. இன்று மெயின் படம் ரீலிஸ் என்பதால் ரஜினி ரசிகர்கள் பூரிப்பின் உச்சத்தில் உள்ளனர்.


ரஜினி நடிப்பில் மிக பிரம்மாண்டமாய் உருவாகியுள்ள படம் தான் கபாலி. பாட்ஷா படத்திற்கு பிறகு மீண்டுமொரு கேங்ஸ்டர் கதையில் நடித்திருக்கிறார் ரஜினி. இதன் கதையை மலேசிய தமிழர்களை மையமாக வைத்து இயக்கியிருக்கிறார் பா.ரஞ்சித். படத்தின் அனேக காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட்டன.மலேசிய டானாக, அங்கு வாழும் தமிழர்களுக்கு எதிரான கொடுமையான செயல்களை எதிர்த்து போராடுபவராக நடித்திருக்கிறார் ரஜினி.


ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தினேஷ், கலையரசன்,தன்ஷிகா, கிஷோர், நாசர், மைம் கோபி உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்திருக்கிறனர்.ரஜினி முழுக்க, முழுக்க இளம் கலைஞர்களுடன் பணியாற்றி இருப்பதால், படத்தின் ஒவ்வொரு காட்சியும் இளமை துள்ளலுடன் இருக்கும்.இப்படத்தை வரவேற்க அவரது ரசிகர்கள் தயாராக உள்ளனர். தியேட்டர்களை அலங்கரித்தல், தோரணம் கட்டுதல், உயரமான கட்-அவுட் அமைத்தல் என்று களத்தில் இறங்கி கலக்குகின்றனர். ரசிகர் மன்றங்கள் மூலம் சிறப்பு காட்சி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு இனிப்பு, பரிசு பொருட்கள் வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளனர்.


சாதனைகள் : கடந்த ஆண்டில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற பாகுபலி படத்தின் சாதனைகளை கபாலி திரைப்படம் முறியடித்துள்ளது.யூடியூபில் பதிவேற்றப்பட்ட பாகுபலி படத்தின் டிரைலரை ஒரு கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். ஆனால் கபாலி படத்தின் டீசரை 2.5 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.


* ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம், உலகம் முழுவதும் 4000க்கும் அதிகமான திரையரங்குகளில் 2015 ஜூலை 10ல் திரைக்கு வந்தது. கபாலி திரைப்படம் உலகம் முழுவதும் 5000க்கும் அதிகமான திரையரங்குகளில் திரைக்கு வந்துள்ளது.


* பாகுபலி திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி, என பல மொழிகளில் வெளிவந்தது. ஆனால் கபாலி திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், மலாய் போன்ற மொழிகளில் வெளிவரவுள்ளது. மேலும் சைனீஸ், தாய், ஜப்பான், இந்தோனேசிய மொழிகளிலும் கபாலி டப்பிங் செய்யப்பட்டுள்ளது.


* பாகுபலி படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் ரூ. 162 கோடியை எட்டியதாக கூறப்பட்டது. கபாலி படத்தின் வினியோக உரிமைகளின் விற்பனை ரூ.200 கோடியைக் கடந்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.


* பாகுபலி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் தொலைக்காட்சி, வானொலி, சமூக வலைதளங்கள் வாயிலாக நடந்தது. படக்குழுவினர் சென்னை, ஐதராபாத், பெங்களூர், மும்பை, கேரளா என சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களிடம் பாகுபலி படத்தினைக் கொண்டு சேர்த்தனர். இந்தியாவில் முதன் முறையாக விமானத்தில் போஸ்டர் ஒட்டி பிரபலப்படுத்தப்பட்டது கபாலி படத்திற்காக தான். இந்த படத்தின் முதல் காட்சிக்காக பெங்களூருவிலிருந்து, சென்னைக்கு சிறப்பு விமானங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.


* உலக அளவில் புகழ் பெற்ற பிரான்ஸ் நாட்டில் உள்ள ரெக்ஸ் சினிமாஸ் திரையரங்கில் கபாலி படம் திரையிடப்பட உள்ளது. இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு திரைப்படம் அந்தத் திரையரங்கில் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை. 2000-க்கும் மேற்பட்ட இருக்கைகள் கொண்ட அந்தத் திரையரங்கில் படம் வெளியாவதும், பார்ப்பதும் தமிழ் ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும்.


2 : இயக்குனர் ரஞ்சித், ரஜினி மகள் சவுந்தர்யாவிடம் 2 கதைகளை தெரிவித்தாராம். ஒன்று தாதா கதை. மற்றொன்றுஅறிவியல் சம்பந்தமான கதை. இதில் தாதா கதையை ரஜினி தேர்வு செய்தார். அதுதான் தற்போதைய கபாலி.


3 : இந்த படம் முதலில் 3 மணி நேரமாக இருந்தது.பின் எடிட் செய்யப்பட்டு, இறுதியில் 2.30 மணி நேர படமாக குறைக்கப்பட்டது.


100 : படத்தின் பட்ஜெட் 100 கோடி ரூபாய். முதல் 3 நாட்களில்200 கோடி ரூபாய் வசூலாகும் என படக்குழுவினர் எதிர்பார்த்துள்ளனர்.


106 : ரஜினி, கபாலி படத்திற்காக 106 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்தார்.


1995 : 1975 ஆக., 18ல் வெளியான அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். 1995ல் ரஜினி நடிப்பில் வெளியான பாட்ஷா திரைப்படத்தில் தாதா வேடத்தில் நடித்திருந்தார். தற்போது 21 ஆண்டுகளுக்கு பின், கபாலி படத்தில் அதே போல தாதா வேடத்தில் நடித்துள்ளார்.


பயந்தார் தன்ஷிகா : ராதிகா ஆப்தே தோட்டக்கலையில் வேலை செய்யும் நடுத்தர வயது பெண்ணாக நடித்துள்ளார். இந்த ரோலுக்காக மேக்கப் இல்லாமல் நடித்திருக்கிறார். எந்த காட்சி சொன்னாலும் அதை உள்வாங்கி அப்படியே நடித்தாராம் ராதிகா தைரியமான நடிகை என்று படக்குழுவே பாராட்டியுள்ளது.


* வித்தியாசமான ஹேர்கட், டாட்டூ வரைய மிகவும் பயந்தார் தன்ஷிகா. பின் இன்வால்மென்ட் ஆகி நடித்தாராம். தினமும் டாட்டூ வரைந்து நடித்திருக்கிறார். படத்தில் அவருடைய ரோல் போராட்டமானதாக இருக்கும்.


* கபாலி படத்தில் வில்லனாக வின்சென்ட் சோ நடித்திருக்கிறார். ஆசியாவில் பெரிய நடிகரான இவரது சீன லுக்கிற்காக இவரை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்துள்ளார் இயக்குனர்.


ரசிகராக மாறிய ஜாக்கிசான் : கபாலி தாக்கம் ஜாக்கிசானையும் விட்டு வைக்கவில்லை. கபாலி படத்தின் போஸ்டர் அடங்கிய டீ-ஷர்ட்டுடன் ஜாக்கிசான் நிற்பது போன்ற ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் ஜாக்கிசான் தான் அணிந்திருக்கும் டீ-ஷர்ட்டில் உள்ள கபாலி படத்தின் போஸ்டரை கைநீட்டி காட்டுவது போல் உள்ளது.


கண்கலங்கிய ரஜினி : தமிழகத்திலிருந்து மலேசியாவிற்கு சென்ற அடித்தட்டு மக்கள், வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகள், சந்தோஷம், அவர்களின் உரிமை உள்ளிட்ட விஷயங்களை கபாலி படம் பிரதிபலிக்கும்.


மலேசியாவில் கபாலி படப்பிடிப்பை பார்க்க வந்த மக்கள், ரஜினியை பார்த்துவிட்டு என்ன செய்வதென்று தெரியாமல் அழுதார்களாம். அவர்களின் அன்பை பார்த்துவிட்டு ரஜினியும் அழுதாராம். ரசிகர்களை தடுக்காதீர்கள் என்று பாதுகாவலர்களிடம் கூறிவிட்டு அவர்களுடன் கை கொடுத்து மகிழ்ந்திருக்கிறார் ரஜினி. கார் ஸ்டைல் கபாலியில் ரஜினி, பென்ஸ் 1992 ரக காரை பயன்படுத்தியிருக்கிறார். ரஜினி இந்த காரிலிருந்து இறங்கும் காட்சியில் அவ்வளவு அருமையாக ஒரு ராயல் லுக் இருக்குமாம். இதன் மூலம் ஸ்டைல் மன்னன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளாராம்.


