ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபல தெலுங்கு திரை உலக இயக்குனர் சுகுமாரின் திரைக்கதை மற்றும் தயாரிப்பில் இயக்குனர் சூர்ய பிரதாப் இயக்கிய குமாரி 21F திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திரைக்கு வந்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. ராஜ் தருண் மற்றும் ஹீப்பா பட்டேல் நடிப்பில் இளமை துள்ளலுடன் உருவாகியுள்ள இப்படம் குறிப்பாக இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். ரூ15 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் இதுவரை ரூ.14. 5 கோடி வசூல் செய்துள்ளதாக டோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் அமெரிக்காவில் மட்டும் ரூ.1.25 கோடி இப்படம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் இப்படத்தின் தமிழ், ஹிந்தி மற்றும் மலையாள ரீமேக் உரிமைக்கு கடும் போட்டி நிலவுகின்றதாம். மும்பை மற்றும் சென்னையில் உள்ள முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் இப்படத்தின் ரீமேக் உரிமைக்காக பெரும் தொகையை செலவிடவுள்ளதாகக் கூறப்படுகின்றது.