Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

3 மாதத்தில் 50 படங்கள் ரிலீஸ், எத்தனை வெற்றி.? ஓர் பார்வை...!

26 மார், 2016 - 16:52 IST
எழுத்தின் அளவு:
50-Movies-releasing-in-3-Months,-howmany-films-are-success.?

2016ம் ஆண்டு பிறந்து இன்னும் சில நாட்களில் மூன்று மாதங்கள் முடிவடைய உள்ளன. அதாவது சுமாராக 90 நாட்கள். ஆனால், இந்த 90 நாட்களில் 51 தமிழ்த் திரைப்படங்கள் வந்திருப்பது மகத்தான சாதனை தான். அப்படியென்றால் சராசரியாக 2 நாளைக்கும் குறைவாக 1 திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன.


டிஜிட்டல் சினிமா வந்தாலும் வந்தது, ஏதோ ஒரு வீடியோவைப் படமாக்குவது போல திரைப்படங்களைப் படமாக்குபவர்கள் பெருகிக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்களுக்கு கதை என்றால் என்ன, திரைக்கதை என்றால் என்ன, ஒரு படத்தை எப்படிப் படமாக்க வேண்டும் என்பன போன்ற விஷயங்கள் கூட இல்லாமல் இருக்கிறது. அப்புறம் எப்படி தமிழ் சினிமா வளரும். இதற்கான எந்த ஒரு முறைப்படுத்தலும் இல்லாமல் இருக்கிறது.


தயாரிப்பாளர் சங்கமும், இயக்குனர்கள் சங்கமும் இதற்காக தனியாக ஒரு 'வொர்க்-ஷாப்' நடத்தினால் கூடப் பரவாயில்லை என்றே தோன்றுகிறது. ஒரு பத்து நிமிடக் குறும்படத்தை எடுத்து அதை பத்து பேர் பார்த்துவிட்டால் போதும், தங்களையும் இயக்குனர்கள் என்று சொல்லிக் கொண்டு ஒரு கூட்டம் திரிய ஆரம்பித்துவிடுகிறது. சினிமா என்பது ஒரு அழகியலான ரசனையின் வெளிப்பாடு என்பதை பலர் அறிந்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது.


இந்த மூன்று மாதங்களுக்குள் 50 திரைப்படங்கள் வெளிவந்துவிட்டது என்று சொன்னால் நம்பவா முடிகிறது. இந்த 50-ல் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோர் நடித்த எந்த ஒரு படங்களும் வெளிவரவில்லை. ஒரு வேளை அவர்களது படங்கள் வெளிவந்திருந்து அவற்றிற்கு சரியான வரவேற்பு கிடைக்காமல் போயிருந்தால் ஏற்பட்ட நஷ்டத் தொகை எங்கேயோ போயிருக்கும்.


இந்த 50 படங்களில் முதலில் வசூல் ரீதியாக ஓரளவிற்கு வெற்றி பெற்ற படங்களைப் பார்ப்போம்...


“ரஜினி முருகன், அரண்மனை 2, இறுதிச் சுற்று, விசாரணை, மிருதன், சேதுபதி, பிச்சைக்காரன், காதலும் கடந்து போகும்”, ஆகிய படங்கள் வசூல் ரீதியாக வினியோகஸ்தர்களுக்கு லாபம் கொடுத்த படங்களாக இருந்தன. இவற்றில் 'ரஜினி முருகன், இறுதிச்சுற்று, பிச்சைக்காரன், காதலும் கடந்து போகும்' ஆகிய நான்கு படங்கள் மட்டுமே பிரமாதமான வெற்றியைப் பெற்று படங்களை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் கூட லாபகரமான படங்களாக அமைந்தன.


'அரண்மனை 2, விசாரணை, மிருதன், சேதுபதி, கணிதன், ஆறாது சினம்'ஆகிய நான்கு படங்கள் மிகப் பெரிய லாபத்தைக் கொடுக்கவில்லை என்றாலும் முதலுக்கு மோசமில்லாத அளவில் வசூலைக் கொடுத்துள்ளன. இந்தப் படங்களின் வெற்றியை மிகப் பெரிய வெற்றி என்று குறிப்பிடாமல் சுமாரான வெற்றி என்று தாராளமாகக் குறிப்பிடலாம்.


நேற்று வெளிவந்த 'தோழா' திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் இந்தப் படம் நல்ல வசூலைத் தருமா என்பது இன்னும் இரண்டு நாட்களில் தெரிந்துவிடும்.


இந்த 50 படங்களில் எதிர்பார்த்து ஏமாற்றத்தைக் கொடுத்த படங்களாக “தாரை தப்பட்டை, கதகளி, பெங்களூர் நாட்கள், போக்கிரி ராஜா” ஆகிய படங்களைக் குறிப்பிடலாம். அதிலும் குறிப்பாக பாலாவின் இயக்கத்தில் இளையராஜாவின் 1000மாவது படமாக வெளிவந்த 'தாரை தப்பட்டை' படத்தின் தோல்வி பாலா மீதான இமேஜைக் கொஞ்சம் குறைத்துவிட்டது என்றே சொல்லலாம். 'கதகளி' படத்தின் மூலம் மீண்டும் ஒரு சராசரியான படத்தைக் கொடுத்து ஏமாற்றிவிட்டார்கள். 'பெங்களூர் நாட்கள்' படம் தமிழுக்கு ஏற்ற சரியான ரீமேக் அல்ல, மலையாளத்தில் ஓடும் படங்கள் கண்டிப்பாக தமிழிலும் வெற்றி பெற வாய்ப்பில்லை என்று மீண்டும் புரிய வைத்த படம்.