இரவில் ஷூட்டிங் : இரவு நேர ஷூட்டிங்கை தர்மதுரை படத்துடனேயே நிறுத்தி விட்டாராம் ரஜினி. அதன்பிறகு கபாலி படத்திற்காக இரவு முழுவதும் கண் விழித்திருந்து நடித்துக் கொடுத்திருக்கிறார். ரஜினி நடிக்கும் படங்களுக்கு டப்பிங் பேசும் போது அந்தந்தப் பட இயக்குனர்களை அவர் அனுமதித்ததில்லையாம். இருந்தாலும் தளபதி படத்தின் போது மணிரத்னம் சண்டை போட்டு ரஜினி டப்பிங் பேசும் போது உடனிருந்திருக்கிறார். அவருக்கு பிறகு ரஞ்சித் தான் ரஜினி டப்பிங் பேசும்போது உடன் இருந்திருக்கிறார். மேலும் நான்கு நாட்களில் டப்பிங்கை முடிக்க வேண்டிய ரஜினி, படத்திற்கு அதிக ஆர்வத்தோடு ஒருவாரம் வரை டப்பிங் பேசினாராம்.


மலாய் மொழியில் : தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக கபாலி திரைப்படம் மலாய் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. பல வருடங்களாக மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளில் தமிழ்ப் படங்கள் வெளியாகி வருகின்றன. அந்தக் காலத்தில் எப்எம்எஸ் என்று சொன்னாலே அது பாரீன், மலேசியா, சிங்கப்பூர் என்பதைத்தான் குறிக்கும். மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் தமிழர்கள் அதிகம் வசிப்பதால் அங்கு தமிழ்த் திரைப்படங்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும்.தற்போது ரஜினி நடித்துள்ள கபாலி படம் மலாய் மொழியில் வெளியாவதால் அதற்கான வரவேற்பு இன்னும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கபாலி படத்தின் பாடல்களை மலாய் மொழியிலும் வெளியிட்டுள்ளார்கள்.


தோட்டத்தில்... : கபாலி படத்தின் படப்பிடிப்பு மலாக்காவில் உள்ள கேரி ஐ லேண்ட் என்ற தேயிலை தோட்டத்தில் நடந்தது.மலாக்காவில் உள்ள அரசாங்க அலுவலகத்தில் ரஜினிக்காக சிறப்பு அனுமதி வாங்கி படப்பிடிப்பு நடந்தது.மலாக்காவில் உள்ள 7 ஸ்டார் ஓட்டலில் ரகசியமாக தங்கியிருந்தார் ரஜினி. அவர் தங்குவதற்கு முன்பாக அந்த ஓட்டலில் 70 அறைகள் தான் புக்காகியிருந்தது. ஆனால் ரஜினி தங்கியிருக்கிறார் என்று தெரிந்ததும்ஓட்டலில் இருந்த அத்தனை அறைகளும் புக்காகிவிட்டதாம்.


கபாலி ரன் : ரஜினி ரசிகர்கள் பெரும் எண்ணிக்கையில் மலேசியாவில் உள்ள காரணத்தினால், அவர்களை உற்சாகப்படுத்த மாலிக் ஸ்ட்ரீம்கள் புரொடக்சன்ஸ், கபாலி ரன் என்ற ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சி ஜூலை 31ல் நடைபெற உள்ளது. வேடிக்கை ரன்- ஆக நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் 5 கிலோமீட்டர் துாரம் ஓட வேண்டும்.


நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 5 கிலோ மீட்டர் துாரத்தை முழுமையாக கடக்கும் முதல் ஐந்து பேருக்கு ரொக்க பணம் சிறப்பு பரிசாக வழங்கப்பட இருக்கிறது. இதுதவிர இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் அனைவருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் பொறிக்கப்பட்ட பதக்கம், கபாலி சிறப்பு பனியன்கள், பேக் உள்ளிட்ட பல பரிசுகள் வழங்கப்படவுள்ளன.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in