விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
பாகுபலி படத்தின் வெற்றிக்கு பின்னர் டோலிவுட்டின் ரிபெல் ஸ்டார் பிரபாஸ் அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் பிசியாகியுள்ளார். இயக்குனர் ராஜமௌலி இயக்கும் பாகுபலி: தி கன்குலூசன் படத்தின் போர்காட்சிகளில் பிரபாஸ் தற்போது நடிக்கின்றார். இப்படத்திற்கு பின்னர் இயக்குனர் சுஜீத் இயக்கும் படத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ளார். இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகவுள்ளது. பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பின்னர் பல மொழி ரசிகர்களும் அறியப்படும் நடிகராகி விட்டார். இதனால் மூன்று மொழிகளில் பிரபாஸின் அடுத்த படத்தை வெளியிட இயக்குனர் திட்டமிட்டுள்ளாராம். இப்படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகளில் இயக்குனர் சுஜீத் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார். யுவி கிரியேசன்ஸ் இப்படத்தை தயாரிக்கவுள்ளது.