வசூலையும் குவித்து, வெற்றி பெற்ற படங்களாக அமைந்த 'ரஜினி முருகன், இறுதிச்சுற்று, பிச்சைக்காரன், காதலும் கடந்து போகும்' ஆகிய படங்களில் 'ரஜினிமுருகன்' படம் ரசிகர்களை 'என்டெர்டெயின்' செய்ததில் மட்டுமே சிறந்த படம் என்று சொல்லலாம். மற்றபடி தரத்தின் அடிப்படையில் அது மிகச் சராசரியான 'சி' சென்டர் படம் மட்டுமே. ஆனால், 'இறுதிச் சுற்று, பிச்சைக்காரன், காதலும் கடந்து போகும்' ஆகிய படங்கள் தமிழ் சினிமாவின் தரத்தை ஒரு பட உயர்த்தும் படங்களாக அமைந்தன.


ஹீரோக்கள் : இந்த 50 படங்களில் “சசிகுமார், விஷால், உதயநிதி ஸ்டாலின், பிரசாந்த், ஆர்யா, விமல், சித்தார்த், ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய்” ஆகியோர் தோல்வியைச் சந்தித்த நாயகர்களாக இருக்கிறார்கள்.


ஹீரோயினகள் : நாயகிகளைப் பொறுத்தவரையில் படங்களின் தோல்வி அவர்களைப் பெரிதும் பாதிக்கப் போவதில்லை. அடுத்தடுத்த படங்களில் தோல்விகளை எப்படியாவது சரிக்கட்டி விடுவார்கள். இந்த 50 படங்களில் 'கதகளி, கணிதன்' என இரண்டு படங்களின் நாயகியாக நடித்து 'கேத்தரின் தெரேசா'வும், 'அரண்மனை 2, போக்கிரி ராஜா' ஆகிய படங்களில் நடித்து 'ஹன்சிகா'வும் முன்னணியில் இருக்கிறார்கள். நம்பிக்கைத தரும் புதுமுகமாக 'காதலும் கடந்து போகும்' நாயகி மடோனா செபாஸ்டியன் இருக்கிறார்.


இயக்குநர்கள் : இயக்குனர்களில் 'இறுதிச் சுற்று' படத்தை இயக்கிய சுதா கோக்ரா, 'விசாரணை' படத்தை இயக்கிய வெற்றிமாறன், 'பிச்சைக்காரன்' படத்தை இயக்கிய சசி, 'காதலும் கடந்து போகும்' படத்தை இயக்கிய நலன் குமாரசாமி நம்பிக்கை தரும் இயக்குனர்களாக இருக்கிறார்கள்.


இசையமைப்பாளர்கள் : இசையமைப்பாளர்களில் 'ரஜினி முருகன், மிருதன்' ஆகிய இரண்டு படங்களுக்கு இசையமைத்துள்ள டி.இமான் முன்னணியில் இருக்கிறார். அதிலும் 'ரஜினி முருகன்' பாடல்கள் தொலைக்காட்சிகளில் அடிக்கடி ஒளிபரப்பாகி அவரை முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கின்றன.


51 படங்களில் 8 படங்கள் மட்டுமே வெற்றிகரமான படங்களாகவும், நம்பிக்கைக்குரிய படங்களாகவும் அமைந்திருப்பது பெருமை அல்ல சிறுமைதான். குறைந்தபட்சம் 20 படங்களாவது அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்.


தொழில்நுட்பமும், வசதிகளும் வளர, வளர தரமும் வளரும் என்று ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால், தமிழ்த் திரையுலகத்தில் அது தாழ்ந்து கொண்டுதான் போகிறது.


கொஞ்சம் தரத்திலும் நமது படைப்பாளிகள் கவனம் செலுத்த வேண்டும் என்பதே சினிமாவை நேசிக்கும் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. அதை மீதமுள்ள 9 மாதங்களில் நிறைவேற்றுவார்களா என்று எதிர்பார்ப்போம்......


2016 - இதுவரை வெளிவந்த திரைப்படங்கள்...


ஜனவரி


அழகு குட்டி செல்லம், கரையோரம், பேய்கள் ஜாக்கிரதை, தற்காப்பு, மாலை நேரத்து மயக்கம், திகிலோடு விளையாடு, அரிதாரம், மீனாட்சி காதலன் இளங்கோவன், குரங்கு கைல பூமாலை, கெத்து, தாரை தப்பட்டை, கதகளி, ரஜினி முருகன், மூன்றாம் உலகப் போர், நனையாதே மழையே, நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க, அரண்மனை 2, இறுதிச் சுற்று


பிப்ரவரி


நாளை முதல் குடிக்க மாட்டேன், சேது பூமி, சாகசம், விசாரணை, பெங்களூர் நாட்கள், இரண்டு மனம் வேண்டும், வெண்ணிலாவின் அரங்கேற்றம், வில் அம்பு, ஜில் ஜங் ஜக், அஞ்சல, நவரச திலகம், மிருதன், சேதுபதி, நையப்புடை, கணிதன், ஆறாது சினம்


மார்ச்


பக்கி பயலுக, போக்கிரி ராஜா, சௌகார்பேட்டை, பிச்சைக்காரன், என்னை பிடிச்சிருக்கா, கோடை மழை, நட்பதிகாரம் 79, மாப்ளசிங்கம், காதலும் கடந்து போகும், ஆகம், என்று தணியும், சவாரி, புகழ், அடிடா மேளம், வாலிபராஜா, ஜீரோ, தோழா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in