புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
அனுஷ்கா ஆர்யாவுடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தமிழில் இஞ்சி இடுப்பழகி என்ற பெயரிலும் தெலுங்கில் சைஸ் ஜீரோ என்ற பெயரிலும் நவம்பர் 27 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இப்படத்திற்கு பின்னர் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க அனுஷ்கா தயாராகி வருகின்றார். அருந்ததி படத்தின் மூலம் தமிழ் தெலுங்கில் தனக்கென ஒரு நிலையான இடத்தைப் பிடித்த அனுஷ்கா மீண்டும் ஒரு திகில் படத்தில் நடிக்கவுள்ளார். ருத்ராக்ஷா என பெயரிடப்பட்டுள்ள அப்படத்தை இயக்குனர் கிருஷ்ண வம்சி இயக்கவுள்ளார். தெலுங்கு திரை உலகின் பிரபல இயக்குனரனா கிருஷ்ண வம்சி, ராம் சரண் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் இறுதியாக இயக்கிய கோவிந்துடு அண்டரிவடேலே சுமார் வெற்றியே பெற்றது. கிருஷ்ண வம்சி இயக்கவுள்ள ருத்ராக்ஷா படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளாராம். மேலும் இப்படத்தில் ஐந்து ஹீரோக்கள் நடிக்கவுள்ளதாகவும் அவர்கள் முன்னணி நடிகர்களா அல்லது புதுமுகங்களா என விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகின்றது.