இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் சுக்ரன் படத்தில் இசையமைப்பாளரான அறிமுகமானவர் ஆண்டனி. அந்த படத்தில் இருந்து அவரது பெயரை விஜய் ஆண்டனி என்று மாற்றினார் விஜய்யின் தந்தை. அதன்பிறகு அவர் இசை யமைத்த சசியின் டிஷ்யூம் அவருக்கு ஹிட்டாக அமைந்தது. பின்னர் நகுலின் காதலில் விழுந்தேன் படத்தில் இடம்பெற்ற நாக்குமுக்க பாடல் விஜய் ஆண்டனியை பட்டிதொட்டி வரை கொண்டு சென்றது. ஆக, குறுகிய காலத்தில் பேசப்படும் இசையமைப்பாளரானார்.
ஆனபோதும், நடிப்பு ஆசை காரணமாக நான் படத்தில் அரிதாரம் பூசிய விஜய் ஆண்டனிக்கு முதல் படமே நம்பிக்கையை கொடுத்ததால் அடுத்தடுத்து சி ல படங்களில் நடித்த அவரை பிச்சைக்காரன் படம் ரொம்ப உசரத்துக்கு கொண்டு சென்று விட்டது. தமிழில் ஹிட்டான அப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய சிலர் முன்வந்தபோது அதற்கு உடன்படாமல், டப் செய்து வெளியிட்டனர். அந்த வகையில், பிச்சைக்காரன் தெலுங்கு டப்பிங் உரிமை 50 லட்சம்தானாம். ஆனால் இப்போது மூன்றாவது வாரமாக அங்கு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறதாம். அந்த வகையில், இப்போது 15 கோடி வசூலை நெருங்கிக்கொண்டி ருக்கிறதாம் பிச்சைக்காரன். இதனால் தனது அடுத்த படமான சைத்தான் படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை பெரிய தொகைக்கு விற்பனை செய்யும் முடிவில் இருக்கிறார் விஜய் ஆண்டனி.