மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மலையாள பிளாக்பஸ்டர் படமான பிரேமம் படத்தை தெலுங்கில் மஜ்னு என்ற பெயரில் ரீமேக் செய்து வருகின்றனர். நாகசைதன்யா நடிப்பில் இயக்குனர் சண்டு மொண்டேடி இயக்கி வரும் மஜ்னு படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றார். மேலும் மடோனா செபஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன், ஸ்ருதிஹாசன் என மூன்று நாயகிகள் இப்படத்தின் நடிக்கின்றனர். இறுதி கட்டத்தை எட்டிய இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இப்படத்தின் அறிமுக காட்சிகளுக்கு பிரபல நடிகரும் நாகசைதன்யாவின் தந்தையுமான நாகார்ஜுனா பின்னணி பேசவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஜூலை மாதத்தில் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது