தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள நடிகர்களின் ஸ்பெஷாலிட்டிகளில் ஒன்று என்னவென்றால், தங்களுக்கு ஜோடியாக் நடிக்க இந்த நடிகையைத்தான் ஒப்பந்தம் செய்யவேண்டும் என அடம்பிடிக்க மாட்டார்கள்.. அவை அனைத்துமே இயக்குனர்களின் சாய்ஸ் தான்.. எப்போதாவது ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கும்.. அப்படி இருக்கும்போது நல்லபிள்ளை என பெயர் வாங்கிய துல்கர் சல்மான் மட்டும் கதாநாயகி விஷயத்தில் அடம்பிடிப்பாரா என்ன..? சமீபத்தில் வெளியான 'கம்மட்டி பாடம்' படத்தில் ஹீரோயினாக நடித்த ஷான் ரோமியை பார்த்தவர்கள் இந்த பொண்ண கதாநாயகி என கேட்கும் அளவுக்கு ரொம்பவே சுமாராகத்தான் இருந்தார்.. காரணம் கதை அப்படிப்பட்டது..
அந்தவகையில் தான் அமல் நீரத் டைரக்சனில் துல்கர் சல்மான் நடித்துவரும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க அணு இம்மானுவேல் என்கிற நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவர் வேறு யாருமல்ல, ஆக்சன் ஹீரோ பிஜூ'வில் நிவின்பாலியின் ஜோடியாக நடித்தவர் தான். ஆனால் துல்கரின் படத்தில் முதல் ஷெட்யூலில் நடித்த அணு இம்மானுவேல், அந்த கேரக்டருக்கு செட்டாகவில்லை என தூக்கிவிட்டு, கார்த்திகா என்கிற புதிய கதாநாயகியை தற்போது துல்கருக்கு ஜோடியாக்கி முதல்கட்ட படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார்களாம். இந்த அனு இம்மானுவேலை துல்கருக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டபோதே ரசிகர்கள் எதிர்ப்புக்குரல் எழுப்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.