‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான 'பிரேமம் தந்த மூன்று நாயகிகளில் ஒருவர் தான் அனுபமா பரமேஸ்வரன்.. நிவின்பாலியின் பள்ளிப்பருவத்து காதலியாக அந்தப்படத்தில் நடித்திருந்தார் அனுபமா.. அவரது அடர்ந்த சுருள்முடிக்கென்றே ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. மலையாளத்தில் ஹிட்டானதும் அப்படியே ரைட் டர்ன் எடுத்து தமிழ்சினிமாவுக்குள் வருவார் என பார்த்தால் யூ டர்ன் அடித்து தெலுங்கு பக்கம் போய்விட்டார் அனுபமா.. தற்போது தெலுங்கில் மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன்.
இவர் தெலுங்கு திரையுலகிற்கு அழைக்கப்பட்டதே மலையாளத்தில் 'பிரேமம்' படத்தில் இவர் நடித்த 'மேரி' கேரக்டரை அந்தப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'மஞ்சு'விலும் நடிக்கத்தான். ஆனால் அங்கே போன அதிர்ஷ்டமோ என்னவோ, பிரபல இயக்குனரான திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் 'அ..ஆ', வேணு ஸ்ரீராம் என்பவர் இயக்கத்தில் 'எவடோ ஒக்கடு' உட்பட மொத்தம் மூன்று படங்களிலும் தற்போது நடிக்க இருருகிறார். மலையாளத்தில் கதைகள் கேட்டுக்கொண்டு இருந்தாலும் இன்னும் எதுவும் பைனல் ஸ்டேஜுக்கு வரவில்லை என்பதால் காலம் தாழ்த்தாமல் தெலுங்கில் தேடிவந்த வாய்ப்புகளை ஏற்றுக்கொண்டதாக கூறுகிறார். அனுபமா பரமேஸ்வரன்.