ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் திரை உலகில் பாடகராக அறிமுகமாகி தற்போது இசையமைப்பாளராக ரசிகர்களைக் கவர்ந்து வரும் ஹிப்பாப் தமிழா ஆதி டோலிவுட்டில் தனது திறமையை வெளிப்படுத்த கிளம்பி விட்டார். ஜெயம் ரவி நயன்தாரா நடிப்பில் வெற்றி பெற்ற தனி ஒருவன் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது. தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்கில் டோலிவுட்டின் மெகா பவர் ஸ்டார் நடிகர் ராம் சரண் நாயகனாக நடிக்கின்றார். ஸ்ருதிஹாசன் ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளாராம்.
தமிழில் நடித்த அரவிந்த் சாமியே தெலுங்கிலும் வில்லனாக நடிக்கின்றார். மேலும் தமிழ் இப்படத்திற்கு இசையமைத்த ஹிப்பாப் தமிழா ஆதி தெலுங்கிலும் இப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆதி இசையமைக்கும் முதல் தெலுங்கு திரைப்படம் இதுவாகும். இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் 2016ல் துவங்கவுள்ளன.