ஜூன் ரிலீஸில் எத்தனை வெற்றி படங்கள் : ஓர் பார்வை - How films success in June ?
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

ஜூன் ரிலீஸில் எத்தனை வெற்றி படங்கள் : ஓர் பார்வை

01 ஜூலை,2016 - 12:56 IST
எழுத்தின் அளவு:

2016ம் ஆண்டின் அரையாண்டு நேற்றுடன் முடிவடைந்தது. இந்த அரையாண்டில் மொத்தம் 104 படங்கள் வெளிவந்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே வாரத்திற்கு சுமார் 4 படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.


பெரிய படங்களுடன் சிறிய படங்கள் மோதுவதும், சிறிய படங்களை சரியான முறையில் ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்காததும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. பல கோடி ரூபாய் போட்டு படம் எடுப்பவர்கள், பட வெளியீட்டிற்குப் பிறகு அதை மக்களிடம் எப்படி கொண்டு போய் சேர்ப்பது என்பதை சரியான முறையில் செய்யாமல் கிடைக்க வேண்டிய வெற்றியைக் கூட அவர்களாகவே கெடுத்துக் கொள்கிறார்கள். இதற்கு சம்பந்தப்பட்ட சங்கங்கள்தான் ஒரு வழிமுறையைக் கண்டுபிடிக்க வேண்டும். இல்லையென்றால் சில நல்ல படங்கள் கூட மக்களின் பார்வையில் படாமலே கூடப் போய்விடும்.


ஜுன் மாதத்தில் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் என எதுவுமே வரவில்லை. வெளிவந்த படங்கள் அனைத்துமே நட்சத்திர அந்தஸ்து இல்லாமல் வெளிவந்த படங்கள்தான். அப்படியே ஓரளவிற்கு நட்சத்திர அந்தஸ்துடன் வந்த 'இறைவி' படத்தில் கதாபாத்திரங்களைக் கையாண்ட விதத்திலும் கதையைக் கொடுத்த விதத்திலும் மக்களை ஈர்க்காமலே போய்விட்டார்கள். ஒரு தொலைக்காட்சித் தொடராக வர வேண்டிய ஒரு கதையை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் படமாகக் கொடுத்து அவரையும் கெடுத்து, தயாரிப்பாளரையும் கெடுத்து, விஜய் சேதுபதியின் மார்க்கெட்டையும் கெடுத்துவிட்டார். 'இறைவி'யால் பயனடைந்த ஒரே ஒருவர் எஸ்.ஜே.சூர்யா மட்டுமே. அவராலும் நடிக்க முடியும் என்பதை அந்தப் படத்தின் மூலம் நிரூபித்துவிட்டார்.


'இறைவி'யுடன் போட்டி போட்டு வந்தாலும் வியாபார ரீதியாக அந்தப் படம் புரியாத சாதனையை 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படம் புரிந்தது. இந்தப் படத்திற்குக் கிடைத்த வெற்றி விஷ்ணு விஷாலுக்கும் தமிழ்த் திரையுலகத்தில் ஒரு மார்க்கெட்டை உருவாக்கிக் கொடுத்துள்ளது. மேலே சொன்ன இரண்டு படங்களுடன் ஜுன் 3ம் தேதி வெளிவந்த மற்ற படங்களான 'அரி, கள்ளத் தோணி' படங்கள் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை.


ஜுன் 10ம் தேதி 'ஒரு நாள் கூத்து, பாண்டியோட கலாட்டா தாங்கல, வித்தையடி நானுக்கு' ஆகிய படங்கள் வெளிவந்தன. அந்த மூன்று படங்களில் 'ஒரு நாள் கூத்து' படம் மட்டுமே ஓரளவிற்கு ஓடியது. இருந்தாலும் படத்தின் கதாநாயகன் 'அட்டகத்தி' தினேஷுக்கு மட்டுமே சுமார் 1 கோடிக்கு மேல் சம்பளம் கொடுத்ததால் அந்தப் படம் தயாரிப்பாளருக்கு லாபம் தராமல் போய்விட்டது.


