Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

தமிழ் சினிமாவும், யு டியூப்பும்...! - ஓர் பார்வை

13 அக், 2015 - 12:59 IST
எழுத்தின் அளவு:
Tamil-Cinema-and-You-Tube

தமிழ் சினிமாவையும், யு டியூபையும் பிரிக்க முடியாது என்று சொல்லுமளவிற்கு பல படங்களுக்கான பரபரப்பையும், இலவச விளம்பரத்தையும் யு டியூப் மூலமே திரையுலகத்தினர் சமீப காலமாக ஏற்படுத்தி வருகின்றனர்.


முன்பெல்லாம் ஒரு படத்தின் வியாபாரத்தை அந்தப் படத்தின் இசை வெளியீட்டின் போதும், பாடல்கள் ஹிட்டாவதை வைத்தும் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால், இப்போது அந்த இடத்தை யு டியூப் பிடித்துக் கொண்டது என்று கூட சொல்லலாம். யு டியூபில் இவ்வளவு பேர் பார்த்திருக்கிறார்கள் என்பதை படத்தின் ரசனைக்கான அளவு கோலாகவும் வைக்க ஆரம்பித்து விட்டார்கள்.


தியேட்டரில் வெளியிடப்பட்ட டிரைலர்கள்


சுமார் 20 வருடங்களுக்கு முன்பு தனியார் சாட்டிலைட் தொலைக்காட்சிகள் வராத போது ஒரு படத்தின் டிரைலர் என்பது தியேட்டர்களில்தான் திரையிடப்படும். ஒரு படம் ஆரம்பிப்பதற்கு முன்பும், அல்லது இடைவேளையின் போதும் அந்த தியேட்டர்களில் அடுத்து திரையிடப்பட உள்ள படத்தின் டிரைலர்களை வெளியிடுவார்கள். அப்போதெல்லாம் அந்த டிரைலரைப் பற்றிய பேச்சு ரசிகர்களிடம் எழும். ஒரு சில பெரிய படங்களுக்கு மட்டுமே அப்படி டிரைலரை உருவாக்கி தியேட்டர்களில் திரையிடுவார்கள்.


யு-டியூப் பயன்பாடு


ஆனால், இப்போது எப்படிப்பட்ட குறைந்த பட்ஜெட் படமாக இருந்தாலும் சரி யு டியூபில் டிரைலர் பதிவேற்றம் என்பது நடந்து விடுகிறது. டிரைலருக்கு முன்பாக டீசர் என்ற ஒன்றையும் வெளியிடுகிறார்கள். அதற்கும் முன்பாக மோஷன் போஸ்டர் என்ற ஒன்றும் இருக்கிறது. ஏன் படத்தின் டைட்டிலைக் கூட அறிவிப்பதில் இன்று யு டியூப் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. அதற்குப் பிறகு படங்களின் பாடல்களின் ஒலி வடிவம், அதன் பிறகு லிரிக் வீடியோ என அழைக்கப்படும் பாடல் வரிகளை புகைப்படங்களுடன் சேர்த்து வெளியிடுவது, பின்னர் பாடலின் முழுமையான வீடியோ, படத்தின் மேக்கிங் வீடியோ, அடுத்து படம் வெளியான பிறகு டெலிடட் காட்சிகள் என படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் என எந்தெந்த வடிவங்களில் எல்லாம் வெளியிட முடியுமோ அப்படி யு டியூபில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார்கள்.


ஆரம்பித்து வைத்த கொலவெறி


யு டியூப் என்பதன் பயன்பாடு பற்றிய ஒரு விழிப்புணர்வு தமிழ்த் திரையுலகத்தினரிடையே 'கொல வெறி' பாடலில் இருந்துதான் ஆரம்பமானது என்று சொல்லலாம். சுமார் 4 வருடங்களுக்கு முன்பு '3' படத்தில் இடம் பெற்ற 'ஒய் திஸ் கொல வெறி' பாடலின் பதிவு வீடியோ ஒன்றை யு டியூபில் பதிவேற்றினார்கள். அது திடீரென வைரலாகப் பரவி மக்களிடையேயும் யு டியூப் பற்றிய வீச்சை அதிகப்படுத்தியது. தமிழ்நாட்டிலிருந்து ஆரம்பமான இந்த வைரல் வீடியோ, மாநிலங்கள் தாண்டி, நாடுகள் தாண்டி, கண்டங்கள் தாண்டி பெரிதும் புகழ் பெற்றது. ஒரு சில நாட்களிலேயே அனிருத்தும், தனுஷும் உலகப் புகழ் பெற்றவர்களாகிவிட்டார்கள்.


அதன் பிறகுதான் மற்றவர்களும் யு டியூபில் அவர்களது டீசர், டிரைலர்கள் ஆகியவற்றை பதிவேற்றி தங்களது படங்களை ரசிகர்களிடம் பேச வைத்தார்கள். அதில் இன்னும் என்னவெல்லாம் வித்தியாசமாக பண்ண முடியும் என யோசித்து புதிது புதிதாக பல விஷயங்களை சேர்த்தார்கள்.


