ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சூப்பர்ஸ்டார் ரஜினியின் 'கபாலி' படம் இதற்கு முன் வெளியான அஜித், விஜய் படங்களின் டீசர் ரெக்கார்டுகளை முறியடித்ததோடு, இந்திய அளவிலும் அந்த சாதனையை தக்க வைத்துக் கொண்டது. அதேபோல மலையாளத்தில் மெகாஸ்டார் மம்முட்டியின் நடிப்பில் உருவாகியுள்ள 'கசாபா' படத்தின் டீசரும் இதுவரையிலான துல்கர் சல்மான் மற்றும் மோகன்லாலின் 'புலி முருகன்' படங்களின் டீசர் ரெக்கார்டுகளை தகர்ர்த்தெரிந்து முதலிடத்தை பிடித்துள்ளது..
மிகுந்த எதிர்பார்ப்புக்கு ஆளாகியுள்ள மோகன்லாலின் புலி முருகன்' பட டீசர் வெளியாகி சுமார் நாற்பது நாட்களில் 10 லட்சத்து 60 ஆயிரத்து முறை யூடியூப்பில் பார்க்கப்பட்டுள்ளது. ஆனால் நான்கு நாட்களுக்கு முன் வெளியான மம்முட்டி நடித்துள்ள 'கசாபா' படத்தின் டீசர் பார்வையாளர்களின் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டிவிட்டது. ஐந்து வருடங்களுக்குப்பிறகு இந்தப்படத்தில் மீண்டும் காக்கி யூனிபார்ம் அணிந்துள்ளார். இருந்தாலும் அவரது வழக்கமான போலீஸ் படங்கள் போல இந்தப்படம் இருக்காது என உறுதியாக சொல்லப்படுவதுதான் டீசரின் சாதனைக்கும் காரணம் என சொல்லப்படுகிறது.