ஜுன் 17ம் தேதி “அங்காளி பங்காளி, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, உன்னைப் பார்த்த நாள், முத்தின கத்திரிக்கா” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'முத்தின கத்திரிக்கா' படம் மட்டுமே லாபத்தைக் கொடுத்துள்ளதாக வினியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படம் மூலம் தொடர் வெற்றியைப் பெற நினைத்த ஜி.வி.பிரகாஷுக்கு அந்தப் படம் சரியான பின்னடைவைக் கொடுத்தது. இருந்தாலும் தன்னுடைய மார்க்கெட்டைக் காப்பாற்றிக் கொள்ள அவர் 'நலன் விரும்பிகள்' டிவிட்டரில் படம் வெற்றி, வெற்றி என்று கூவிக் கொண்டிருக்கிறார்கள். மற்ற படங்கள் வழக்கம் போல பட எண்ணிக்கையை மட்டுமே கூட்டின.


ஜுன் 24ம் தேதி 'ராஜா மந்திரி, மெட்ரோ, அம்மா கணக்கு' ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'அம்மா கணக்கு' சிறந்த கதையம்சம் கொண்ட படமாகவும், 'மெட்ரோ' படம் மோசமான கதையம்சம் கொண்ட படமாகவும் இருந்தது. 'அம்மா கணக்கு' மாதிரியான படங்கள்தான் தமிழ்த் திரையுலகத்தை வளர்க்க உதவும். 'மெட்ரோ' மாதிரியான தவறான கதையம்சம் கொண்ட படங்கள் இளைஞர்களைக் கெடுக்கும் படங்கள்தான். ஆனால், இந்தப் படம் நல்ல வசூலைக் கொடுத்ததாக படக்குழுவினர் 'சக்ஸஸ் மீட்' வைத்து கொண்டாடிவிட்டார்கள். 'ராஜா மந்திரி' படம் 80களில் வந்த 'ஆண் பாவம்' படத்தையே மீண்டும் கொடுத்த படமாக இருந்தது.


ஜுன் மாதம் வெளிவந்த 14 படங்களில் உண்மையிலேயே வெற்றி என்று சொன்னால் அது 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படம் மட்டுமே. மற்றபடி ஒருநாள் கூத்து, முத்தின கத்திரிக்கா, அம்மா கணக்கு படங்களை ஓரளவுக்கு வெற்றி பெற்ற படங்கள் என்று கூறலாம். 100 படங்களைக் கடக்கக் காரணமாக இருந்த ஜுன் மாதம் 2016ல் குறைவான படங்கள் வெளிவந்த மாதமாக அமைந்து குறைந்த வெற்றியைக் கொடுத்த மாதமாகவும் அமைந்தது.


ஜுன் மாதம் வெளியான திரைப்படங்கள்


ஜுன் 3


அரி


இறைவி


கள்ளத் தோணி


வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்


ஜுன் 10


ஒரு நாள் கூத்து


பாண்டியோட கலாட்டா தாங்கல


வித்தையடி நானுக்கு


ஜுன் 17


அங்காளி பங்காளி


எனக்கு இன்னொரு பேர் இருக்கு


முத்தின கத்திரிக்கா


உன்னைப் பார்த்த நாள்


ஜுன் 24


அம்மா கணக்கு


மெட்ரோ


ராஜா மந்திரி


Advertisement
ரஜினி போல் ஒருவரும் இல்லை - ராதிகா ஆப்தே புகழாரம்ரஜினி போல் ஒருவரும் இல்லை - ராதிகா ... 2016 அரையாண்டு தமிழ் சினிமா : அசத்தலா? அச்சமா? 2016 அரையாண்டு தமிழ் சினிமா : அசத்தலா? ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Pattinapakkam
    Tamil New Film s 3
    • சி-3
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அனுஷ்கா ,ஸ்ருதி ஹாசன்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Muthuraamalingam
    Tamil New Film enkitta mothathey

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2016 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in