Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

நவம்பர் மாதத் திரைப்படங்களின் நிலவரம் என்ன.? - ஓர் பார்வை!

01 டிச, 2015 - 12:03 IST
எழுத்தின் அளவு:
November-movie-release-report

தீபாவளித் திருநாள் வந்த நவம்பர் மாதத்தில் எப்படியும் நிறைய படங்கள் அன்றைய தினத்தையும் சேர்த்து வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நவம்பர் மாதம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட பல படங்கள் பல்வேறு காரணங்களால் தள்ளிப் போய்விட்டன.


கடைசியில் தீபாவளிக்கே இரண்டு முன்னணி நடிகர்கள், ஒரு சிறிய படம் என மூன்றே படங்கள்தான் வெளிவந்தன. அது மட்டுமல்ல நவம்பர் மாதத்தில் வெளிவந்த படங்களைப் பார்த்தால் தீபாவளிக்கு வந்த 'வேதாளம், தூங்காவனம்' ஆகிய இரண்டு படங்களைத் தவிர வேறு எந்தப் பெரிய படங்களும் வெளிவரவில்லை.


நவம்பர் மாதத்தில் வெறும் 14 படங்கள் மட்டுமே வெளிவந்துள்ளன. அந்த 14 படங்களில் 'வேதாளம்' படம் மட்டுமே அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் கொடுத்த படமாக அமைந்தது.


நவம்பர் மாதம் அதிகப் படங்கள் வெளிவராத குறையை இந்த டிசம்பர் மாதம் போக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எப்போதுமே வருடத்தின் கடைசி மாதமான டிசம்பர் மாதம்தான் நிறைய படங்கள் வெளிவரும். ஆனாலும், இப்போதிருக்கும் சூழ்நிலையில் அதுவும் நடக்குமா என்பது சந்தேகம்தான்.


இந்த வருடத்தில் மார்ச் மாதம்தான் அதிகப் படங்கள் வெளிவந்த மாதமாக அமைந்துள்ளது. அந்த மாதத்தில்தான் 31 படங்கள் வெளிவந்துள்ளன. குறைவான படங்கள் வெளிவந்த மாதங்களாக பிப்ரவரி, ஏப்ரல் மாதங்களில் தலா 12 படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றிற்கு அடுத்து நவம்பர் மாதத்தில் அடுத்த குறைந்த வெளியீடாக 14 படங்கள் வெளிவந்துள்ளன.


நவம்பர் 6ம் தேதியன்று “இனிய உளவாக, நெஞ்சுக்குள்ள நீ நிறைஞ்சிருக்க, கிரிங் கிரிங், உயிர்வரை இனித்தாய்” ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. பத்திரிகையாளர்களுக்கான காட்சியைக் கூடப் போடாத இந்தப் படங்களை எத்தனை ரசிகர்கள் பார்த்திருக்கப் போகிறார்கள். சிறு படங்கள் வருவதில் தவறில்லை, ஆனால், அவற்றைய சரியான விதத்தில் எடுத்து மக்களைக் கொண்டு போய்ச் சேர்ப்பதில் கூட அந்தப் படங்களின் இயக்குனர்கள் கூட ஈடுபடுவதில்லை என்பது மிகப் பெரிய வருத்தம்.


நவம்பர் 10ம் தேதி தீபாவளியன்று கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்', அஜித் நடித்த 'வேதாளம்' மற்றும் 'இஞ்சி முறப்பா' ஆகிய படங்கள் வெளிவந்தன. 'வேதாளம்' படத்திற்கான விமர்சனங்கள் படத்திற்கு பாசிட்டிவ்வாக அமையவில்லை என்றாலும், அதை அனைத்தையும் உடைத்து படம் வசூலை அள்ளியது. படத்திற்கு எதிர்மறையாக வந்த விஷயங்களைக் கூடப் பரவவிடாமல், படத்தைப் பற்றிய பாசிட்டிவ் விஷயங்களைப் பரப்பி படத்தை வெற்றி பெறச் செய்துவிட்டார்கள். அதில் அஜித் ரசிகர்களின் பங்குதான் அதிகம். ஒரு சராசரியான மசாலாப் படம் இந்த அளவிற்கு வெற்றி பெற்றது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்தான்.


கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' வழக்கம் போல அவருடைய புத்திசாலித்தனத்தைக் காட்டும் படமாகவே அமைந்தது. கமல்ஹாசன் ரசிகர்களுக்கான படத்தை மீண்டும் எப்போது எடுக்கப் போகிறார் என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவரோ எப்போதோ ஒரு முறைதான் 'பாபநாசம்' போன்ற படத்திலும் நடிக்கிறார். அடுத்த படமாவது ரசிகர்கள் கொண்டாடும் படத்தை அவர் கொடுப்பார் என்றுதான் வினியோகஸ்தர்களும் எதிர்பார்க்கிறார்கள். 'தூங்காவனம்' படத்தை வாங்கியவர்களை தூங்க விடாமல் செய்துதான் உண்மை.


நவம்பர் 20ம் தேதி 'ஆரண்யம், ஒரு நாள் இரவில்' ஆகிய படங்கள் வெளிவந்தன. பல முன்னணி இயக்குனர்களுடன் பல வெற்றிப் படங்களுக்கு எடிட்டிராகப் பணியாற்றிய ஆண்டனி 'ஒரு நாள் இரவில்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். மலையாளத்தில் வெளிவந்து வரவேற்பைப் பெற்ற 'ஷட்டர்' படத்தின் ரீமேக்தான் இந்தப் படம். தமிழில் வெளியான 'ஒரு நாள் இரவில்' படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தாலும் வசூல் ரீதியாக ஏமாற்றத்தைத்தான் கொடுத்துள்ளது. படத்தை மக்களிடம் இன்னும் சரியாகக் கொண்டு போய்ச் சேர்த்திருக்கலாம்.


நவம்பர் 27ம் தேதி “நந்திவரம், உப்பு கருவாடு, 144, இஞ்சி இடுப்பழகி” ஆகிய படங்கள் வெளிவந்தன. 'அழகிய தீயே, மொழி, அபியும் நானும்' ஆகிய சிறந்த படங்களைக் கொடுத்த ராதா மோகன் இயக்கத்தில் ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு வெளிவந்துள்ள படம். 27ம் தேதி வெளியான படங்களில் இந்தப் படம்தான் ஓரளவிற்கு நல்ல படம் என்ற பெயரைப் பெற்றது. இருந்தாலும் ராதா மோகனின் முந்தைய சிறந்த படங்களுடன் ஒப்பிடும் போது இந்தப் படம் ஒன்றுமில்லை என்பதுதான் உண்மை. 144 படம் சுஜாதாவின் வசந்த கால குற்றங்கள் நாவலை மையப்படுத்திய படம். ஆனால், சொதப்பலான திரைக்கதையால் ரசிகர்களை ஈர்க்கவில்லை. 'இஞ்சி இடுப்பழகி' படத்தைத் தயாரிப்பாளர்கள்தான் தமிழ்ப் படம் என்கிறார்கள், ஆனால், ரசிகர்களோ அது ஒரு தெலுங்கு டப்பிங் படம் என்கிறார்கள். அனுஷ்காவைத் தவிர படத்தில் வேற எந்த விஷயங்களும் ரசிகர்களைக் கவரவில்லை.


2015ம் ஆண்டின் நவம்பர் மாதத்தைப் பொறுத்தவரையில் 'வேதாளம்' படம் மட்டுமே மிகப் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. 'உப்பு கருவாடு' படம் மற்ற படங்களைக் காட்டிலும் கொஞ்சம் தரமான படம் என்ற பெயரை வாங்கியுள்ளது. ஆக, நவம்பர் மாதத்தில் வெளிவந்த 14 படங்களில் வெற்றி விகிதம் 7 சதவீதம் மட்டுமே.


2015ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை வெளியான படங்களின் எண்ணிக்கை 196 ஆக உயர்ந்துள்ளது. டிசம்பர் 4ம் தேதி வெளியாகும் படங்களால் இந்த எண்ணிக்கை 200ஐத் தாண்டி விடும். வருடக் கடைசி மாதமாவது வரவேற்பான மாதமாக அமையட்டும்.


நவம்பர் மாதம் வெளியான படங்கள்...


நவம்பர் 6


இனிய உளவாக


கிரிங் கிரிங்


நெஞ்சக்குள்ள நீ நிறைஞ்சிருக்க


உயிர்வரை இனித்தாய்


நவம்பர் 10


இலக்கு


இஞ்சி முறப்பா


தூங்காவனம்


வேதாளம்


நவம்பர் 20


ஆரண்யம்


ஒரு நாள் இரவில்


நவம்பர் 27


நந்திவரம்


144


உப்பு கருவாடு


இஞ்சி இடுப்பழகி


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in