யு டியூப் ஹிட்ஸ்


2011ல் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் டிரைலர்களை இணையதள மீடியாக்களுக்கு நேரடியாக வழங்கி வந்தன. அதை பல்வேறு இணையதள மீடியாக்கள் அவரவர் யு டியூப் தளங்களில் பதிவேற்றி வந்தார்கள். அதனால் எந்த டிரைலர் எவ்வளவு பார்வையாளர்களைப் பெற்றது என்பதை மொத்தமாகக் கணக்கிடுவது சிரமமாக இருந்தது. அதன் பின் ஒரு படத்தின் இசை வெளியீட்டு உரிமையை வாங்கும் நிறுவனங்களே அவர்களது யு டியூப் இணைய தளங்களில் அவர்கள் உரிமை வாங்கிய படங்களின் டீசர், டிரைலர் ஆகியவற்றை பதிவேற்ற ஆரம்பித்தார்கள். அதன் பின்தான் ஒரு படத்தின் டீசர், டிரைலருக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கையை கணக்கிட முடிந்தது. அன்றிலிருந்துதான் இந்த 'யு டியூப் ஹிட்ஸ்' என்பது ரசிகர்களிடையே பேசப்பட்டது.


யூ டியூப் ஹிட்ஸ்க்கு விழா


2012ல் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக யு டியூபை தமிழ்த் திரையுலகம் படிப்படியாக பயன்படுத்த ஆரம்பித்தது. அப்போதிலிருந்தே பல படங்களின் டிரைலர்கள், டீசர்கள், மோஷன் போஸ்டர்கள் என யு டியூபில் பதிவேற்றுவது வரிசை கட்ட ஆரம்பித்தன. ஆனாலும், யு டியூப் ஹிட்ஸ்கள் என்பதை யாரும் பெருமையாகவே, விளம்பரப் பொருளாகவே கருதவில்லை.


அதையும் விளம்பரப்படுத்திய பெருமை 'அஞ்சான்' படத்திற்குத்தான் உண்டு. 'அஞ்சான்' படத்தின் டீசர் இரண்டு நாளில் 10 லட்சம் பேர் பார்த்தார்கள் என்பதற்காக ஒரு விழா எடுத்த போதுதான் யு டியூப் பற்றித் தெரியாதவர்கள், அதில் பதிவேற்றப்படும் டிரைலர்கள் பற்றித் தெரியாதவர்கள் கூட அவற்றைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள். அதன் பிறகுதான் விஜய், அஜித், ரஜினிகாந்த், கமல்ஹாசன்,தனுஷ், சிம்பு என முன்னணி நட்சத்திரங்களின் படங்களைப் பற்றியும் ஒப்பீடு எழ ஆரம்பித்தது.


மோதல்களில் ரசிகர்கள்


இன்று விஜய், அஜித் படங்களுக்கிடையே யு டியூப் இணையதள, சமூக வலைத்தள மோதல்கள் இந்த டிரைலர், டீசர் ஹிட்ஸ்களால் ஏற்பட்டு வருகின்றன. இந்தியாவிலேயே அதிக வசூலையும் மிகப் பெரிய ஏரியா வியாபாரத்தையும் கொண்டுள்ள ஹிந்தி, தெலுங்குப் படங்களின் டீசர், டிரைலர்களுக்குக் கிடைக்கும் பார்வையாளர்களை விட தமிழ்ப் படங்களுக்கு யு டியூபில் கிடைக்கும் ஹிட்ஸ், சாதனை மிக மிக அதிகமாக உள்ளது.


'கான்' நடிகர்களை பின்னுக்கு தள்ளிய விஜய்-அஜித்


இன்று விஜய் படங்களும், அஜித் படங்களும் ஹிந்தி 'கான்' நடிகர்களின் படங்களை விட ஹிட்ஸ்களிலும், லைக்குகளிலும் குறுகிய நாட்களிலேயே சாதனை படைத்து வருகிறது. இந்த சாதனை இனி வரும் காலங்களில் அதிகரிக்குமே தவிர குறைவதற்கு வாய்ப்பில்லை. அந்த அளவிற்கு நமது ரசிகர்களின் இணையப் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. யு டியூப்பே மிரளும் அளவிற்கு தமிழ் சினிமாவில் அதன் பயன்பாடு பரவலாகிவிட்டது.


யு டியூப் ஹிட்ஸ் எல்லாம் ஹிட்டாகாது


என்ன தான் யூ-டியூப் மூலம் டிரைலர்களுக்கு அதிக பார்வையாளர்கள் மூலம் ஹிட்ஸ்கள் கிடைத்தாலும் அந்தப்படங்கள் தியேட்டர்களில் வசூலிக்க குவிக்க முடியும் என்று சொல்ல முடியாது. அதற்கு உதாரணங்களாக கடல், அஞ்சான், லிங்க, புலி போன்ற சில படங்களையும் குறிப்பிடலாம்.


ஒரு படத்தின் வெற்றிக்கு அதன் கதையும், தொய்வில்லாத திரைக்கதையும் நட்சரத்திரங்களின் திறமையான நடிப்பு மட்டுமே அந்தப்படம் வெற்றி பெற உதவும். இதுதான் என்றும் நிரந்தரம்!


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in